தமிழில் கணினி செய்திகள்

யூடுப் வீடியோக்களை கன்வெர்ட் செய்ய இரண்டு தளங்கள்

♠ Posted by Kumaresan Rajendran in ,,,
யூடுப் தளத்தின் உதவியுடன் அனைத்து விதமான வீடியோக்களையும் காண முடியும். இந்த தளத்தின் உரிமை தற்போது கூகுள் வசம் உள்ளது. கூகுள் கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவருமே இந்த யூடுப் தளத்த்தில் வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடியும். மேலும் கருத்துரை மற்றும் விருப்பம் போன்றவைகளையும் குறிப்பிட்ட விடியோக்களுக்கு தெரிவிக்க முடியும். மேலும் ஒரு சில வீடியோக்களை காண வேண்டுமெனில் பயனர் கணக்கு கண்டிப்பாக அவசியம். ஒரு சில வீடியோக்களை பயனர் கணக்கு இல்லாமல் காணவோ தரவிறக்கம் செய்யவோ முடியாது. இதுபோன்ற சூழ்நிலையில் வீடியோக்களை தரவிறக்கம் செய்யவும். கன்வெர்ட் செய்யவும் இணையத்தில் ஒருசில தளங்கள் உதவி செய்கிறன.

தளத்திற்கான சுட்டி 1 

தளத்திற்கான சுட்டி 2




சுட்டியில் குறிபிட்ட தளத்திற்கு சென்று குறிபிட்ட வீடியோவின் முகவரியினை (URL) உள்ளிட்டு பின் வீடியோவினை வேண்டிய பார்மெட்டில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். நேரிடையாக வீடியோவினை பதிவேற்றம் செய்தும் கன்வெர்ட் செய்து கொள்ள முடியும்.


பதிவிறக்கம் செய்யும் போது QR கோடும் பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பில் இருக்கும் அதனை பயன்படுத்தியும் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். யூடுப் வீடியோக்களை வேண்டிய பார்மெட்டில் கன்வெர்ட் செய்து கொள்ள இந்த தளங்கள் உதவி செய்கிறன.

ஆன்லைனில் QR - கோடினை உருவாக்க

♠ Posted by Kumaresan Rajendran in ,
QR கோடு என்பது (Quick Response Code) , பார் கோடின் அடுத்த தலைமுறை என்றுதான் கூற வேண்டும். இந்த கோடானது மேட்ரிக்ஸ் பார்மெட்டில் உருவாக்கப்படுகிறது. இந்த QR கோட்டினை மேட்ரிக்ஸ் பார்கோடு என்றும் டு டைமன்ஸ்னல் பார்கோடு என்றும் கூறுவர். இந்த QR கோடு பெரும்பாலும் இணைய முகவரி, முகவரி, போன் நம்பர் மற்றும் குறுஞ்செய்திகள் போன்றவற்றை இந்த QR கோட்டில் செய்திகளை சுருக்கமாக உள்ளடத்து வைத்து பின் இதனை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

QR கோடு ஸ்கேனர்கள் பெரும்பாலும் தற்போது ஸ்மார்ட் போன்களில் பரவலாக காணப்படுகிறது. விண்டோஸ் இயங்குதளத்திற்கும் QR கோடு ஸ்கேனர்கள் உள்ளது.

நம்முடைய வலைபூ, வலைமனை, முகவரி, தொலைபேசி எண் மற்றும் கூப்பன்களுக்கு எளிதாக QR கோடினை உருவாக்க முடியும். இதனை இணையத்தின் உதவியுடன் ஆன்லைனிலேயே உருவாக்க முடியும். இதற்கு உதவி செய்யும் முதன்மையான தளங்கள்.

  1. QR Code Generator
  2. QR Stuff.com
  3. qrcode generator.de
  4. GOQR.ME
மேலே குறிப்பிட்ட தளங்களுக்கு சென்று எளிதாக QR கோடினை உருவாக்க முடியும்.

இணையத்தின் உதவியுடன் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, எதற்கான QR கோடு வேண்டுமோ அதனை தேர்வு செய்து பின் குறிப்பிட்ட தகவலினை உள்ளிடவும். பின் QR கோடினை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.