தமிழில் கணினி செய்திகள்

இண்டர்நெட் எக்ஸ்புளோரர், மொசில்லா பயர்பாக்ஸ், ஒபேரா,சபாரி,கூகுள் குரோம் உளவிகளை பேக்அப் செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in ,, at November 07, 2010

இணைய பக்கங்களை பார்வையிட பயன்படுவது உலவிகள் ஆகும். சந்தையில் புதிதுபுதிதாய் உலவிகள் வந்துகொண்டிருந்தாலும் ஒருசில உலவிகள் மட்டுமே பயனாளர்களை கவர்ந்துவருகிறது, ஒருசில பயனாளர்கள் பலவிதமான உலவிகளை பயன்படுத்தி வருவார்கள். அவற்றில் பல்வேறு புக்மார்க் பக்கங்கள் அடங்கும். குறிப்பாக இண்டர்நெட் எக்ஸ்புளோரர், மொசில்லா பயர்பாக்ஸ், ஒபேரா,சபாரி,கூகுள் குரோம் போன்ற உலவிகள் ஆகும். இவை அனைத்துமே முன்னனி உலவிகள் ஆகும். இவற்றில் உள்ள புக்மார்க்குகள், டேட்டடாக்களை பேக்அப் செய்து மீண்டும், ரீஸ்டோர் செய்து கொள்ள முடியும். இதற்கான எளிய மென்பொருள் உள்ளது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ள வேண்டும். பின் எந்ததெந்த உலவிகளை (இண்டர்நெட் எக்ஸ்புளோரர், மொசில்லா பயர்பாக்ஸ், ஒபேரா,சபாரி,கூகுள் குரோம்) பேக்அப் செய்ய வேண்டுமொ அதனை தேர்வு செய்து கொண்டு பின் எந்த இடத்தில் பேக்அப்பினை பதிய வேண்டுமொ அந்த இடத்தையும் தேர்வு செய்து கொண்டு Backup பொத்தானை அழுத்த வேண்டும். அதே போல ரீஸ்டோர் செய்யும் போது, பைலை தேர்வு செய்துகொண்டு ரீஸ்டோர் செய்து கொள்ள முடியும்.

4 Comments:

பயனுள்ள தகவல்..ஆனால் "உலவி" என்பது தான் சரி..உளவி அல்ல...நன்றி

Post a Comment