வேர்ட் மற்றும் பிடிஎப் பைல்கள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அளவில் சிறியதாகவே இருக்கும். டெக்ஸ்ட் பைல்களாக இருந்தால் மட்டுமே அளவில் சிறியதாக இருக்கும். படங்களை உள்ளடக்கிய கோப்பாக இருப்பின் அளவில் பெரியதாகவே இருக்கும். அதுபோன்ற கோப்புகளை சிறியதாக்க நாம் தனியே கோப்பறையில் இட்டு சுருக்க (Zip) கோப்பறையாக உருவாக்குவோம், அப்போதும் குறிப்பிட்ட அளவே குறையும். இதுபோன்ற சிக்கல்களை தீர்க்க PocoDoc Lite என்னும் மென்பொருள் உதவி செய்கிறது. இந்த மென்பொருள் மூலம் வேர்ட் மற்றும் பிடிஎப் பைல்களில் அளவை மிக எளிமையாக குறைக்க முடியும். மேலும் இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும்.
மென்பொருளை தரவிறக்க சுட்டி
மென்பொருளை பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் கணினியை ஒருமுறை மறுதொடக்கம் செய்து கொண்டு, இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் எந்த கோப்பினை சுருக்க வேண்டுமோ அதை தேர்வு செய்யவும். பின் Optimize என்னும் பொத்தானை அழுத்தவும்.
சில நொடிகளில் உங்களுடைய கோப்பானது சுருக்கப்பட்டு விட்டது என்ற செய்தி வரும். பின் நீங்கள் கோப்பினை தெரிவு செய்த இடத்தில் மற்றொரு கோப்பு சேமிக்கப்பட்டு இருக்கும். இரண்டு கோப்புகளுக்கும் உள்ள அளவு முற்றிலும் மாறுபடும். இந்த மென்பொருள் வேர்ட் மற்றும் பிடிஎப் பைல்களின் அளவை சுருக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இந்த மென்பொருள் மூலம் எம்.எஸ். ஆப்பிஸ் டாக்குமெண்ட்களையும் சுருக்க முடியும். பவர்பாயின்ட், எக்சல் போன்ற பைல்களின் அளவையும் சுருக்க முடியும்.
1 Comments:
மிகவும் பயனுள்ள தகவல்கள் சகோ. நன்றிகள் !
******************************'
குற்றம் செய்த பிள்ளைகளை போலிசில் கொடுத்த பெற்றோர்கள்
Post a Comment