தமிழில் கணினி செய்திகள்

மின்னஞ்சல்களை இணைய இணைப்பு இல்லாமல் அணுக

♠ Posted by Kumaresan R in at 6:21 PM
மின்னஞ்சல் பயன்பாடானது தற்போது அதிகரித்து கொண்டே உள்ளது, பல்வேறு நிறுவனங்கள் மின்னஞ்சல் சேவையினை இலவசமாக வழங்கி வருவதே இதற்கு முக்கிய காரணம் ஆகும். என்னத்தான் இலவசமாக மின்னஞ்சல் சேவையினை பெற்றாலும் இதனை நாம் இணைய உதவியுடன் மட்டுமே அணுக முடியும். தினமும் பல்வேறு மின்னஞ்சல்களை பரிமாற்றம் செய்வோம் ஆனால் இவற்றை நாம் இணைய இணைப்பு இருந்தால் மட்டுமே காண முடியும். அவ்வாறு இல்லாமல் இணைய வசதி இல்லாமல் மின்னஞ்சல்களை காண முடியும். இதற்கு ஒரு மென்பொருள் வழிவகை செய்கிறது.

மென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி


மென்பொருளை பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் கணினியை ஒரு முறை மறுதொடக்கம் செய்து கொண்டு பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். Archive E-mail என்னும் பொத்தானை அழுத்தி உங்களுக்கான அக்கவுண்ட்டை தேர்வு செய்து, பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும். ஜிமெயிலுக்கு இருப்பியல்பாகவே உள்ளது. மற்ற மின்னஞ்சல்களுக்கு தனியே கணக்கு உருவாக்கி கொள்ளவும். பின் சிறிது நேரம் உங்களுடைய மின்னஞ்சல்கள் நகல் எடுக்கப்பட்டு கணினியில் சேமிக்கப்படும்.


பின் நீங்கள் மின்னஞ்சல்களை வழக்கம்போல் எளிமையாக கையாள முடியும். இந்த மூலம் சீடி/டிவீடி, ப்ளாஷ் ட்ரைவ் மற்றும் வன்தட்டுகளில் மின்னஞ்சல்களை சேமித்து வைத்து கொள்ள முடியும். மின்னஞ்சல்களை பேக்அப் செய்து கொள்ளவும் இந்த மென்பொருள் பயன்படுகிறது. இந்த மென்பொருள் ஆப்லைனில் மின்னஞ்சல்களை கையாள மிகவும் உதவியாக இருக்கும்.

1 comments:

தகவலுக்கு நன்றி நண்பா! ஆனால் நமது மெயில் ஐடியின் password-ஐ இது போன்ற softwareகளில் பயன்படுத்தும் முன் கவனம் தேவை. ஏனெனில் இதன் மூலம் நமது mail account hack செய்யப்படலாம்.

Post a Comment