தமிழில் கணினி செய்திகள்

MP3 பாடல்களில் தரத்தை உயர்த்த

♠ Posted by Kumaresan Rajendran in , at June 21, 2011
நாம் சாதரணமாகவே பாடல்களை கேட்டும் போது அதனுடைய தரத்தை கண்டுபிடிக்க முடியும். MP3 பாடல்கள் இரண்டு விதமாக உள்ளது, ஒன்று அதிகஅளவுடைய பைல் எந்த வித மாற்றமும் இல்லாமல் இருக்கும். மற்றொன்று அதனுடைய அளவு குறைவாகவும் பாடல்களின் தரம் குறைவாக இருக்கும். பாடல்களில் அளவினை வைத்தே அதனுடைய தரத்தை அறிந்து கொள்ள முடியும். அதிக அளவுடைய பாடல்களே சிறப்பாக இருக்கும். ஒரு சிலருக்கு குறைவாக அளவுடைய பாடல்களை வைத்துக்கொள்ளவே விரும்புவார்கள். குறிப்பாக செல்போன்களில் பாடல்களை வைத்திருப்பவர்கள் குறைவான அளவுடைய பாடல்களையே வைத்துக்கொள்ள விரும்புவார்கள். அதுபோன்றவர்களுக்கும் சிறிய அளவுடைய பாடலை பெரிய அளவாக்க நினைப்பவர்களுக்கும் இந்த மென்பொருள் பயனுள்ளதாகும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பின் ஒப்பன் செய்யவும். இது ஒரு பேர்ட்டபிள் மென்பொருள் ஆகும். பின் பாடலை தேர்வு செய்யவும். மொத்தமாகவும் ட்ராக் அண்ட் ட்ராப் செய்து கொள்ளவும் முடியும். பின் வேண்டிய மாற்றங்களை செய்து விட்டு இறுதியாக Process என்னும் பொத்தானை அழுத்தவும்.


சிறிது நேரத்தில் பாடல் கன்வெர்ட் செய்யப்பட்டு நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் சேமிக்கப்பட்டு இருக்கும். இரண்டு பைல்களுக்கும் இடையேயான வேறுபாட்டை உங்களால் காண முடியும். இந்த மென்பொருள் பல நேரங்களில் நமக்கு உதவியாக இருக்கும்.

0 Comments:

Post a Comment