தமிழில் கணினி செய்திகள்

Youtube திரையை மாற்றியமைக்க-Youtube Embeded Code

♠ Posted by Kumaresan Rajendran in ,, at June 22, 2011
நாம் அனைவரும் வீடியோவினை பார்க்க அதிகமாகநாடிம்தளம் யூடியூப் ஆகும். இந்த தளத்தில் என்னற்ற வீடியோக்கள் உள்ளன. அவற்றில் ஒரு சில வீடியோக்களை புக்மார்க் செய்து வைத்திருப்போம். யூடியூப் வீடியோவினை நாம் முழுத்திரையிலையோ அல்லது குறிப்பிட்ட வடிவில் மட்டுமே பார்க்க முடியும். யூடியூப் வீடியோக்களை ஆன்லைனில் இருந்தபடியே நமக்கு விருப்பமான வடிவில் பார்க்க முடியும். மேலும் இதனுடைய தோற்ற திரையையும் நம்முடைய விருப்பபடி மாற்றியமைத்துக்கொள்ள முடியும். இதற்கு Youtube Embeded Code என்னும் மென்பொருள் உதவி செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, பின் ஒப்பன் செய்யவும். பின் தோன்றும் விண்டோவில் உங்களுக்கு விருப்பமான யூடியூப் வீடியோவில் URLயை உள்ளிடவும். பின் அகலம், உயரம், நிறம் போன்றவற்றை மாற்றியமைத்துக்கொள்ளவும். பின் Generate Code என்னும் பொத்தானை அழுத்தி அந்த XHTML கோடினை கணினியில் சேமித்து வைத்துக்கொள்ளவும்.


வேண்டுமெனில் குறிப்பிட்ட திரையிலேயே Perview பார்த்துக்கொள்ளவும் முடியும். பின் சேமித்த XHTML  பைலை உலவியில் ஒப்பன் செயதால் நீங்கள் வடிவமைத்த வடிவில் வீடியோவானது இருக்கும். இனி வழக்கம் போல வீடியோவினை காண முடியும். மாணவர்கள் புராஜெக்ட் செய்யும் போது அதில் யூடியூப்  வீடியோவினை உள்ளினை இந்த வழிமுறை மிகவும் உதவியாக இருக்கும்.

1 Comments:

Post a Comment