தமிழில் கணினி செய்திகள்

வீடியோ கன்வெர்ட்டர்/ டிவிடி ரிப்பேர் இலவசமாக

♠ Posted by Kumaresan Rajendran in ,
புனிதவெள்ளி சலுகையாக வீடியோ கன்வெர்ட்டர் மற்றும் டிவிடி ரிப்பேர்கள் இலவசமாக லைசன்ஸ் கீயுடன் வழங்கப்படுகிறது. இந்த சலுகை குறுகிய தினங்களுக்கு மட்டுமே. விலை கொடுத்து வாங்க வேண்டிய வீடியோ கன்வெர்ட்டர் மற்றும் டிவிடி ரிப்பேர்கள்தற்போது இலவசமாக கிடைக்கிறது. 

கணினியில் இருக்க வேண்டிய அத்தியவசியமான மென்பொருள்களில் வீடியோ கன்வெர்ட்டரும் ஒன்று. வீடியோவினை பல இருப்பினும் அவற்றில் ஒரு சில மென்பொருள்கள் மட்டுமே சிறப்பாக செயல்படும். நாம் இணையத்தில் இருந்து ஏதோ ஒரு வீடியோ கன்வெர்ட்டரை சோதனை பதிப்பாக பதிவிறக்கி பயன்படுத்துவோம். ஆனால் அந்த மென்பொருள் முழுமையாக செயல்படாது. கன்வெர்ட் செய்யும் போதும் கன்வெர்ட் செய்த வீடியோவிலும் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும். அதனால் விலை கொடுத்து வாங்கும் மென்பொருள்களே சிறப்பாக அமையும். அவ்வாறு விலைகொடுத்து வாங்கும் மென்பொருள்கள் தற்போது புனிதவெள்ளியை தினத்தை முன்னிட்டு இலவசமாக வழங்கப்படுகிறது.

அதேபோல் டிவிடிக்களை பழுதுநீக்கி தகவலை மீண்டும் பெற்றுக்கொள்ள உதவும் மென்பொருளும் இலவசமாக வழங்கப்படுகிறது.

வீடியோ கன்வெர்ட்டர்


மென்பொருளை இலவசமாக தரவிறக்க சுட்டி

மென்பொருளை இலவசமாக தரவிறக்க சுட்டி1

சுட்டியில் குறிப்பிட்ட தளத்திலிருந்து மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். பின் Next பொத்தானை அழுத்தவும். அடுத்து விருப்பம் இருந்தால் சோஷியல் தளங்களில் பகிர்ந்து கொள்ளவும். இல்லையெனில் I’ve shared! Next என்னும் பொத்தானை அழுத்தவும். அடுத்த டேப்பில் லைசன்ஸ் கீ கிடைக்கும் அதை சேமித்து வைத்துக்கொள்ளவும்.  (AF-VYEZVSSD-UAYFUX)

பதிவிறக்கம் செய்த மென்பொருளை கணினியில் நிறுவவும் பின் லைசன்ஸ் கீ கேட்கும். நீங்கள் சேமித்து வைத்திருக்கும் கீயினை பயன்படுத்தி மென்பொருளை முழுமையாக ஆக்டிவேட் செய்து கொள்ளவும்.


பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து வழக்கம் போல் பயன்படுத்தவும். HD வீடியோக்களை எளிதாக கன்வெர்ட் செய்து கொள்ள முடியும்.

டிவிடி ரிப்பேர்


மென்பொருளை தரவிறக்க சுட்டி

மென்பொருளை தரவிறக்க சுட்டி1

சுட்டியில் குறிப்பிட்ட தளத்திலிருந்து மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். அதன் கூடவே லைசன்ஸ் கீயும் இருக்கும். பதிவிறக்கம் ஆன பைலை அன்ஜிப் செய்து கொண்டு மென்பொருளை கணினியில் நிறுவவும். இறுதியாக லைசன்ஸ் கீ கேட்கும். அதை உள்ளிட்டு மென்பொருளை முழுமையாக நிறுவி கொள்ளவும்.


பின் இந்த அப்ளிகேஷன் உதவியுடன் டிவிடியில் உள்ள கோப்புகளை மீட்டெடுக்க முடியும்.

படங்களில் உள்ள வாட்டர்மார்க்கினை நீக்க

♠ Posted by Kumaresan Rajendran in ,
படங்களை மெறுகேற்றவும், படங்களில் உள்ள குறைபாடுகளை நீக்கவும். அனைவரும் கையாளும் மென்பொருள் போட்டோசாப் ஆகும். இதில் அனைத்து போட்டோ தொடர்பான வேலைகளையும் விரைந்து செய்ய முடியும். இந்த மென்பொருளின் மூலம் ஒரு சில நேரங்களில் சிறிய வேலைகளை கூட செய்ய அதிக நேரம் ஆகும். உதாரணமாக டிஜிட்டல் கேமரா மூலம் எடுக்கும் படங்களில் தேதி இருக்கும். இதனை படத்திலிருந்து நீக்க வேண்டுமெனில் நாம் எதாவது ஒரு மூன்றாம் தர போட்டோ எடிட்டிங் மென்பொருளின் உதவியை நாடி செல்ல வேண்டும். இதுபோன்று உள்ள வாட்டர்மார்க்குகளையும், தேவையற்ற படங்களையும் நீக்க ஒரு அருமையான மென்பொருள் ஒன்று உள்ளது. அதுதான் Inpaint என்னும் மென்பொருள் ஆகும். அது தற்போது இலவசமாக கிடைக்கிறது.

மென்பொருளுக்கான லைசன்ஸ் கீயை இலவசமாக பெற சுட்டி

கூகுள் ட்ரான்ஸ்லேட்டர் மூலம் ட்ரான்ஸ்லேட் செய்யப்பட்ட லைசன்ஸ் கீயை இலவசமாக பெற சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, உங்களுடைய தகவல்களை உள்ளிட்டு Absenden என்னும் பொத்தானை அழுத்தவும். அரைமணி நேரத்திற்குள் கடவுச்சொல்லுக்கான சுட்டி உங்கள் மின்னஞ்சலை வந்து சேரும். 


மேலே உள்ள படம் போல் உங்களுக்கும் ஒரு மின்னஞ்சல் கிடைக்கும். அதில் கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை அழுத்தி லைசன்ஸ் கீயை குறித்து வைத்துக்கொள்ளவும். பின் In paint மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். 

Inpaint மென்பொருளை தரவிறக்க சுட்டி



லைசன்ஸ் கீயை பயன்படுத்தி மென்பொருளை உங்கள் கணினியில் முழுமையாக நிறுவிக்கொள்ளவும். பின் ஒரு முறை கணினியை மறுதொடக்கம் செய்து இந்த மென்பொருளை ஒப்பன் செய்யவும். பின் எந்த படத்தை மாற்றம் செய்ய வேண்டுமோ அதனை தேர்வு செய்து, குறிப்பிட்ட பகுதியினை மட்டும் தேர்வு செய்து அழிக்கவும். அந்த இடத்தில் எந்த வித மாற்றமும் இல்லாமல் முன் இருந்தபடியே அழகாக இருக்கும்.



இதுபோல் பல்வேறு மாற்றங்களை இந்த மென்பொருளின் துணையுடன் செய்ய முடியும். இந்த மென்பொருள் தற்போது இலவசமாக கிடைக்கிறது. இந்த மென்பொருளை குறிப்பிட்ட நாட்கள் வரை மட்டுமே இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.

லைசன்ஸ் கீயுடன் இலவசமாக - BDLot Blu-ray Ripper

♠ Posted by Kumaresan Rajendran in ,
Blue Ray  குறுவட்டுக்களில் உள்ள தகவல்களை மீட்டெடுக்க  BDLot Blu-ray Ripper என்னும் மென்பொருள் உதவுகிறது. தற்போது இந்த மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது. இந்த மென்பொருள் இன்னும் 5 நாட்கள் மட்டுமே இலவசமாக பெற முடியும். Blue Ray  குறுவட்டுக்கள் சேதமடைந்து இருக்கும் அவற்றில் உள்ள கோப்புகளை நம்மால் பயன்படுத்த இயலாது. ஆனால் அவற்றில் உள்ள தகவல்களை மீட்டெடுப்பதன் மூலமாக நாம் அவற்றை பயன்படுத்திக்கொள்ள முடியும். சாதாரணமாக Blue Ray  குறுவட்டுக்களில் உள்ள தகவல்களை மீட்டெடுக்க இயலாது. அதற்கென உரிய மென்பொருளை கொண்டு மட்டுமே மீட்டெடுக்க முடியும். அதற்கு உதவும் சிறந்த மென்பொருள்தான் இந்த  BDLot Blu-ray Ripper மென்பொருள் ஆகும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை குறிப்பிட்ட தளத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். லைசன்ஸ் கீயும் அதிலேயே கொடுக்கப்பட்டிருக்கும் அதை பயன்படுத்தி மென்பொருளை முழுமையாக நிறுவிக்கொள்ளவும். இந்த மென்பொருளுக்கான லைசன்ஸ் கீ  BV-VSEYEDJJ-QQMRIP  இதை பயன்படுத்தி  நிறுவிக்கொள்ளவும்.


சீடியினை உள்ளிட்டு, பின் வெளியீட்டு பகுதியினை குறிப்பிட்டு பின் RUN என்னும் பொத்தானை அழுத்தி மீட்டெடுத்துக்கொள்ளவும்.

இலவசமாக லைசன்ஸ் கீயுடன் SnowFox YouTube Downloader

♠ Posted by Kumaresan Rajendran in ,
யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்ய பல்வேறு இலவச மென்பொருள்களும், நீட்சிகளும் இணையத்தில் கொட்டிகிடக்கிறன. இவற்றில் ஒரு சிலவை மட்டுமே சரியானதாக இருக்கும். அந்த வகையில் தற்போது SnowFox YouTube Downloader என்னும் மென்பொருள் இலவசமாக லைசன்ஸ் கீயுடன் அந்த நிறுவனம் அளிக்கிறது. இந்த மென்பொருளுடைய சந்தை விலை $19 ஆகும். இந்த SnowFox YouTube Downloader மென்பொருளை ஆகஸ்ட் 24வரை மட்டுமே இலவசமாக பெற முடியும். இந்த மென்பொருள் விண்டோஸ் 2000, எக்ஸ்பி, விஸ்டா மற்றும் ஏழு ஆகிய இயங்குதளங்களில் வேலை செய்யக்கூடியது ஆகும். இந்த மென்பொருளை இலவசமாக பெற வேண்டுமெனில் உங்களுக்கு முகநூலில் (Facebook) கணக்கு இருக்க வேண்டும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று முகநூல் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை கொண்டு உள்நுழையவும் பின் Like என்னும் சுட்டியை அழுத்தவும். அடுத்ததாக தோன்றும் விண்டோவில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு Submit என்னும் பொத்தானை அழுத்தவும். பின் ஒரு மின்னஞ்சல் மூலமாக உங்களுக்கு லைசன்ஸ் கீ நீங்கள் குறிப்பிட்ட மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும். அதை குறித்து வைத்துக்கொள்ளவும். பின் மென்பொருளை தரவிறக்கம் செய்து கொண்டு லைசன்ஸ் கீயை பயன்படுத்தி மென்பொருளை முழுமையாக நிறுவிக்கொள்ளவும்.


பின் இந்த SnowFox YouTube Downloader அப்ளிகேஷனை ஒப்பன் செய்து, URL யை உள்ளினைக்கவும். பின் வீடியோவானது நீங்கள் குறிப்பிட்ட பகுதியில் சேமிக்கப்படும்.


இதே முறையை பின்பற்றி யூடியூப் தளத்தில் இருக்கும் வீடியோக்களை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

Leawo 3GP கன்வெர்ட்டர் இலவசமாக

♠ Posted by Kumaresan Rajendran in ,,,
மொபைல் போன்களுக்கு ஏற்ற வீடியோ பைல் பார்மெட் 3gp ஆகும். இந்த பைல் பார்மெட் மட்டுமே அனைத்து வீடியோ பிளேயர் வசதி கொண்ட மொபைல்களில் இயங்க கூடியது ஆகும். இணையத்தில் இருந்து பதிவிறக்கப்படும் வீடியோ பைல் பார்மெட்கள் பலவும் FLV, AVI, MPEG போன்ற பைல் பார்மெட்டிலேயே இருக்கும். இவ்வாறு உள்ள வீடியோ பைல்களை நாம் விருப்பபடி வேண்டுமெனில் 3gp வீடியோ பைல் பார்மெட்டாக மாற்றிக்கொள்ள முடியும். 3gp வீடியோ பைல் பார்மெட்டாக மாற்றம் செய்ய இணையத்தில் பல்வேறு மென்பொருள்கள் கிடைக்கிறன. ஆனால் இதுபோன்ற மென்பொருள்களை நாம் விளை கொடுத்து மட்டுமே பெற வேண்டும். ஒரு சில நேரங்களில் இலவசமாகவும் அந்த குறிப்பிட்ட மென்பொருளை தருகிறனர். அந்த வகையில் தற்போது Leawo 3GP கன்வெர்ட்டரை இலவசமாக தருகிறனர்.

மென்பொருளை இலவசமாக தரவிறக்க சுட்டி

சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, முகநூல் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு, பின் Get IT Now என்னும் பொத்தானை அழுத்தவும். பின் உங்கள் மின்னஞ்சலுக்கு ஒரு மின்னஞ்சல் வந்திருக்கும். அது ஸ்பேம் மின்னஞ்சலாகவும் வர வாய்ப்புண்டு. எனக்கு வந்த மின்னஞ்சல் ஸ்பேம் அறையில் இருந்தது. பின் அந்த மின்னஞ்சலை ஒப்பன் செய்து லைசன்ஸ் கீயை குறித்து வைத்துக்கொள்ளவும். மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கான சுட்டியும் அதிலேயே கொடுக்கப்பட்டிருக்கும். அதை பயன்படுத்தி மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.


மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி லைசன்ஸ் கீயை பயன்படுத்தி கணினியில் முழுமையாக நிறுவி கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.


பின் குறிப்பிட்ட வீடியோவினை உள்ளினைத்து கொண்டு, எந்த பார்மெட்டில் கன்வெர்ட் ஆக வேண்டுமோ அதனை தேர்வு செய்துவிட்டு பின் வீடியோ தரத்தினை தேர்வு செய்து, பின் கன்வெர்ட் செய்த பைல்கள் சேமிக்கப்பட வேண்டிய இடத்தையும் குறிப்பிட்டுவிட்டு கன்வெர்ட் பொத்தானை அழுத்தவும். சிறிது நேரத்தில் தற்போது நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் வீடியோ கன்வெர்ட் செய்யப்பட்டு இருக்கும்.

கணினியை பராமரிக்க - Wondershare Live Boot 2011 இலவசமாக

♠ Posted by Kumaresan Rajendran in ,
நம்முடைய கணினியை பயன்படுத்தும் போது பல்வேறு விதமான பிரச்சினைகள் எழக்கூடும். உதாரணமாக விண்டோஸ் சரியாக இயங்க மறுப்பது, முதன்மை பயனாளர் கடவுச்சொல் கோளாறு இதுபோன்று பல்வேறு பிரச்சினைகள் எழும். சில நேரங்களில் நமக்கே விண்டோஸ் இயங்குதளத்தில் பல்வேறு வேலைகள் இருக்கும். விண்டோஸ் பேக்அப், வன்தட்டு சீரமைப்பு,  கடவுச்சொல் மீட்டெடுப்பு மற்றும் தகவல் மீட்டெடுப்பு போன்ற பயன்பாடுகள் ஒவ்வொன்றிற்கும் நாம் தனித்தனி மென்பொருள்களின் உதவியினை நாடி செல்ல வேண்டும். இந்த அனைத்து பயன்பாடுகளையும் உள்ளடக்கிய ஒரு மென்பொருள் உள்ளது. அந்த மென்பொருள் தற்போது இலவசமாக கிடைக்கிறது. அதுதான் Wondershare Live Boot 2012. இந்த மென்பொருள் மூலமாக 40+ மேற்பட்ட விண்டோஸ் பயன்பாடுகளை மிக எளிமையாக செய்ய முடியும்.

இலவச லைசன்ஸ் கீ பெற சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல் உள்ளிட்டு Get it Now என்னும் பொத்தானை அழுத்தவும். இந்த இலவச கீயானது ஆகஸ்ட் 12 வரை மட்டுமே கிடைக்கும். தற்போது நீங்கள் குறிப்பிட்ட மின்னஞ்சலுக்கு இலவச கீயுடன், ஒரு மின்னஞ்சல் முகவரியும் அனுப்பபட்டிருக்கும். அதை சரியாக குறித்து வைத்துக்கொள்ளவும். இந்த மென்பொருடைய சந்தை மதிப்பு $59.95 ஆகும்.


மென்பொருளை தரவிறக்க சுட்டி

சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவவும்.


இந்த மென்பொருளை முழுமையாக தரவிறக்கி உங்கள் கணினியில், மின்னஞ்சலில் வந்த மின்னஞ்சல் முகவரி மற்றும் லைசன்ஸ் கீயை பயன்படுத்தி மென்பொருளை முழுமையாக உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் உங்கள் கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும்.பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.


பின் உங்கள் விருப்பபடி Wondershare Live Boot னை உருவாக்கி கொள்ள முடியும். யுஎஸ்பி ட்ரைவ் மற்றும் சீடி/டிவிடி ட்ரைவினை பயன்படுத்தி, இந்த Wondershare Live Boot 2012 னை உருவாக்க முடியும். நான் தற்போது யுஎஸ்பி ட்ரைவினை பயன்படுப்த்தி இதனை செய்யப்போகிறேன்.


தற்போது தோன்றும் விண்டோவில் How to create LiveBoot bootable USB drive? என்னும் தேர்வினை அழுத்தி, Burn USB drive Now! என்னும் பொத்தானை அழுத்தவும்.


தற்போது  யுஎஸ்பி ட்ரைவில் Wondershare LiveBoot 2012 பூட்டபிள் கோப்பாக இருக்கும். இதனை உங்கள் கணினியின் யுஎஸ்பி ட்ரைவில் இட்டு, கணினியை மறுதொடக்கம் செய்து பயாஸில் யுஎஸ்பி ட்ரைவில் இருந்து பூட் ஆகுமாறு அமைத்துக்கொள்ளவும். இல்லையெனில் பூட்டிங் அமைப்பை மட்டுமாவது யுஎஸ்பி ட்ரைவில் இருந்து பூட் ஆகுமாறு மாற்றியமைத்துக்கொள்ளவும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Boot from LiveBoot மற்றும் Boot from hard diskMicrosoft என்று இரண்டு தேர்வுகள் இருக்கும் அதில் Boot from LiveBoot என்பதை தேர்வு செய்து என்டர் பொத்தானை அழுத்தவும்.


WinPE தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தற்போது விண்டோஸ் பைல்களுடன் சேர்ந்து Wondershare LiveBoot 2012 பூட் ஆக தொடங்கும்.


தற்போது கணினி வழக்கம் போல் பூட் ஆகி செயல் படும், பின் நீங்கள் Wondershare Live Boot 2012 னை ஒப்பன் செய்யவும். சாதரணமாகவே Wondershare Live Boot 2012 ஒப்பன் செய்யப்பட்டிருக்கும். பின் உங்களுக்கு வேண்டிய செயல்பாடுகளை இந்த மென்பொருளின் உதவியுடன் செய்து கொள்ள முடியும்.





இது போன்று இன்னும் பல்வேறு வசதிகள் இந்த மென்பொருளில் மறைந்துள்ளன. இந்த மென்பொருள் விண்டோஸ் பயன்பாட்டாளர்களுக்கு வரப்பிரசாதம் ஆகும். கூடவே இந்த மென்பொருள் தற்போது இலவசமாகவும் கிடைக்கிறது. விண்டோஸில் உள்ள 40கும் மேற்பட்ட பயன்பாடுகளை நம்மால் எளிமையாக செய்ய முடியும். பயன்படுத்தி பார்த்துவிட்டு பின் உங்கள் பதிலை கூறவும்.

அவாஸ்ட் இண்டர்நெட் செக்யூரிட்டி இலவசமாக

♠ Posted by Kumaresan Rajendran in ,
வைரஸ்களின் தொல்லைகளில் இருந்து நமது கணினியை காப்பாற்ற அனைவரும் எந்த நிறுவனத்துடைய ஆன்டிவைரஸ் மென்பொருளையாவது பயன்படுத்தி வருவோம். ஒருசிலர் மட்டுமே பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்துவோம் ஆனால் பெரும்பாலானோர் இணையத்தில் இருந்து ட்ரையல் ஆன்டிவைரஸ் மென்பொருள்களை பயன்படுத்தி வருவோம். அவ்வபோது ஒரு சில ஆன்டிவைரஸ் நிறுவனங்கள் தங்களுடைய மென்பொருளை மேன்மைபடுத்துவதற்காக ஒரு சில நாடுகளில் இலவசமாக தருகிறனர். அந்த வகையில் அவாஸ்ட் தற்போது இலவசமாக இண்டர்நெட் செக்யூரிட்டி மென்பொருளை அளிக்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளவும். லைசன்ஸ் கீயும் அதன்னுள்ளேயே இருக்கும். இன்ஸ்டால் செய்யும் போது லைசன்ஸ் கீக்கான பைலை உள்ளிட்டு மென்பொருளை முழுமையாக நிறுவிக்கொள்ளவும். சாதாரணமாக இந்த மென்பொருளின் சந்தை விலை $39.99 ஆகும். இந்த அவாஸ்ட் ஆன்டிவைரஸ் மென்பொருளானது நம்முடைய கணினியை வைரஸ்களிடம் இருந்து முழுமையாக காபாற்ற கூடியது ஆகும்.

பிடிஎப் பைல்களை வேர்ட் பைலாக கன்வெர்ட் செய்ய - Able2Doc லைசன்ஸ் கீயுடன் பெற

♠ Posted by Kumaresan Rajendran in ,,
பிடிஎப் பைல்களில் எதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டுமெனில் அதனை வேர்ட் பைலாக மாற்றி பின்புதான் மாற்றங்கள் செய்ய வேண்டும். பிடிஎப் பைலை வேர்ட் பைலாக மாற்ற இணையத்தில் பல்வேறு இலவச மென்பொருள் கிடைக்கிறன. இவ்வாறு கிடைக்கும் மென்பொருள்களில் பலவும் சரியாக வேலை செய்வது இல்லை. முறையாக பிடிஎப் பைலை வேர்ட் பைலாக கன்வெர்ட் செய்வது கிடையாது. ஒரு சில குறைபாடுகள் இருக்கதான் செய்கிறன. எந்த வித குறைபாடும் இல்லாமல் பிடிஎப் பைலை வேர்ட் பைலாக கன்வெர்ட் செய்ய Able2Doc என்ற மென்பொருள் உதவி செய்கிறது. தற்போது Able2Doc என்ற மென்பொருளை லைசன்ஸ் கீயுடன் இலவசமாக தருகிறனர். இந்த மென்பொருளை தரவிறக்க முகநூலில் கணக்கு இருக்க வேண்டும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று முகநூலின் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு உள்நுழையவும். பின் Like என்னும் பொத்தானை அழுத்தவும். பின் உங்களுக்கென ஒரு இரகசிய கோடினை பெறுவீர்கள் அதனை  குறித்துவைத்துக்கொள்ளவும். பின் Able2Doc PDF to Word Giveaway என்னும் சுட்டியை அழுத்தவும். அடுத்ததாக தோன்றும் விண்டோவில் இரகசிய எண்னை உள்ளிட்டு மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.


பின் மென்பொருளை கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் Able2Doc அப்ளிகேஷனை ஒப்பன் செயது. குறிப்பிட்ட பிடிஎப் பைலை ஒப்பன் செய்யவும். இந்த அப்ளிகேஷன் மூலம் ஆங்கில எழுத்துருக்களை உடைய பிடிஎப் பைல்கள் மட்டுமே வேர்ட் பைல்களாக மாற்ற முடியும்.


பிடிஎப் டாக்குமெண்டை ஒப்பன் செய்து, Select என்னும் தேர்வினை அழுத்தி All மற்றும் Area என்னும் செலக்ட் தேர்வுகளை அழுத்தி பிடிஎப் பைலை தேர்வு செய்யவும். நீங்கள் எவ்வற்றையெல்லாம் தேர்வு செய்கிறீர்களோ அவைகள் மட்டுமே கன்வெர்ட் ஆகும்.


பின் Convert என்னும் தேர்வினை அழுத்தி வேர்ட் மற்றும் ஒப்பன் ஆப்பிஸ் பைல் பார்மெட்களில் கன்வெர்ட் செய்து டாக்குமெண்ட்களை சேமித்துக்கொள்ள முடியும்.



 பின் Convert to word என்னும் தேர்வில் Standard (Recommended) என்பதை அழுத்தவும். அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Continue என்னும் பொத்தானை அழுத்தவும். கன்வெர்ட் செய்த பைலை சேமிக்க வேண்டிய இடத்தை குறிப்பிட்டு. பைலில் பெயரையும் குறிப்பிடவும். தற்போது நீங்கள் குறிப்பிட்ட இடத்தில், நீங்கள் குறிப்பிட்ட பைல் பார்மெட்டில் டாக்குமெண்ட் கன்வெர்ட் செய்யப்பட்டு இருக்கும். இந்த மென்பொருளில் சந்தை மதிப்பு $49.95 ஆகும்.

DVD சீடிக்களை ஐஎஸ்ஒ பைலாக மாற்றம் செய்ய இலவச மென்பொருள்

♠ Posted by Kumaresan Rajendran in ,
விண்டோஸ் இயங்குதளத்தின் புகழ்பெற்ற இமேஜ் பைல் பார்மெட் ஐஎஸ்ஒ பைல் பார்மெட் ஆகும். இந்த பைல் பார்மெட்டை உருவாக்க இணையத்தில் இலவச மென்பொருள்கள் அதிகமாக கிடைக்கிறன. ஆனால் இவையாவும் கணினியுடைய வன்தட்டில் அல்லது ப்ளாஷ் ட்ரைவில் கோப்புகள் இருந்தால் மட்டுமே ஐஎஸ்ஒ பைலாக மாற்றியமைக்க முடியும். ஆனால் இந்த மென்பொருள் மூலம் நேரடியாக டிவீடியில் இருந்தே ஐஎஸ்ஒ பைலாக மாற்றியமைக்க முடியும். இந்த மென்பொருள் டிவீடி வீடியோ மற்றும் ஆடியோக்களை பிரித்தெடுக்கவும். காப்பி செய்யவும், மற்றும் ஐஎஸ்ஒ பைலாக மாற்றம் செய்யவும் இந்த மென்பொருள் உதவி செய்கிறது. இந்த மென்பொருள் தற்போது இலவசமாக கிடைக்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவவும். இறுதியாக BU-UPTTUXZZ-IXFXRX என்னும் லைசன்ஸ் கீயை பயன்படுத்தி மென்பொருள முழுமையாக நிறுவிக்கொள்ளவும். ஜீன் 30வரை மட்டுமே இந்த மென்பொருளை இலவசமாக பெற முடியும்.


பின் இந்த மென்பொருளை ஒப்பன் செய்து கொள்ளவும். டிவீடி ட்ரேயில் ஆடியோ அல்லது வீடியோ டிவீடியை உள்ளிடவும். பின் BDlot DVD Clone மென்பொருளை பயன்படுத்தி மேலே கூறிய அனைத்து செயல்களையும் செய்ய முடியும். கூடுதலான் செய்தி என்னவெனில் நேரிடையாக வன்தட்டிலையும் கன்வெர்ட் செய்து கோப்புகளை சேமிக்க முடியும். பயன்படுத்தி பாருங்கள் இந்த மென்பொருள் உங்களுக்கு பயனுள்ளதாய் இருக்கும். இந்த மென்பொருளுடைய சிறப்பம்சமே ஐஎஸ்ஒ பைல் பார்மெட்டாக கோப்புகளை கன்வெர்ட் செய்வது ஆகும்.

பிடிஎப் பைல்களை வேர்ட் பைல்களாக கன்வெர்ட் செய்ய - Simpo PDF

♠ Posted by Kumaresan Rajendran in ,,
முக்கியமான தகவல்களை நாம் பிடிஎப் பைல் பார்மெட்களில் வைத்திருப்போம், மேலும் முக்கிய அலுவல்கள் யாவும் பிடிஎப் கோப்பாகவே இருக்கும். அவற்றில் எதாவது மாற்றங்கள் செய்ய வேண்டுமெனில் அதனை நாம் வேர்ட் கோப்பாக மாற்றிய பின்புதான் மாற்றங்கள் செய்ய முடியும். இவ்வாறு பிடிஎப் பைல்களை வேர்ட் பைல்களாக மாற்றம் செய்ய இணையத்தில் மென்பொருள்கள் கிடைக்கிறன. ஆனால் தற்போது Simpo PDF மென்பொருளை இலவசமாக தருகிறனர். 

மென்பொருளை தரவிறக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, முகநூல் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு உள்நுழையவும். பின் Like என்னும் பொத்தானை அழுத்தவும். தற்போது தோன்றும் விண்டோவில் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு Send me Keycode என்னும் பொத்தானை அழுத்தவும். தற்போது லைசன்ஸ் கீயானது உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பட்டிருக்கும். மேலும் மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கான சுட்டியும் அனுப்பட்டிருக்கும். அதை பயன்படுத்தி மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளவும்.


பின் Simpo PDF மென்பொருளை கணினியில் நிறுவிக்கொள்ளவும். லைசன்ஸ் கீயை பயன்படுத்தி மென்பொருளை முழுமையாக நிறுவவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து ADD PDF(s) என்னும் பொத்தானை அழுத்தி பிடிஎப் பைலை உள்ளினைத்துக்கொள்ளவும். கன்வெர்ட் செய்யப்படவேண்டிய பைல்பார்மெட்டை தேர்வு செய்யவும். வேர்ட் மற்றும் டெக்ஸ்ட் பைல் பார்மெட்கள் ஆகும். அடுத்து கன்வெர்ட் செய்து சேமிக்க வேண்டிய இடத்தை தேர்வு செய்யவும். பின் Convert என்னும் பொத்தானை அழுத்தி கன்வெர்ட் செய்யவும். சில மணி நேரங்களில் உங்களுடைய பிடிஎப் பைலானது வேர்ட் பைலாக நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் சேமிக்கப்பட்டிருக்கும்.

ஏவிஜி இண்டர்நெட் செக்யூரிட்டி - 2011 யை இலவசமாக மூன்று மாத லைசன்ஸ் கீயுடன் பதிவிறக்க

♠ Posted by Kumaresan Rajendran in ,
ஆண்டிவைரஸ்களில் பல்வேறு விதமான பதிப்புகள் உள்ளன. குறிப்பாக சாதரண கணினிகளில் ஆண்டிவைரஸ் மென்பொருளை பயன்படுத்துவோம். இணைய இணைப்பு உள்ள கணினிகளில் இண்டர்நெட் செக்யூரிட்டி மென்பொருளை நிறுவி பயன்படுத்தினால் மட்டுமே நம்முடைய கணினிக்கு பாதுகாப்பு ஆகும். பல்வேறு இண்டர்நெட் செக்யூரிட்டி மென்பொருள்களை நாம் பணம் கொடுத்தே பெற வேண்டும் ஆனால் தற்போது ஏவிஜி இண்டர்நெட் செக்யூரிட்டி - 2011யை இலவசமாக தருகிறனர். இந்த ஏவிஜி இண்டர்நெட் செக்யூரிட்டி - 2011 மென்பொருளானது சென்ற வருடம் வெளியிடப்பட்டது ஆகும். ஆனால் தற்போது இந்த மென்பொருளை இலவசமாக தருகிறனர். இதற்கு முன் ஏவிஜி இண்டர்நெட் செக்யூரிட்டி - 2011யை வெளியிட்ட போது ஆறு மாதம் இலவசமாக தந்தனர். தற்போது ஏவிஜி இண்டர்நெட் செக்யூரிட்டி - 2011யை மூன்று மாதம் இலவசமாக தருகிறனர். உடனே சென்று பதிவிறக்கம் செய்யுங்கள்.

மென்பொருளை இலவசமாக தரவிறக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று உங்களுடைய தகவல்களை உள்ளிடவும். படத்தின் மீது கிளிக் செய்து படத்தை பெரிதாக்கி பார்க்கவும். இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது Hasło z czasopisma என்ற செக் பாக்சில் Zima z AVG என்றும் Email என்ற செக்பாக்சில் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியையும் உள்ளிடவும். பின் ஒகே பொத்தானை அழுத்தவும். உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி வைக்கப்படும். பின் அதை ஒப்பன் செய்து உங்கள் கணக்கை உறுதி படுத்திக்கொள்ளவும். அடுத்து ஒரு மின்னஞ்சல் அனுப்பபடும் அதில் நீங்கள் மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கான சுட்டியும், லைசன்ஸ் கீயும் அனுப்பி வைக்கப்படும்.


பின் இணைய உதவியுடன் மென்பொருளை பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் கட்டாயமாக ஒரு முறை கணினியை மறுதொடக்கம் செய்யவும். இப்போது ஏவிஜி இண்டர்நெட் செக்யூரிட்டி - 2011 மென்பொருளானது மூன்றுமாத லைசன்ஸ் கீயுடன் நிறுவப்பட்டிருக்கும். இணைய இணைப்பு இருந்தால் மென்பொருளை அப்டேட் செய்து கொள்ளவும்.

3D அனிமேஷன் உருவாக்க - DAZ Studio 4 இலவசமாக தரவிறக்கம் செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in ,
மனிதன் இந்த அளவுக்கு கற்பனை செய்யவிட்டால் கணினி உலகத்தை யாரும் அடைந்திருக்க முடியாது. அதே போல் தான் கணினி செயல்பாட்டின் கற்பனை 2D, 3D போன்ற அனிமேஷன்கள், அந்த வகையில் தற்போதைய நிலையில் 3D பயன்பாட்டில் உள்ளது. 3D வசதியின் மூலமாக கற்பனை உலகையே படைத்து விட முடியும். அந்த அளவுக்கு 3Dயில் வசதி உள்ளது. நாம் அனைவரும் 3D படங்கள் பார்த்திருக்க வாய்ப்பு இருக்கும். செயற்க்கையான முறையில் உருவாக்கப்பட்ட திரைப்படங்களாக இருந்தாலும் அவை மிகவும் தத்ருபமாக இருக்கும். சரி இவ்வாறு உருவாக்கப்படும் திரைப்படங்கள் யாவும் 3D மென்பொருள்களின் உதவியுடன் மட்டுமே முடியும். இதுபோன்று 3D அனிமேஷன்களை உருவாக்க மாயா, 3ds Max போன்று பல்வேறு மென்பொருள்கள் உள்ளன. அதே போல 3Dஅனிமேஷன்களை எளிமையான முறையில் உருவாக்க DAZ Studio என்ற மென்பொருள் பயன்படுகிறது. இந்த மென்பொருள் தற்போது இலவசமாக கிடைக்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று add to cart என்னும் பொத்தானை அழுத்தவும். அடுத்ததாக தோன்றும் விண்டோவில் subscribe me என்னும் பொத்தானை அழுத்தவும்.


அடுத்ததாக DAZ தளத்தில் உங்களுக்கென ஒரு கணக்கை உருவாக்கி கொள்ளவும். பின் அந்த கணக்கை ஆக்டிவேட் செய்து கொள்ள உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு லிங் அனுப்பபடும் அதை பயன்படுத்தி கணக்கை உறுதிபடுத்தி கொள்ளவும்.


அடுத்து தோன்றும் விண்டோவில் checkout என்னும் பொத்தானை அழுத்தி உறுதிபடுத்தவும். பின் உங்களுடைய கணக்கை திறந்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். லைசன்ஸ் கீயும் இந்த கணக்கிலேயே இருக்கும். மென்பொருளை தரவிறக்கம் செய்யும் போது இணைய இணைப்பு அதிவேகமாக இருந்தால் மட்டுமே தரவிறக்கம் செய்ய முடியும். ஏனெனில் மென்பொருளானது 430எம்.பி அளவுடையது ஆகும்.

இந்த DAZ Studio 4 பற்றி ஆன்லைனிலேயே கற்றுதருகிறனர். அதை பயன்படுத்தி எளிமையாக இந்த மென்பொருளை பயன்படுத்த முடியும். மேலே குறிப்பிட்ட படமானது DAZ Studio 4 யை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது ஆகும். இதே போல பல்வேறு அனிமேஷன்களை உருவாக்க இந்த மென்பொருள் பயன்படுகிறது. இந்த மென்பொருளானது ஜுலை31 வரை மட்டுமே இலவசமாக பெற முடியும்.