தமிழில் கணினி செய்திகள்

MP3 கோப்புகளுக்கு படங்களை இணைக்க

♠ Posted by Kumaresan Rajendran in ,,
இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யும் MP3 பாடல்கள் அந்தந்த குறிப்பிட்ட தளம் மற்றும் திரைப்படத்தின் படம் இணைக்கப்பட்டிருக்கும். இதனை நாம் ஆடியோவினை கேட்கும் போது படத்தினை காண முடியும். குறிப்பிட்ட ஆடியோ டேக் படத்தினை நாம் விரும்பியவாறு மாற்றியமைத்துக்கொள்ள முடியும். இதற்கு ஒரு இலவச மென்பொருள் வழிவகை செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் Mp32tag அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். தோன்றும் விண்டோவில் File மெனு பொத்தானை அழுத்தி Add directory யை தேர்வு செய்யவும்.


பின் தோன்றும் விண்டோவில் குறிப்பிட்ட பாடல்களில் தொகுப்பு கோப்பறையை தேர்வு செய்யவும். பின் அனைத்து பாடல்களும் பட்டியலிடப்படும்.


பின் எந்த பாடலோ அதனை மட்டும் தேர்வு செய்யவும். பின் Extended Tags ஐகானை கிளிக் செய்யவும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Add cover பொத்தானை அழுத்தி குறிப்பிட்ட படத்தை தேர்வு செய்து பின் OK பொத்தானை அழுத்தவும்.


குறிப்பிட்ட பாடலுக்கு நீங்கள் தெரிவு செய்த படம் செட் செய்யப்பட்டு இருக்கும். அந்த படம் குறிப்பிட்ட பாடலுக்கு செட் செய்து சேமிக்கப்பட்டுவிட்டது என்ற செய்தி தோன்றும்.




பின் குறிப்பிட்ட படமானது நீங்கள் குறிப்பிட்ட MP3 பாடலுக்கு செட் செய்யப்பட்டிருக்கும்.

பழைய கணினிகளில் உயர்தர வீடியோக்களை காண

♠ Posted by Kumaresan Rajendran in ,,
பழைய வன்பொருள்கள் கொண்ட கணினிகளில், உயர்தரம் கொண்ட வீடியோக்களை காண முடியாது. அவ்வாறு வீடியோக்களை பிளே செய்யும் போது சரியாக வீடியோக்கள் தெரியாது, சில நேரங்களில் ஆடியோ சரியாக கேட்காது. மேலும் வீடியோவும் சரியாக தெரியாது, மெதுவாக வீடியோக்கள் பிளே ஆகும். எந்த ஒரு வீடியோ பிளேயரை பயன்படுத்தினாலும் வீடியோக்களை சரியாக காண இயலாது. உயர்தரம் கொண்ட வீடியோக்களை பழைய கணினிகளில் இயங்க ஒரு மென்பொருள் வழிவகை செய்கிறது. 

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் SPlayer அப்ளிகேஷனை ஒப்பன் செய்து குறிப்பிட்ட உயர்தர வீடியோவினை திறக்கவும். இப்போது பழைய கணினியிலும் உயர்தர வீடியோ பிளே ஆகும்.


பைல் மெனு சென்று விருப்ப தேர்வினை அழுத்தி விரும்பிய படி SPlayer யை மாற்றியமைத்துக் கொள்ள முடியும்.


மற்ற வீடியோ பிளேயருக்கும் SPlayer குமான வேறுபாடு, இந்த மென்பொருள் அனைத்து வகையிலும் சிறப்பானதாகும். இது ஒரு இலவச மென்பொருள் ஆகும்.

இலவச VSO வீடியோ டவுண்லோட் மேனேஜர்

♠ Posted by Kumaresan Rajendran in ,,


இணையத்திலிருந்து ஆடியோ மற்றும் வீடியோக்களை தரவிறக்கம் செய்யும் போது சில நேரங்களில் இணைய கோளாறு காரணமாக தரவிறக்கம் பாதியிலேயே தடைபட்டுவிடும். அந்த தரவிறக்கத்தை மீண்டும் தொடரும் போது ஆரம்பத்திலிருந்து தரவிறக்கம் நடைபெறும், பாதியில் இருந்து தொடராது. இதனால் நமது உழைப்பும், நேரமும் வீண் ஆகும். மேலும் இணைய டேட்டாவும் வீண் ஆகிவிடும். இதுபோன்ற பிரச்சினையை தீர்க்க வேண்டுமெனில் நம்முடைய கணினியில் ஏதாவது ஒரு டவுண்லோடரை நிறுவுயிருத்தல் வேண்டும். இந்த குறையை போக்க VSO வீடியோ டவுண்லோடர் என்ற இலவச டவுண்லோட் மேனேஜர் மென்பொருள் உள்ளது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி 



மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் நீங்கள் சாதாரணமாக எந்த வீடியோக்களை தரவிறக்கினாலும். அது நேரிடையாகவே VSO டவுண்லோடரில் இணைக்கப்பட்டுவிடும்.



தரவிறக்கம் நடைபெற்றவுடன் அதனை நாம் விரும்பிய பார்மெட்டிற்கு மாற்றிக்கொள்ளவும். இந்த மென்பொருளில் வழி உள்ளது.

Leawo 3GP கன்வெர்ட்டர் இலவசமாக

♠ Posted by Kumaresan Rajendran in ,,,
மொபைல் போன்களுக்கு ஏற்ற வீடியோ பைல் பார்மெட் 3gp ஆகும். இந்த பைல் பார்மெட் மட்டுமே அனைத்து வீடியோ பிளேயர் வசதி கொண்ட மொபைல்களில் இயங்க கூடியது ஆகும். இணையத்தில் இருந்து பதிவிறக்கப்படும் வீடியோ பைல் பார்மெட்கள் பலவும் FLV, AVI, MPEG போன்ற பைல் பார்மெட்டிலேயே இருக்கும். இவ்வாறு உள்ள வீடியோ பைல்களை நாம் விருப்பபடி வேண்டுமெனில் 3gp வீடியோ பைல் பார்மெட்டாக மாற்றிக்கொள்ள முடியும். 3gp வீடியோ பைல் பார்மெட்டாக மாற்றம் செய்ய இணையத்தில் பல்வேறு மென்பொருள்கள் கிடைக்கிறன. ஆனால் இதுபோன்ற மென்பொருள்களை நாம் விளை கொடுத்து மட்டுமே பெற வேண்டும். ஒரு சில நேரங்களில் இலவசமாகவும் அந்த குறிப்பிட்ட மென்பொருளை தருகிறனர். அந்த வகையில் தற்போது Leawo 3GP கன்வெர்ட்டரை இலவசமாக தருகிறனர்.

மென்பொருளை இலவசமாக தரவிறக்க சுட்டி

சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, முகநூல் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு, பின் Get IT Now என்னும் பொத்தானை அழுத்தவும். பின் உங்கள் மின்னஞ்சலுக்கு ஒரு மின்னஞ்சல் வந்திருக்கும். அது ஸ்பேம் மின்னஞ்சலாகவும் வர வாய்ப்புண்டு. எனக்கு வந்த மின்னஞ்சல் ஸ்பேம் அறையில் இருந்தது. பின் அந்த மின்னஞ்சலை ஒப்பன் செய்து லைசன்ஸ் கீயை குறித்து வைத்துக்கொள்ளவும். மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கான சுட்டியும் அதிலேயே கொடுக்கப்பட்டிருக்கும். அதை பயன்படுத்தி மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.


மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி லைசன்ஸ் கீயை பயன்படுத்தி கணினியில் முழுமையாக நிறுவி கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.


பின் குறிப்பிட்ட வீடியோவினை உள்ளினைத்து கொண்டு, எந்த பார்மெட்டில் கன்வெர்ட் ஆக வேண்டுமோ அதனை தேர்வு செய்துவிட்டு பின் வீடியோ தரத்தினை தேர்வு செய்து, பின் கன்வெர்ட் செய்த பைல்கள் சேமிக்கப்பட வேண்டிய இடத்தையும் குறிப்பிட்டுவிட்டு கன்வெர்ட் பொத்தானை அழுத்தவும். சிறிது நேரத்தில் தற்போது நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் வீடியோ கன்வெர்ட் செய்யப்பட்டு இருக்கும்.

ஆடியோ பைலை மற்றொரு ஆடியோ பார்மெட்டிற்கு மாற்ற

♠ Posted by Kumaresan Rajendran in ,,
ஆடியோ பைல்கள் என்றவுடன் அனைவருக்கும் நினைவுக்கு வருவது mp3, mp4 பைல் பார்மெட்கள் மட்டுமே ஆகும். இன்னும் இதுதவிர பல்வேறு ஆடியோ பைல் பார்மெட்கள் உள்ளன. அவை MP3, AAC, WAV, WMA, CDA, FLAC, M4A, MID, MKA, MP2, MPA, MPC, APE, OFR, OGG, RA, WV, TTA, AC3, DTS இது போன்று இன்னும் பல்வேறு பைல் பார்மெட்கள் உள்ளன. இவையாவும் தனித்தனி ஒலி அமைப்புகளில் செயல்படக்கூடியது ஆகும். நாம் ஏன் ஒரே பைல் பார்மெட்டில் வைத்திருந்தால் என்ன என்று நீங்கள் கேட்கலாம், இவ்வாறு மாற்றுவதால் என்ன நன்மை என்று நம்மில் பலருக்கு சந்தேகம் எழக்கூடும். நம்முடைய கணினியில் அனைத்து விதமான ஆடியோ பைல்ககளையும் நம்மால் கேட்க முடியும். ஆனால் ஐபேட், மொபைல்போன்களில் இதுபோன்ற வசதிகள் குறைவும் ஒரு சில குறிப்பிட்ட  ஆடியோ பைல் பார்மெட்களை மட்டுமே சப்போர்ட் செய்யும் இதுபோன்ற சூழ்நிலைகளில் நாம் அனைத்து விதமான ஆடியோ பைல்களையும் கேட்க முடியாது. இந்த நிலையை தவிர்க்க நாம் வேண்டிய ஆடியோ பைல் பார்மெட்டில் கன்வெர்ட் செய்ய ஒரு இலவச மென்பொருள் உதவி செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். இதில் உள்ள Add என்னும் சுட்டியை அழுத்தி ஆடியோ பைல்களை உள்ளினைத்து கொள்ளவும். பின் Output என்ற இடத்தில் விருப்பமான ஆடியோ பைல் பார்மெட்டினை தேர்வு செய்யவும். இந்த மென்பொருள் மூலம் கன்வெர்ட் செய்யக்கூடிய ஆடியோ பைல் பார்மெட்கள் AAC, AC3, AIFF, AMR, AU, FLAC, MP3, M4A, MP2, OGG, WAV, WMA ஆகியவை ஆகும். பின் Convert என்னும் பொத்தானை அழுத்தி கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். 


இந்த மென்பொருள் மூலமாக ஆடியோ பைல்களை கன்வெர்ட் செய்வது மட்டுமல்லாமல், ஆடியோ பைல்களை ஒன்றினைக்கவும். குறிப்பிட்ட ஆடியோ பைலில் இருந்து வேண்டிய பகுதியை மட்டும் தனியே பிரித்தெடுக்கவும் முடியும். இந்த மென்பொருள் மூலமாக ஆடியோ பைல்களை எளிமையாக வெட்ட முடியும். இது ஒரு இலவச மென்பொருள் ஆகும்.

வீடியோக்களை MP3 மற்றும் MP4 பார்மெட்களில் பதிவிறக்கம் செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in ,,
வீடியோக்களை தரவிறக்கம் செய்ய வேண்டும் என்றால், நாம் அனைவரும் நாடிச்செல்வது யூடியூப் தளம் ஆகும். ஆனால் இந்த தளத்தில் உள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்ய எதாவது ஒரு மூன்றாம் தர மென்பொருளையோ அல்லது நீட்சிகளின் உதவியை நாடிச்செல்ல வேண்டும். அவ்வாறு இல்லாமல் சாதாரணமாக ஆன்லைனில் இருந்து நேரடியாகவே வீடியோவினை பதிவிறக்கம் செய்ய முடியும். இதற்கு Clip.Dj என்னும் தளம் உதவி செய்கிறது. இந்த தளத்தில் எந்தவித மூன்றாம்தர மென்பொருளின் உதவியும் இல்லாமல் நேரடியாகவே வீடியோவினை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

தளத்திற்கான சுட்டி



பின் சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று குறிப்பிட்ட வீடியோவிற்கான குறிச்சொல்லை இட்டு தேடவும். பின் விருப்பமான வீடியோவை பதிவிறக்கம் செய்ய Download என்னும் பொத்தானை அழுத்தவும். இந்த வீடியோக்களை MP3 மற்றும் MP4 பார்மெட்களில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.


ஆன்லைனில் இருந்தபடியே பாடலை MP3 யாகவும், MP4கவும் கேட்க முடியும். மேலும் பதிவிறக்கிய வரிசைப்பட்டியலை நம்முடைய விருப்பபடி மாற்றியமைத்துக்கொள்ளவும் முடியும்.

ஆடியோ சீடியில் இருந்து பாடல்களை பிரித்தெடுக்க

♠ Posted by Kumaresan Rajendran in ,,
ஆடியோ சீடியில் உள்ள பாடல்களை தனியே பிரித்தெடுக்க வேண்டுமென்றால் அது முடியாத விஷயமாக இருக்கும். ஆடியோ சீடிக்களை ட்ரைவில் இட்டு பார்த்தால் 1,2 கேபி அளவுள்ள பைல்களை மட்டுமே நம்மால் காணமுடியும். அந்த பைல்களை மட்டுமே நம்மால் பிரித்தெடுக்கவும் முடியும். ஏன் இதற்கு வேறு வழியே இல்லையா, ஆடியோ சீடியில் இருந்து பாடல்களை பிரித்தெடுக்கவே முடியாத என்றால், கண்டிபாக பாடல்களை தனியே பிரித்தெடுக்க முடியும். இதற்கு பல்வேறு மென்பொருள் உதவி செய்கிறன. இவற்றில் பல பணம் கொடுத்து பெற வேண்டும். அந்த வகையில் ஆடியோ சீடியில் இருந்து பாடல்களை பிரித்தெடுக்க அதிகமாக பயன்படுத்தப்படும் மென்பொருள் Mp3 to Ringtone Gold. இந்த மென்பொருளை இலவசமாக நாம் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். ஆடியோ சீடியில் இருந்து பாடல்களை பிரித்தெடுக்க இலவசமாக ஒரு மென்பொருள் உள்ளது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒருமுறை கணினியை மறுதொடக்கம் செய்து கொண்டு பின் இந்த மென்பொருளை ஒப்பன் செய்யவும். இப்போது ட்ரைவில் சீடியினை உள்ளிடவும். தற்போது பாடல்களை இந்த மென்பொருள் வாயிலாக காண முடியும். இப்போது வேண்டிய பாடல்களை தேர்வு செய்துகொண்டு, பாடல்கள் சேமிக்கபடவேண்டிய இடத்தை குறிப்பிடவும். தற்போது வெளியீட்டு பார்மெட்டையும் தேர்வு செய்யவும். தற்போது Convert என்னும் பொத்தானை அழுத்தவும்.


சில மணி நேரங்களில் பாடல்களை கன்வெர்ட் செய்யப்பட்டு, நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் சேமிக்கப்பட்டிருக்கும். அதை நீங்கள் வழக்கம் போல் பயன்படுத்தி கொள்ள முடியும். இதனால் ஆடியோ சீடிக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது.