♠ Posted by Kumaresan Rajendran in Conversion,Giveway at June 24, 2011
விண்டோஸ் இயங்குதளத்தின் புகழ்பெற்ற இமேஜ் பைல் பார்மெட் ஐஎஸ்ஒ பைல் பார்மெட் ஆகும். இந்த பைல் பார்மெட்டை உருவாக்க இணையத்தில் இலவச மென்பொருள்கள் அதிகமாக கிடைக்கிறன. ஆனால் இவையாவும் கணினியுடைய வன்தட்டில் அல்லது ப்ளாஷ் ட்ரைவில் கோப்புகள் இருந்தால் மட்டுமே ஐஎஸ்ஒ பைலாக மாற்றியமைக்க முடியும். ஆனால் இந்த மென்பொருள் மூலம் நேரடியாக டிவீடியில் இருந்தே ஐஎஸ்ஒ பைலாக மாற்றியமைக்க முடியும். இந்த மென்பொருள் டிவீடி வீடியோ மற்றும் ஆடியோக்களை பிரித்தெடுக்கவும். காப்பி செய்யவும், மற்றும் ஐஎஸ்ஒ பைலாக மாற்றம் செய்யவும் இந்த மென்பொருள் உதவி செய்கிறது. இந்த மென்பொருள் தற்போது இலவசமாக கிடைக்கிறது.
மென்பொருளை தரவிறக்க சுட்டி
மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவவும். இறுதியாக BU-UPTTUXZZ-IXFXRX என்னும் லைசன்ஸ் கீயை பயன்படுத்தி மென்பொருள முழுமையாக நிறுவிக்கொள்ளவும். ஜீன் 30வரை மட்டுமே இந்த மென்பொருளை இலவசமாக பெற முடியும்.
பின் இந்த மென்பொருளை ஒப்பன் செய்து கொள்ளவும். டிவீடி ட்ரேயில் ஆடியோ அல்லது வீடியோ டிவீடியை உள்ளிடவும். பின் BDlot DVD Clone மென்பொருளை பயன்படுத்தி மேலே கூறிய அனைத்து செயல்களையும் செய்ய முடியும். கூடுதலான் செய்தி என்னவெனில் நேரிடையாக வன்தட்டிலையும் கன்வெர்ட் செய்து கோப்புகளை சேமிக்க முடியும். பயன்படுத்தி பாருங்கள் இந்த மென்பொருள் உங்களுக்கு பயனுள்ளதாய் இருக்கும். இந்த மென்பொருளுடைய சிறப்பம்சமே ஐஎஸ்ஒ பைல் பார்மெட்டாக கோப்புகளை கன்வெர்ட் செய்வது ஆகும்.
1 Comments:
Useful post....
Post a Comment