தமிழில் கணினி செய்திகள்

விண்டோஸ்-7ல் அனைத்துவிதமான பைல்களையும் பார்க்க அருமையான மென்பொருள்-Universal File Viewer

♠ Posted by Kumaresan Rajendran in ,
நாம் பொதுவாக எதாவது அப்ளிகேஷனில் உருவாக்கிய டாக்குமெண்டினை அந்த மென்பொருளின் உதவியுடன் மட்டுமே பார்க்க முடியும். அப்படி இல்லாமல் நாம் உருவாக்கிய டாக்குமெண்டினை அந்த மென்பொருட்களின் உதவி இல்லாமல் பார்க்க முடியும் இதற்கு என்று உள்ளதுதான் Universal FilevViewer என்னும் மென்பொருள் ஆகும். இது ஒரு Freeware மென்பொருள் ஆகும். நாம் மைக்ரோசாப்ட் ஆப்பிஸில் உருவாக்கிய மெபொருளை பார்க்க வேண்டுமெனில் அதற்கு மைக்ரோசாப்ட் ஆப்பிஸ் மென்பொருள் நம்து கணினியில் நிறுவியிருக்க வேண்டும், வீடியோவினை பார்க்க வேண்டுமெனில் வீடியோ பிளேயர் வேண்டும். MP3 பாடல்களை கேட்க வேண்டுமெனில் ஒரு ஆடியோ பிளேயர் வேண்டும். படங்களை பார்க்க போட்டோ Viewer வேண்டும் அப்படி இல்லாமல் அனைத்து வசதிகளையும் நாம் ஒரே மென்பொருளின் உதவியுடன் பார்க்க முடியும்.


இந்த மென்பொருளின் உதவியுடன் நான் போட்டோவினை ஒப்பன் செய்து, பார்க்க முடிகிறது. அதே போல வீடியோ மற்றும் ஆடியோவினை இந்த மென்பொருளின் உதவியுடன் பார்க்க முடியும்.


மென்பொருளை தரவிறக்க சுட்டி

இந்த மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொண்ட பிறகு நீங்கள் மற்ற மென்பொருட்களின் உதவி இல்லாமல் View (பார்க்க) முடியும்.

இமேஜ்களை ஐகானாக மாற்றம் செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in ,
நாம் பார்க்கும் படங்களை நமக்கு விருப்பமான ஒன்றுக்கு சூட்ட  நினைப்போம், மேலும் விண்டோஸில் பல்வேறு வித ஐகான்கள் உள்ளன. விண்டோஸ் ஐகான்கள் அனைதும் (.ICO) என்ற பைல் பார்மெட்டில் மட்டுமே இருக்கும். நமக்கு ஒரு படத்தினை பிடித்துவிடும் அதனை நமது கணினியில் ( My Computer,
My Document, Recycle Bin ) போன்ற எதாவது ஒன்றுக்கு சூட்ட நினைப்போம் ஆனால் அந்த பைல் பார்மெட்டானது jpg, gif போன்ற பைல் பார்மெட்டுகளில் இருக்கும் இதனை நமது விருப்பபடி (.ICO) பார்மெட்டாக மாற்ற முடியும். இதற்கு Imagicon என்னும் மென்பொருள் உதவுகிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளின் உதவியுடன் படங்களை .ICO  பைலாக மாற்றிக்கொள்ள முடியும். முதலில் நாம் .ICO  பைலாக மாற்ற .BMP பைலாக இருக்க வேண்டும். இதற்கு நம்முடைய படத்தை Paint-ல் ஒப்பன் செய்து Save as செய்யும் போது .bmp என்ற பைல் பார்மெட்டி Save செய்து கொள்ள வேண்டும்.

யாகூவினை உங்கள் விருப்பம் போல மாற்றியமைக்க

♠ Posted by Kumaresan Rajendran in
யாகூவின் ஈ-மெயில் சேவை இன்றும் அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.என்பது குறிப்பிடதக்கது. ஈ-மெயில் சேவையில் இன்றுவரை உலகலவில் யாகூ தான் முதலிடம்.யாகூ தளத்தை அறியாத இணைய பயனாளர்கள் இருக்க முடியாது, அந்த அளவுக்கு சிறப்பு வாய்ந்த தளம், இந்த தளத்தில் பல்வேறு விதமான வசதிகள் உள்ளன, Cricket, Finance,Mail போன்று பல்வேறு விதமான சேவைகளை யாகூ வழங்குகிறது, இந்த தளத்தில் வரும் சேவைகளின் பட்டியலை நமது விருப்பம் போல மாற்றிக்கொள்ள முடியும். இதற்கு உங்களுக்கு ஒரு யாகூ கணக்கு ஒன்று தேவை. உங்களின் யாகூ அக்கவுண்டில் நுழைந்துகொண்டு Yahoo Sites என்பதற்கு எதிரே உள்ள Edit என்பதை தேர்வு செய்யவும்.



இதில் உங்களுக்கு எது வேண்டுமோ அதனை தேர்வு செய்து கொண்டு I,m Done என்பதை தேர்வு செய்ய வேண்டும் அவ்வளவு தான் உங்களின் விருப்பபடி யாகூ அமையும்.

Autorun-யை முழுவதுமாக டிசேபிள் செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in ,
கணினியில்  தகவல்களை பரிமாறிக்கொள்ள பெரும்பாலும் பயன்படுத்துவது  பென் டிரைவ், சிடி/டிவிடி ,Flash ட்ரைவ் மற்றும் பல சாதனங்களை பயன்படுத்தி வருவோம். இதனை நமது கணினியில் இட்ட பிறகு தானாகவே Auto run ஆகும். இதனை நமது விருப்பப்படி நிறுத்திக்கொள்ள முடியும். இதனை நமது ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தின் உதவியோடு செய்ய முடியும். ஆனால் ஒவ்வொன்றுக்கும் தனியே செய்ய வேண்டும் அப்படி இல்லாமல் ஒரே மென்பொருள் மூலமாக அனைவித ட்ரைவ்களையும் ஆட்டோரன் ஆவதை டிசேபிள் செய்ய முடியும்.

தரவிறக்க சுட்டி: Download


மென்பொருளை தரவிறக்கி நிறுவிக்கொள்ளவும். பின் அதன் மீது வலது கிளிக் செய்து தோன்றும் விண்டோவில் Run as administrator என்பதை தெரிவு செய்து ஒப்பன் செய்யவும். பின் எந்தெந்த ட்ரைவுகளை டிசேபிள் செய்ய நினைக்கிறீர்களோ அதனை தெரிவு ஒகே செய்து விடவும். அவ்வளவு தான் இனி நீங்கள் குறிப்பிட்ட ட்ரைவ் மட்டும் இனி Auto run ஆகாது.

இந்த மென்பொருளானது Windows 2000, Windows XP, Windows Server 2003, Windows Vista, Windows 7, and Windows Server 2008 operating systems போன்ற இயங்குதளத்தில் வேலை செய்ய கூடியது ஆகும்.

விண்டோஸ்-7ல் ட்ரைவ் ஐகானை மாற்றுவது எப்படி?

♠ Posted by Kumaresan Rajendran in ,,
விண்டோஸ்-7ல் பல்வேறு விதமான ட்ரிக்குகளை செய்து பார்த்திருப்போம். நாம் இயல்பாகவே My computer, My Documents , Network Place ,Rrecycle bin போன்ற ஐகான்களை மாற்றம் செய்ய முடியும். ஆனால் ட்ரைவ் ஐகானை மட்டும் மாற்றம் செய்ய முடியாது, இந்த ஐகானையும் மாற்றம் செய்ய ஒரு மென்பொருள் உதவுகிறது. இதற்கு 7DriveIconsChange என்னும் மென்பொருள் உதவுகிறது.

மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கு சொடுகவும்: Download


இந்த மென்பொருளானது .rar பைலாக இருக்கும். இதனை Extract  செய்து கொள்ளவும். பின் தோன்றும் .EXE பைலின் மீது வலது கிளிக் செய்து தோன்றும் Pop-up விண்டோவில் Run as administrator என்பதை தேர்வு செய்து, அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Drive என்பதில் எந்த ட்ரைவின் ஐகானை மாற்ற நினைக்கிறீர்களோ அதனை குறிப்பிடவும் உதாரணமாக C என்பதை குறிப்பிடவும். பின் 7DriveIconsChanger என்பதில் C ட்ரைவினை தேர்ந்தெடுத்து கொள்ளவும். பின் Browse Icon என்பதில் .ico பைலை தேர்வு செய்யவும். பின் Apply Icon என்பதை தேர்வு செய்யவும். இப்போது நீங்கள் குறிப்பிட்ட ஐகான் தெரிவு செய்யப்பட்டிருக்கும்.


இதேபோல நீங்கள் DVD ட்ரைவிற்கும் ஐகானை மாற்றிக்கொள்ள முடியும். ஐகான்களை டவுண்லோட் செய்ய இங்கு சொடுகவும்.

விண்டோஸ்7-ல் Auto Sleep mode னை Disable செய்வது எவ்வாறு?

♠ Posted by Kumaresan Rajendran in ,,
கணினியை சிறிது நேரம் பயன்படுத்தாமல் இருந்தால் தானாகவே கணினியானது Sleep mode க்கு சென்று விடும். இதனை நாம் விருப்பபடி மாற்றி அமைத்துக்கொள்ள முடியும். பெரிய கோப்புகளை இணையத்தில் இருந்து நாம் பதிவிறக்க அதிகம் நேரம் ஆகும். அது போன்ற சமயங்களில் நாம் மானிட்டரை ஆப் செய்துவிட்டு சென்றுவிடுவோம். வந்து பார்த்தால் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே டவுண்லோட் ஆகி இருக்கும் காரணம் என்னவென்றால் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு கணிப்பொறியானது Sleep mode ற்கு சென்று விடும். இதனால் இதுபோன்ற பல பிரச்சினைகள் எழும். இதனை நம்து விருப்பபடி மாற்றிக்கொள்ள முடியும்.

இதனை மாற்ற முதலில் ஒப்பன் Control panel யை செய்ய வேண்டும். பின் அதில் View By என்பதில் Large Icons என்பதை தேர்வு செய்யவும்.


அதில் Power options என்பதை தேர்வு செய்யவும். அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Balanced என்ற ரேடியோ பொத்தான் தேர்வு செய்யப்பட்டிருக்கும் அதில் Change plan settings என்பதை கிளிக் செய்யவும்.



அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Put the computer to sleep என்ற தேர்வினை தேர்வு செய்து உங்களுக்கு விருப்பமான நேர அளவினை தேர்வு செய்துகொண்டு சேவ் செய்து கொள்ள வேண்டும். அதில் Never என்ற ஆப்ஷன் தேர்வு செய்தால் முழுவதுமாக கணிப்பொறி அனையாமல் இருக்கும்.

சபாரி உலவியில் SAVE ஆகும் இடத்தை மாற்ற

♠ Posted by Kumaresan Rajendran in ,
ஆப்பிள் நிறுவனத்தின் உலவி சபாரியாகும். சபாரி உலவி பெரும்மளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது, இந்த உலவியை பயன்படுத்தி டவுண்லோட் செய்யும்போது Save ஆகும் பைல்கள் மற்றும் டாக்குமெண்ட்கள் Downloads என்னும் போல்டரில் Save ஆகும். இதனை நமது விருப்பபடி மாற்றி அமைத்துக்கொள்ள முடியும்.


அடுத்ததாக Setting பட்டனை அழுத்தி தோன்றும் விண்டோவில் Preferences என்பதை தேர்வு செய்யவும் அல்லது ctrl+, கீகளை ஒருசேர அழுத்தவும்.


தோன்றும் விண்டோவில் Save Download files to என்ற இடத்தில் Downloads என்பது இருப்பியல்பாக இருக்கும். அதனை தேர்வு செய்து Other என்பதை தேர்வு செய்து நீங்கள் எந்த இடத்தில் பைல்களை சேவ் செய்ய நினைக்கிறீர்களோ அந்த இடத்தினை தேர்வு செய்யவும்.


அவ்வளவு தான் இனி நீங்கள் தேர்வு செய்த இடத்திலேயே அனைத்துவிதமான பைல்களும் Save ஆகும்.


  • மொசில்லா பயர்பாக்ஸ் உலவியில் SAVE ஆகும் இடத்தை மாற்ற இங்கு கிளிக் செய்யவும்.

ஆன்லைனிலேயே இமேஜ்களை வேர்ட்,பிடிஎப் மற்றும் டெக்ஸ்ட் பைல்களாக கன்வெர்ட் செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in ,
ஆன்லைனில் பல்வேறு விதமான கன்வெர்ட்களை செய்திருப்போம், வேர்டினை பிடிஎப்பாகவும், பிடிஎப்பினை டாக்குமெண்டுகளாகவும் பல்வேறு விதமான கன்வெர்ட்களை செய்திருப்போம். ஆன்லைனில் பல்வேறு விதமான சேவைகள் கிடைக்கும் உதாரணமாக ஈ-மெயில் தொடங்கி ஆன்லைன் ரிசர்வேசன் வரை பல்வேறு விதமான சேவைகளை ஆன்லைன் மூலமாக பெற்று வருகிறோம். வீடியோ கன்வெர்சன், ஆடியோ கன்வெர்சன் மற்றும் டாக்குமெண்ட் கன்வெர்சன் என பல்வேறு விதமான கன்வெர்ட்களை ஆன்லைன் மூலமாக பெற்று வருகிறோம். அதே போல ஆன்லைன் மூலமாக இமேஜ்களை வேர்ட்,பிடிஎப் மற்றும் டெக்ஸ்ட் பைல்களாக கன்வெர்ட் செய்ய முடியும். இதற்கு OCRonline என்னும் தளம் உதவுகிறது.




தளத்தின் முகவரி: OCROnline

இந்ததளத்திற்கு சென்று உங்களுக்கென ஒரு கணக்கை தொடங்கி கொண்டு இமேஜ்களை கன்வெர்ட் செய்துகொள்ள முடியும். ஒரு சிலர் தங்களுடைய டாக்குமெண்ட்களை (Resume. Certificate) இமேஜ்களாக வைத்திருப்பார்கள் அவற்றில் ஏதேனும் ஒரு சில மாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும், அப்போது நாம் முழுவதுமாக டாக்குமெண்ட்களை தயார் செய்ய வேண்டி இருக்கும். அவ்வாறு இல்லாமல் அதனை வேர்ட் மற்றும் Richடாக்குமெண்ட்களாக கன்வெர்ட் செய்து கொண்டு உங்கள் விருப்பபடி மாற்றிக்கொள்ள முடியும்.

சட்ட ரீதியான இலவச MacX வீடியோ கன்வெர்டர்

♠ Posted by Kumaresan Rajendran in ,
சந்தையில் புதிதுபுதிதாய் வீடியோ கன்வெர்டர் மென்பொருள்கள் வந்துகொண்டிருந்தாலும் அவை அனைத்தும் சரியானவையாக இருக்காது, மேலும் சில மென்பொருட்கள் சேர்வேராகவே உள்ளது, இலவசமாக கிடைக்கும் மென்பொருட்கள் மூலம் நம்முடைய கணினியில் உள்ள தகவல்களை இழக்கவும் நேரிடும். இவையனைத்தும் இல்லாமல் சட்டரீதியான இலவச வீடியோ  MacX வீடியோகன்வெர்டரை வரும் நவம்பர்-15 தேதிவரை மட்டுமே இலவசமாக டவுண்லோட் செய்து கொள்ள முடியும்.



  • விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்திற்கு டவுண்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதற்க்கான லைசன்ஸ் கீ BO-UMUJUMYT-FBOBXO  இதுவாகும்.
  • மேக் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்திற்கு டவுண்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதற்க்கான லைசன்ஸ் கீ AY-DSJGNKY-6E7E777  இதுவாகும்.
இந்த மென்பொருள் மூலமாக சதாரண வீடியோ பார்மெட்டில் இருந்து ஹை-டெக் வீடியோ பார்மெட்டாக மாற்றிக்கொள்ள முடியும். மொபைல்களுக்கு ஏற்றவாறும் வீடியோ பார்மெட்டுக்களை மாற்றிக்கொள்ள முடியும். Youtube வீடியோக்களையும் கூட நீங்கள் விருப்பபட்ட வீடியோ பார்மெட்டுகளாக மாற்றிக்கொள்ள முடியும். Youtube வீடியோவின் URL-யை உள்ளிட்டு வீடியோவினை டவுண்லோட் செய்து கொள்ள முடியும்.


 

PDF/DOC/HTML/PPT/GIF/JPG பைல்களை கன்வெர்ட் செய்ய - எளிய மென்பொருள்

♠ Posted by Kumaresan Rajendran in ,
PDF/DOC/HTML/PPT/GIF/JPG பார்மெட்டுகளை கன்வெர்ட் செய்ய தனித்தனி மென்பொருளை நாடிச்செல்ல வேண்டும். நாம் ஒவ்வொரு பார்மெட்டிலிருந்து மற்றொரு பார்மெட்டுக்கு மாற்ற வேண்டுமெனில் அதற்கென வேறுவேறு மென்பொருளை பயன்படுத்த வேண்டும். அவ்வாறு நாம் இணையத்தில் இருந்து மென்பொருளை டவுண்லோட் செய்து பயன்படுத்தினாலும் அது சிறப்பானதாக இருக்காது. உதாரணமாக டவுண்லோட் செய்து நமது கணினியில் இன்ஸ்டால் செய்யும் மென்பொருள் மூலமாக நமது கணினியில் உள்ள தகவல்களை ஹேக்கர்கள் திருட வாய்ப்பு உள்ளது. மேலும் நம்முடைய தகவல்களை இழக்கவும் நேரிடும். ஒரு சில நேரங்களில் ஹார்ட்டிஸ்க்யை கூட இழக்க நேரிடும்.

இதற்கு உதவுவதுதான் Tukanas files converter அவ்வாறு இல்லாமல் ஒரே மென்பொருள் மூலமாக PDF/DOC/HTML/PPT/GIF/JPG  இதில் உள்ள பார்மெட்டுகளில் இருந்து எதேனும் ஒரு பார்மெட்டை தேர்வு செய்து கொண்டு மீதமுள்ள மற்ற பார்மெட்டுகளாக மாற்றிக்கொள்ள முடியும்.

மென்பொருளை தரவிறக்க: சுட்டி


 இந்த மென்பொருள் அளவில் சிறியது ஆகும். மேலும் இது ப்ரீவேர் அப்ளிகேஷன் ஆகும்.

இதன் சிறப்புவசதிகள்:
  • convert PDF to DOC
  • convert PDF to PPT
  • convert PDF to GIF
  • convert PDF to JPG
  • convert DOC to PDF
  • convert DOC to HTML
  • convert DOC to PPT
  • convert DOC to GIF
  • convert DOC to JPG
  • convert HTML to PDF
  • convert HTML to DOC
  • convert HTML to HTML
  • convert HTML to PPT
  • convert HTML to GIF
  • convert HTML to JPG
  • convert PPT to PDF
  • convert PPT to DOC
  • convert PPT to HTML
  • convert PPT to GIF
  • convert PPT to JPG
இத்தனை விதமான பார்மெட்டுகளாக மாற்றிக்கொள்ள முடியும். பயன்படுத்தி பாருங்கள் பயனுள்ளதாக இருக்கும்.

மொசில்லா பயர்பாக்ஸ் உளவிக்கான- Google Instant Search நீட்சி

♠ Posted by Kumaresan Rajendran in ,
புதிதுபுதிதாய் சேவைகளை கூகுள் வழங்கி வருகிறது, அதேபோல, அன்மையில் கூகுள் நிறுவனம் Instant Search வசதியினை அறிமுகப்படுத்தியது, இதன் மூலம் கூகுள் தளத்தில் நாம் தேடும் குறிச்சொல்லுக்கான முடிவுகள் அனைத்துமே உடனே வெளிப்படும். இந்த வசதியினை நாம் நேரிடையாக மொசில்லா உலவியில் இருந்தபடியே  இந்த வசதியினை பெற முடியும். இதனால் நாம் கூகுள் தளத்திற்கு செல்லாமலேயே நேரிடையாகவே இந்த வசதியினை நெருப்புநரி உளவியில் இருந்தவாறே சர்ச் செய்ய முடியும்.

இதற்கான சுட்டி



இதைப்பற்றிய வீடியோ:




இதனை உங்கள் உலவியில் பதிந்து கொள்ளவும், பின் நீங்கள் உங்கள் நெருப்புநரி உலவியின் மூலமாகவே Google Instant Search வசதியினை எளிதாக பெற முடியும்.

இண்டர்நெட் எக்ஸ்புளோரர், மொசில்லா பயர்பாக்ஸ், ஒபேரா,சபாரி,கூகுள் குரோம் உளவிகளை பேக்அப் செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in ,,

இணைய பக்கங்களை பார்வையிட பயன்படுவது உலவிகள் ஆகும். சந்தையில் புதிதுபுதிதாய் உலவிகள் வந்துகொண்டிருந்தாலும் ஒருசில உலவிகள் மட்டுமே பயனாளர்களை கவர்ந்துவருகிறது, ஒருசில பயனாளர்கள் பலவிதமான உலவிகளை பயன்படுத்தி வருவார்கள். அவற்றில் பல்வேறு புக்மார்க் பக்கங்கள் அடங்கும். குறிப்பாக இண்டர்நெட் எக்ஸ்புளோரர், மொசில்லா பயர்பாக்ஸ், ஒபேரா,சபாரி,கூகுள் குரோம் போன்ற உலவிகள் ஆகும். இவை அனைத்துமே முன்னனி உலவிகள் ஆகும். இவற்றில் உள்ள புக்மார்க்குகள், டேட்டடாக்களை பேக்அப் செய்து மீண்டும், ரீஸ்டோர் செய்து கொள்ள முடியும். இதற்கான எளிய மென்பொருள் உள்ளது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ள வேண்டும். பின் எந்ததெந்த உலவிகளை (இண்டர்நெட் எக்ஸ்புளோரர், மொசில்லா பயர்பாக்ஸ், ஒபேரா,சபாரி,கூகுள் குரோம்) பேக்அப் செய்ய வேண்டுமொ அதனை தேர்வு செய்து கொண்டு பின் எந்த இடத்தில் பேக்அப்பினை பதிய வேண்டுமொ அந்த இடத்தையும் தேர்வு செய்து கொண்டு Backup பொத்தானை அழுத்த வேண்டும். அதே போல ரீஸ்டோர் செய்யும் போது, பைலை தேர்வு செய்துகொண்டு ரீஸ்டோர் செய்து கொள்ள முடியும்.

விண்டோஸ் மீடியா பிளேயரை பயன்படுத்தி CD/DVD-க்களை ரைட் செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in ,,
நாம் பொதுவாக மீடியா பிளேயர் என்றால் பாட்டு கேட்பது, படம் பார்ப்பது போன்ற செயல்களை மட்டுமே செய்யும் என்று இருப்போம். ஆனால் இந்த விண்டோஸ் மீடியா பிளேயரினை பயன்படுத்தி CD/DVD-க்களை ரைட் செய்ய முடியும். இதுவரை நாம் CD/DVD-க்களை ரைட் செய்ய நீரோ போன்ற எதாவதொரு எழுதியை பயன்படுத்தியே CD/DVD-க்களை ரைட் செய்வோம். அப்படி இல்லாமல் விண்டோஸ் மீடியா பிளேயரினை பயன்படுத்தியே ரைட் செய்ய முடியும். முதலில் விண்டோஸ் மீடியா பிளேயரை ஒப்பன் செய்து கொள்ளவும். பின் வலதுபுறமாக உள்ள BURN என்னும் பட்டியை தேர்வு செய்யவும்.  OPTION பட்டனை தேர்வு செய்து Data CD/DVD Audiao Cd போன்ற தேர்வுகளை தேர்வு செய்து கொள்ள முடியும்.


பின் உங்கள் தேவைக்கு ஏற்ப தேர்வு செய்து கொண்டு பின் எந்த டேட்டாவினை ரைட் செய்ய வேண்டுமோ அதனை Drag and Drop செய்ய வேண்டும்.

பின் Start Burn என்ற பட்டனை அழுத்தவும். பிறகு Cd- யில் டேட்டாவானது பதியப்படும்.

GOOGLE CHROME- ல் INTERFACE மொழியினை மாற்றுவது எப்படி?

♠ Posted by Kumaresan Rajendran in ,
கூகுள் குரோம் உளவியானது அதிவேகமாக வளர்ந்துவரக்கூடிய உளவி ஆகும். இதில் பல்வேறு விதமான சிறப்பம்சங்கள் உள்ளன, கூகுள் குரோம் உளவி மக்களிடத்தில் அதிக வரவேற்பினை பெற்று உள்ளது.  இண்டர்நெட் எக்ஸ்புளோரர், மொசில்லா அதற்கு அடுத்தப்படியாக கூகுள் குரோம் என பயனாளர்களின் ஆதரவினை வெகுவாக பெற்று வருகிறது, குரோம் உளவி.  கூகுள் குரோம் உளவியில்   INTERFACE மொழியினை மாற்றுவது எவ்வாறு என பார்ப்போம்.

முதலில் கூகுள் குரோம் உளவியினை திறந்து கொள்ளவும், அதில் Tools > Options என்பதை தேர்வு செய்யவும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Under the Bonnet என்னும் பட்டியை தேர்வு செய்யவும்.



அதில் Change fonts and language settings என்பதை தேர்வு செய்யவும். அதில் Language என்னும் பட்டியை தேர்வு செய்து, உங்களுக்கு விருப்பமான மொழியினை தேர்வு செய்யவும். Add பட்டனை அழுத்தி மொழியினை தேர்வு செய்து கொள்ள முடியும்.