தமிழில் கணினி செய்திகள்

கடவுச்சொல்லுடன் கூடிய மின்னஞ்சல்களை அனுப்ப - LOCKBIN

♠ Posted by Kumaresan Rajendran in ,
ஈமெயில் அனுப்ப பல்வேறு தளங்கள் உதவிசெய்கிறன, அதில் மிகவும் பிரபலமான தளங்கள் யாஹு, ஜிமெயில், ஹாட்மெயில் போன்றவை ஆகும். இவற்றின் மூலம் அனுப்பபடும் மின்னஞ்சல்களை நாம் சாதாரணமாக ஒப்பன் செய்து பார்க்க முடியும். இதற்கு உரிய பயனர் கணக்கு மற்றும் கடவுச்சொல் இருந்தால் போதுமானது. நாம் வேர்ட், பிடிஎப் மற்றும் ஒரு சில கோப்புகளை காப்பதற்காக கடவுச்சொல்லுடன் உருவாக்குவோம். இவ்வாறு உருவாக்கும் கோப்புகளை கடவுச்சொல் இருந்தால் மட்டுமே ஒப்பன் செய்ய முடியும். இதனால் அவற்றில் உள்ள தகவல்கள் திருடப்பட வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஆனால் கடவுச்சொல் இல்லாமல் உள்ள கோப்புகளை மிகவும் எளிமையாக மற்றவர்களால் பார்க்கவோ அல்லது திருடிவிடவோ முடியும். இதுபோல் நாம் அனுப்பும் மின்னஞ்சல் ஒவ்வொன்றுக்கும் கடவுச்சொல் இட்டால் எவ்வாறு இருக்கும்.இதற்கு LOCKBIN என்னும் தளம் உதவி செய்கிறது.

தளத்திற்கான சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு செல்லவும். மேலே கொடுக்கப்பட்டுள்ள திரையமைப்பு போல் ஒரு பக்கம் தோன்றும் அதில் உங்களுடைய பெயர், உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி, கடவுச்சொல் போன்றவற்றை உள்ளிடவும். பின் நீங்கள் குறிப்பிட வேண்டிய செய்தியை தட்டச்சு செய்து பின் வேண்டிய கோப்பினை பதிவேற்றம் செய்து, மேலும் CAPTCHA கோடினை உள்ளிட்டு இறுதியாக ஒப்பந்த செக்பாக்சில் டிக் செய்து SUBMIT பொத்தானை அழுத்தவும். உங்களுடைய மின்னஞ்சல் நீங்கள் குறிப்பிட்ட முகவரிக்கு சென்றுவிடும்.


பின் அந்த மின்னஞ்சலை ஒப்பன் செய்யும் போது மேலே குறிப்பிட்டுள்ள படம் போல் தோன்றும். அந்த கடவுச்சொல்லை உள்ளிடுவதன் மூலமாக உங்களுடைய நண்பர்கள் அந்த மின்னஞ்சலை பெற்றுக்கொள்வார்கள். இதன் மூலம் மின்னஞ்சலையும் கடவுச்சொல் கொண்டு மூட முடியும்.

முகநூல் (Facebook) மூலமாக குறுந்தகவல்களை அனுப்ப

♠ Posted by Kumaresan Rajendran in
தற்போது குறுஞ்செய்தி அனுப்பும் அளவானது மிகவும் குறைவாகவே உள்ளது, இதற்கு காரணம் தினசரி 100 குறுஞ்செய்தி வீதமே அனுப்ப முடியும். ஒரு சில நிறுவனங்களில் மட்டுமே 200 குறுஞ்செய்திகள் அனுப்ப முடியும். இவ்வாறு இருக்கையில் இணையத்தில் இருந்து இருந்து குறுஞ்செய்தி அனுப்ப பல்வேறு தளங்கள் உதவி செய்கிறன.  உதாரணமாக way2sms, 160by2 போன்ற பல்வேறு தளங்கள் உள்ளன. இவற்றுக்கும் தற்போது பல வரைமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இரவு 9மணி முதல் மறுநாள் பகல் 9மணி வரை மொத்தமாக குறுஞ்செய்தி அனுப்ப முடியாது. இதுபோல இணையம் மூலமாக கைதொலைபேசிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்ப நாம் எதாவது ஒரு தளத்தினை நாட வேண்டும். இதற்கு பதிலாக முகநூல் தளத்திலிருந்தே குறுஞ்செய்தி அனுப்ப முடியும். இதற்கு Chatsms என்னும் அப்ளிகேஷன் உதவுகிறது.

மூகநூலுக்கான ChatSMS நீட்சியை தரவிறக்க சுட்டி


உங்களுடைய முகநூல் கணக்கில் உள்நுழைந்து கொள்ளவும். பின் சுட்டியில் கொடுக்கப்பட்ட அப்ளிகேஷனை உங்கள் முகநூல் கணக்கில் இணைத்துக்கொள்ளவும். மேலே கொடுக்கப்பட்டுள்ள படம் போல் தோன்று. Allow பொத்தானை அழுத்தி இணைத்துக்கொள்ளவும். 


பின் Apps என்னும் இணைப்பில் உள்ள ChatSMS என்னும் அப்ள்கேஷனை ஒப்பன் செய்யவும்.


பின் எந்த நாடு என்பதை தேர்வு செய்து, பின் மொபைல் என்னினை உள்ளிட்டு, குறுஞ்செய்தியை டைப் செய்து Send SMS என்னும் பொத்தானை அழுத்தி குறுஞ்செய்தியை அனுப்பி கொள்ளமுடியும்.

ஜிமெயிலின் அரட்டை பெட்டியினை நீக்க

♠ Posted by Kumaresan Rajendran in
ஈமெயில் சேவையில் முன்னனியில் இருக்கும் நிறுவனம் கூகுள் ஆகும். இதனுடைய ஈமெயில் சேவை ஜிமெயில் மூலமாக இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் பல்வேறு வசதிகளை நாம் பெறமுடியும் உதாரணமாக நீங்கள் ஜிமெயிலில் இருந்தவாறே அரட்டை அடிப்பது, கூகுள் டாக்ஸ்யை பார்வையிடுவது மேலும் குறுந்தகவல் அனுப்புவது போன்ற வசதிகளையும் நீங்கள் பெற முடியும். இதில் அரட்டை வசதி மூலம் உங்கள் நண்பர்களுடன் அரட்டை அடிக்க முடியும். இதற்கென ஜிடால்க் என்னும் தூதன் (Messenger) உள்ளது. ஜிமெயிலில் இருக்கும் போது நாம் முக்கியமான அலுவல்களை செய்து கொண்டு இருப்போம் அப்போது இந்த அரட்டை வசதியின் மூலமாக இணைய நண்பர்கள் உங்களை தொந்தரவு செய்யலாம் இது நம்மை எரிச்சலூட்டும் இதனை தடுக்க அரட்டை பெட்டியினை தற்காலிகமாக மூடி வைத்துக்கொள்ள முடியும். இதற்கு ஜிமெயிலிலேயே வசதி உள்ளது.

முதலில் உங்களுடைய ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொள்ளவும் பின்        Mail Setting செல்லவும். 


அதில் Chat என்னும் டேப்பினை தேர்வு செய்யவும். பின் Chat off என்னும் ரேடியோ பொத்தானை தேர்வு செய்து Save Change என்னும் பொத்தானை அழுத்தி சேமித்துக்கொள்ளவும். 


 தற்போது உங்களுடைய ஜிமெயில் கணக்கு தானாகவே மறுதொடக்கம் ஆகும். தற்போது உங்களுடைய ஜிமெயிலில் அரட்டை பெட்டி மூடப்பட்டு இருக்கும். மீண்டும் இந்த அரட்டை பெட்டி தேவையெனில் Chat On என்னும் ரேடியோ பொத்தானை தேர்வு செய்து உங்கள் கணக்கை சேமித்துக்கொள்ளவும்.


வன்தட்டினை முழுமையாக பேக்அப் செய்ய - Paragon Backup & Recovery 2012

♠ Posted by Kumaresan Rajendran in ,
இயங்கி கொண்டிருக்கும் கணினியில் மீண்டும் இயங்குதளத்தை நிறுவும் போதோ அல்லது கணினி எதாவது கோளாறு செய்தாளோ வன்தட்டில் உள்ள தகவல்களை நாம் பேக்அப் செய்வோம். அவ்வாறு பேக்அப் செய்ய விண்டோஸ் இயங்குதளத்திலேயே வழி உள்ளது. ஆனால் விண்டோஸ் மூலமாக பேக்அப் செய்து மீண்டும் நிறுவும் போது சில நேரங்களில் பிழைச்செய்தி ஏற்படுகிறது. இதுபோன்ற பிழைகள் ஏதும் இல்லாமல் இலவகுவாக தகவல்களை பேக்அப் செய்து மீண்டும் நிறுவ  Paragon Backup & Recovery 2012 என்ற மென்பொருள் உதவி செய்கிறது. இந்த மென்பொருள் தற்போது இலவசமாக கிடைக்கிறது. வன்தட்டில் இருக்கும் தகவல்களை அப்படியே வேண்டுமெனிலும் பேக்அப் செய்யலாம் இல்லையெனில் வேண்டிய பகுதியை மட்டும் தேர்வு செய்து பேக்அப் செய்து கொள்ள முடியும்.


இணையத்தில் இருந்து மென்பொருளை பதிவிறக்கி கணினியில் நிறுவ தொடங்கவும், product key மற்றும் serial number கேடும். உடனே Registration என்னும் பொத்தானை அழுத்தவும். இந்த மென்பொருளை நிறுவும் போது உங்கள் கணினியில் இணைய இணைப்பு இருக்க வேண்டும். அடுத்ததாக தோன்றும் விண்டோவில் உங்களுடைய சுய தகவல்களை உள்ளிடவும். இதில் முக்கியமானது உங்களுடைய மின்னஞ்சல் முகவரி ஆகும். அதை கவனமாக உள்ளிடவும்.


செக்பாக்சில் டிக் செய்துவிட்டு SUBMIT பொத்தானை அழுத்தி உறுதி செய்து கொள்ளவும். சில விநாடிகளில் நீங்கள் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு  product key மற்றும் serial number அனுப்பபடும். அதனை குறித்து வைத்துக்கொண்டு மென்பொருளை முழுமையாக நிறுவவும்.



பின் ஒருமுறை கணினியை மறுதொடக்கம் செய்துவிட்டு, Paragon Backup & Recovery 2012 மென்பொருளை ஒப்பன் செய்யவும். தோன்றும் விண்டோவில்  Backup & Recovery என்னும் டேப்பினை தேர்வு செய்து, Backup பட்டியை சொடுகவும். 



பின் உங்கள் விருப்பபடி குறிப்பிட்ட ட்ரைவினை தேர்வு செய்தும் பேக்அப் எடுக்கலாம் அல்லது முழு வன்தட்டினையும் பேக்அப் செய்துகொள்ளவும் முடியும். அடுத்து நீங்கள் பேக்அப் செய்யும் தகவல்களை எங்கு சேமிக்க வேண்டும் என்பதை தெரிவு செய்து விட்டு Next பொத்தானை அழுத்தவும். பேக்அப் செய்யும் தகவலுடைய அளவிற்கேற்ப பேக்அப் செய்ய நேரம் எடுத்துக்கொள்ளும். வன்தட்டிலேயே வேண்டுமெனில் பேக்அப் செய்துகொள்ள்லாம் இல்லையெனில் சீடி/டிவிடி க்களிலும் பதிவேற்றம் செய்து கொள்ள முடியும்.  அதேபோல் பேக்அப் செய்த தகவல்களை மீண்டும் Restore பட்டியினை அழுத்தி மீண்டும் நிறுவிக்கொள்ள முடியும். இந்த மென்பொருளை பயன்படுத்தும் போது தகவல் இழப்பு ஏதும் ஏற்படாது. இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும்.