தமிழில் கணினி செய்திகள்

GOOGLE CHROME- ல் INTERFACE மொழியினை மாற்றுவது எப்படி?

♠ Posted by Kumaresan Rajendran in , at November 03, 2010
கூகுள் குரோம் உளவியானது அதிவேகமாக வளர்ந்துவரக்கூடிய உளவி ஆகும். இதில் பல்வேறு விதமான சிறப்பம்சங்கள் உள்ளன, கூகுள் குரோம் உளவி மக்களிடத்தில் அதிக வரவேற்பினை பெற்று உள்ளது.  இண்டர்நெட் எக்ஸ்புளோரர், மொசில்லா அதற்கு அடுத்தப்படியாக கூகுள் குரோம் என பயனாளர்களின் ஆதரவினை வெகுவாக பெற்று வருகிறது, குரோம் உளவி.  கூகுள் குரோம் உளவியில்   INTERFACE மொழியினை மாற்றுவது எவ்வாறு என பார்ப்போம்.

முதலில் கூகுள் குரோம் உளவியினை திறந்து கொள்ளவும், அதில் Tools > Options என்பதை தேர்வு செய்யவும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Under the Bonnet என்னும் பட்டியை தேர்வு செய்யவும்.



அதில் Change fonts and language settings என்பதை தேர்வு செய்யவும். அதில் Language என்னும் பட்டியை தேர்வு செய்து, உங்களுக்கு விருப்பமான மொழியினை தேர்வு செய்யவும். Add பட்டனை அழுத்தி மொழியினை தேர்வு செய்து கொள்ள முடியும்.

1 Comments:

Post a Comment