தமிழில் கணினி செய்திகள்

ஆப்பிஸ் 2007 உதவியுடன் இமேஜ் பைலை வேர்ட் பைலாக மாற்ற ஒரு எளிய வழி

♠ Posted by Kumaresan R in ,, at 10:05 PM
நம்முடைய சான்றிதழ்களையோ அல்லது முக்கியமான கோப்புகளையோ ஸ்கேன் செய்து இமேஜ் பைல் பார்மெட்டில் வைத்திருப்போம், அவற்றில் எதாவது மாற்றம் செய்ய வேண்டுமெனில் நாம் போட்டோசாப் அல்லது எதாவது ஒரு போட்டோ எடிட்டிங் மென்பொருளின் உதவியை நாடிச்செல்ல வேண்டும். அவ்வாறு இல்லாமல் இமேஜ் டாக்குமெண்ட்களை டெக்ஸ்ட் கோப்பாக மாற்றியும் அதில் தேவையான மாற்றங்களை செய்ய முடியும். இதற்கு ஆப்பிஸ் 2007 வழிவகை செய்கிறது. இதன் மூலம் எந்த வித மூன்றாம் தர மென்பொருளின் உதவியும் இல்லாமல் இமேஜ் பைல்களை டெக்ஸ்ட் பைல்களாக மாற்றிக்கொள்ள முடியும். இதற்கு உங்களுடைய கணினியில் ஆப்பிஸ் 2007 நிறுவியிருக்க வேண்டும்.

ஆப்பிஸ் 2007 யை கணினியில் நிறுவிய பின் Start > Control Panel > Programs and Features என்பதை தேர்வு செய்யவும். தேர்வு செய்தவுடன் தோன்றும் விண்டோவானது கணினியில் நிறுவியிருக்கும் அப்ளிகேஷன்களை மாற்றம் செய்வதற்கான விண்டோ ஆகும். அதில் Microsoft Office Professional Plus 2007 என்ற தேர்வின் மீது வலது கிளிக் செய்து தோன்றும் விண்டோவில் Change என்னும் பொத்தானை அழுத்தவும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Add or Remove Features என்னும் ஆப்ஷனை தேர்வு செய்து Continue என்னும் பொத்தானை அழுத்தவும்.


அடுத்து தோன்றும் விண்டோவில் தேர்வு ஆகாமல் உள்ள ஆப்பிஸ் பயன்பாடுகளை தேர்வு செய்யவும். அதற்கு தேர்வு ஆகாமல் உள்ள ஆப்பிஸ் பயன்பாடுகளின் மீது கிளிக் செய்து Run from my Computer என்பதை தேர்வு செய்யவும். பின் Continue பொத்தானை அழுத்தவும்.


சிறிது நேரத்தில் ஆப்பிஸ் பயன்பாடுகள் உங்கள் கணினியில் நிறுவப்படும். பின் Start > All Programs  > Microsoft Office Office > Microsoft Office office Tools > Microsoft Office Document Imaging என்பதை தேர்வு செய்யவும்.


பின் உங்களுடைய படத்தினை ஒப்பன் செய்யவும். சாதரண படங்களை ஒப்பன் செய்ய முடியாது. .tif பைல் பார்மெட்டுடைய படங்களை மட்டுமே ஒப்பன் செய்ய முடியும். வேறொரு பைல் பார்மெட்டில் உள்ள படங்களை விண்டோஸ் பெயிண்ட் உதவியுடன் .tif பைல் படமாக மாற்றிக்கொள்ளவும். பின் படத்தை ஒப்பன் செய்யவும். அடுத்து Tools என்னும் தேர்வு மெனுவினை தேர்வு செய்து தோன்றும் தேர்வு வரிசையில் Recognize Text Using OCR என்பதை தேர்வு செய்யவும். பின் உங்களுடைய படமானது டெக்ஸ்டாக மாற்றப்படும். பின் Send Text to Word என்னும் தேர்வினை அழுத்தி வேர்ட் கோப்பாக மாற்றிகொள்ளவும். இவ்வாறு இமேஜ் பைலை வேர்ட் பைலாக எளிமையாக மாற்றிக்கொள்ள முடியும்.

1 comments:

நான் விண்டோஸ் XP பயன்படுத்துகிறேன். தாங்கள் சொன்னது போல் MS OFFICE 2007-ல் Add or Remove Features செலக்ட் செய்து CONFIGURE செய்தேன், வெற்றிகரமாக configure ஆயிற்று. ஆயினும் Microsoft Office Document Imaging அங்கு வரவில்லை. தாங்கள் சொன்னது விண்டோஸ் 7 என்று நினைக்கிறேன். அதை XP-யில் எப்படி வர வைப்பது.

Post a Comment