♠ Posted by Kumaresan Rajendran in Conversion,ஆன்லைன் at November 12, 2010
ஆன்லைனில் பல்வேறு விதமான கன்வெர்ட்களை செய்திருப்போம், வேர்டினை பிடிஎப்பாகவும், பிடிஎப்பினை டாக்குமெண்டுகளாகவும் பல்வேறு விதமான கன்வெர்ட்களை செய்திருப்போம். ஆன்லைனில் பல்வேறு விதமான சேவைகள் கிடைக்கும் உதாரணமாக ஈ-மெயில் தொடங்கி ஆன்லைன் ரிசர்வேசன் வரை பல்வேறு விதமான சேவைகளை ஆன்லைன் மூலமாக பெற்று வருகிறோம். வீடியோ கன்வெர்சன், ஆடியோ கன்வெர்சன் மற்றும் டாக்குமெண்ட் கன்வெர்சன் என பல்வேறு விதமான கன்வெர்ட்களை ஆன்லைன் மூலமாக பெற்று வருகிறோம். அதே போல ஆன்லைன் மூலமாக இமேஜ்களை வேர்ட்,பிடிஎப் மற்றும் டெக்ஸ்ட் பைல்களாக கன்வெர்ட் செய்ய முடியும். இதற்கு OCRonline என்னும் தளம் உதவுகிறது.
தளத்தின் முகவரி: OCROnline
இந்ததளத்திற்கு சென்று உங்களுக்கென ஒரு கணக்கை தொடங்கி கொண்டு இமேஜ்களை கன்வெர்ட் செய்துகொள்ள முடியும். ஒரு சிலர் தங்களுடைய டாக்குமெண்ட்களை (Resume. Certificate) இமேஜ்களாக வைத்திருப்பார்கள் அவற்றில் ஏதேனும் ஒரு சில மாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும், அப்போது நாம் முழுவதுமாக டாக்குமெண்ட்களை தயார் செய்ய வேண்டி இருக்கும். அவ்வாறு இல்லாமல் அதனை வேர்ட் மற்றும் Richடாக்குமெண்ட்களாக கன்வெர்ட் செய்து கொண்டு உங்கள் விருப்பபடி மாற்றிக்கொள்ள முடியும்.
2 Comments:
மிகவும் உபயோகமான தகவல் நன்றி
நல்ல தகவல் நன்றி தோழா!!!
Post a Comment