தமிழில் கணினி செய்திகள்

விண்டோஸ் மீடியா பிளேயரை பயன்படுத்தி CD/DVD-க்களை ரைட் செய்ய

♠ Posted by Kumaresan R in ,, at 7:06 PM
நாம் பொதுவாக மீடியா பிளேயர் என்றால் பாட்டு கேட்பது, படம் பார்ப்பது போன்ற செயல்களை மட்டுமே செய்யும் என்று இருப்போம். ஆனால் இந்த விண்டோஸ் மீடியா பிளேயரினை பயன்படுத்தி CD/DVD-க்களை ரைட் செய்ய முடியும். இதுவரை நாம் CD/DVD-க்களை ரைட் செய்ய நீரோ போன்ற எதாவதொரு எழுதியை பயன்படுத்தியே CD/DVD-க்களை ரைட் செய்வோம். அப்படி இல்லாமல் விண்டோஸ் மீடியா பிளேயரினை பயன்படுத்தியே ரைட் செய்ய முடியும். முதலில் விண்டோஸ் மீடியா பிளேயரை ஒப்பன் செய்து கொள்ளவும். பின் வலதுபுறமாக உள்ள BURN என்னும் பட்டியை தேர்வு செய்யவும்.  OPTION பட்டனை தேர்வு செய்து Data CD/DVD Audiao Cd போன்ற தேர்வுகளை தேர்வு செய்து கொள்ள முடியும்.


பின் உங்கள் தேவைக்கு ஏற்ப தேர்வு செய்து கொண்டு பின் எந்த டேட்டாவினை ரைட் செய்ய வேண்டுமோ அதனை Drag and Drop செய்ய வேண்டும்.

பின் Start Burn என்ற பட்டனை அழுத்தவும். பிறகு Cd- யில் டேட்டாவானது பதியப்படும்.

2 comments:

Post a Comment