♠ Posted by Kumaresan Rajendran in Picasa-பிகாசா,Tips-டிப்ஸ் at June 14, 2011
பிகாசா தளமானது போட்டோக்களை பரிமாறிக்கொள்ள உதவும் தளம் ஆகும். இந்த தளத்தை முதலில் ஐடியாலேப் என்னும் நிறுவனம் 2002ம் ஆண்டு வடிவமைத்தது. பின் கூகுள் நிறுவனம் 2004ம் ஆண்டு பிகாசா நிறுனத்தை தன்னுடன் இணைத்துக்கொண்டது. கூகுள் அக்கவுண்டில் இருக்கும் உங்களுடைய புகைப்படங்கள் அனைத்தும் பிகாசாவில் இருக்கும். நம்முடைய கூகுள் கணக்கில் பதிவேற்றும் படங்களும் பிகாசாவிலேயே இருக்கும். வேண்டும் போது இந்த படங்களை காண முடியும், வேண்டுமெனில் இந்த படங்களை பதிவிறக்கமும் செய்து கொள்ள முடியும். நம்முடைய கூகுள் கணக்கில் பல்வேறு படங்கள் இருக்கும், அவைகளை பதிவிறக்கம் செய்ய முற்படும் போது பலர் தோல்வியினையே சந்திப்பார்கள், கூகுள் கணக்கில் உள்ள படங்களை எளிமையாக தரவிறக்கம் செய்ய முடியும்.
முதலில் உங்களுடைய கூகுள் கணக்கை ஒப்பன் செய்யவும், பின் Photo என்னும் தேர்வை அழுத்தவும். பின் நீங்கள் பதிவிறக்கம் செய்ய விரும்பும் போட்டோவினை தேர்வு செய்யவும்.
பின் Actions என்னும் தேர்வினை அழுத்தி Download photo என்பதை கிளிக் செய்யவும். தற்போது போட்டோவானது பதிவிறக்கம் செய்யப்படும். இதே போல அனைத்து படங்களையுமே பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
1 Comments:
You tubeயிலிருந்து பாடல் videoக்களை idm(internet download manager) என்பதின் மூலம் download செய்தேன். பாடல்களை கணினியில் பார்க்க முடிந்தது. அவற்றை dvd disc ஒன்றில் write செய்தேன். அதை கொண்டு போய் dvd playerயரில் போட்டு tvயில் பார்க்க விரும்பினேன். ஆனால் பாடல்களை பார்க்க முடியவில்லை. Format was not supported. எனக்கு தெரிந்த ஒருவர் dvdயில் பதிவு செய்யப்பட்ட பாடல்களின் formatஐ பார்த்தார். அவை .flv என்ற formatல் இருந்தன. அவர் என்னிடம், "idm(internet download manager)மூலம் downloadசெய்தால் அது .flv என்ற formatட்டில்தான் வீடியோவை download செய்து தரும். .FLV formatஐ டிவியில் பார்க்க முடியாது. .FLV formatஐ mp4ஆக மாற்ற வேண்டும் என்றார். அதையும் இணையதளத்தில் இருந்து பெறப்பெற்ற software ஒன்றின் மூலம் செய்தேன். MP4 formatல் மாற்றம் செய்த பிறகும் dvd playerயரில் போட்டு tvயில் பார்த்தால் tvயில் video தெரியவில்லை. சப்தமும் கேட்கவில்லை. Format not supported என்று message ஒரு டிவியில் ஒரு வருகின்றது.
YOu tube videoவை இணையத்தில் இருந்து download செய்து அதை நான் என் tvயில் காண வேண்டும். அதற்கு எந்த formatல் youtube videoவை download செய்ய வேண்டும். அந்த குறிப்பிட்ட formatயிலேயே download செய்து தர உதவும் softwareஎது? அதை எந்த தளத்தில் இருந்து பெற வேண்டும்?
Please tell me...
Post a Comment