தமிழில் கணினி செய்திகள்

CA Anti-Virus Plus 6-மாத லைசன்ஸ் கீயுடன் தரவிறக்கம் செய்ய

♠ Posted by Kumaresan R in , at 11:48 AM
கணினியை பாதுகாப்பாக வைத்துகொள்ளவே அனைவரும் விரும்புவோம் இதற்காக நம்முடைய கணினியில் ஆண்டிவைரஸ் மென்பொருளை நிறுவி பயன்படுத்துவோம். ஒரு சிலர் எந்த வித ஆண்டிவைரஸ் மென்பொருளும் பயன்படுத்தமாட்டார்கள் ஏனென்றால் ஆண்டிவைரஸ் மென்பொருள் பயன்படுத்துவதால் கணினியுடைய இயக்கத்தில் வேகம் குறையும் என்பதற்காக ஆண்டிவைரஸ் மென்பொருள்களை பயன்படுத்த மாட்டார்கள். ஆனால் அவர்களுக்கு தெரியாது ஆண்டிவைரஸ் மென்பொருள் இல்லையெனில் கணினியவே இழக்க நேரிடும் என்று. என்னுடைய கருத்து என்னவெனி விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை பொறுத்தவரை ஆண்டிவைரஸ் மென்பொருள் நிறுவியிருக்க வேண்டும். அனைவராலும் ஆண்டிவைரஸ் மென்பொருளை பணம் செலுத்தி பெற முடியாது. ஆனால் இலவசமாக பெற முடியும். அந்த வகையில் தற்போது CA Anti-Virus Plus Anti Spyware மென்பொருள் இலவசமாக கிடைகிறது. ஆறுமாத லைசன்ஸ் கீயுடன்.

மென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று மென்பொருளை பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவவும். லைசன்ஸ் கீயை ஆக்டிவேட் செய்ய வேண்டுமெனில் உங்களிடம் credit card இருந்தால் மட்டுமே முடியும். credit card பற்றிய விவரங்களை தெரிவிப்பதன் மூலாக மட்டுமே இந்த ஆண்டிவைரஸ் மென்பொருளை முழுமையாக ஆக்டிவேட் செய்ய முடியும். இதனால் உங்களுடைய credit card இருந்து எந்த தொகையும் வசூலிக்கபடாது. இதனால் தைரியமாக credit card விரங்களை உள்ளிட்டு ஆக்டிவேட் செய்து கொள்ளலாம்.

மற்ற ஆண்டிவைரஸ் மென்பொருள்களை ஒப்பிடும் போது இந்த மென்பொருள் சிறப்பாகவே உள்ளது. உங்கள் கணினியில் வைரஸ்கள் வருவதற்கான வாய்ப்புகள் மிகவு குறைவு. உங்களுடைய கணினினுடை முழுபாதுகாவலனாகவும் இந்த மென்பொருள் செயல் படும். பயன்படுத்தி பாருங்கள். ஆனால் என்ன ஒன்று credit card வசதி இருந்தால் மட்டுமே இந்த மென்பொருள் உங்களால் முழுமையாக பயன்படுத்த முடியும். உங்கள் கணினியில் வேறொரு ஆண்டிவைரஸ் மென்பொருள் நிறுவியிருந்தால் அதனை நீக்கிய பின்புதான் இந்த ஆண்டிவைரஸ் மென்பொருள் நிறுவ முடியும்.

1 comments:

Post a Comment