தமிழில் கணினி செய்திகள்

துப்பாக்கி விளையாட்டு - குரோம் உலவியில்

♠ Posted by Kumaresan Rajendran in , at June 06, 2011
இணைய பயன்பாடுகள் பெருகிகொண்டு வரும் இந்த நேரத்தில், ஆன்லைன் விளையாட்டுகளும் அதிகரித்து கொண்டே உள்ளன. அந்த வகையில் பல்வேறு நிறுவனங்கள் ஆன்லைன் மூலமாக விளையாட்டுகளை இலவசமாக வழங்கி வருகிறன. அதேபோல் கூகுள் நிறுவனமும் குரோம் உலவியின் மூலமாக விளையாட்டுகளை வழங்கி வருகிறது. இதன் மூலமாக குரோம் உலவியின் துணையுடன் விளையாட்டுகளை விளையாட முடியும். கூகுள் நிறுவனம் பல்வேறு விளையாட்டுகளை இலவசமாக தருகிறனர். அந்த வகையில் நாம் தற்போது பார்க்க இருக்கும் விளையாட்டுதான் Private Joe.

விளையாட்டிற்கான சுட்டி


இந்த விளையாட்டை குரோம் உலவியில் பதிந்து கொள்ளவும். பின் ஒரு முறை குரோம் உலவியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். இப்போது தோன்றும் விண்டோவில் Private Joe ஐகானை கிளிக் செய்து செய்து விளையாட்டை திறக்கவும். அல்லது இந்த சுட்டியை கிளிக் செய்து ஒப்பன் செய்யவும்.


இந்த விளையாட்டானது எதிரிகளை வீழ்த்தி அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவது ஆகும். இந்த விளையாட்டில் மொத்தம் 8நிலைகள் உள்ளன. கீழே காணும் படத்தை போல ஒவ்வொரு நிலையை முடித்தவுடன் தோன்றும்.


இந்த விளையாட்டில் சுடுவதற்கு C பொத்தானையும், தாவுவதற்கு X யையும் நகர்ந்து செல்ல வலது மற்றும் இடது திசை பொத்தான்களையும் பயன்படுத்தவும். இந்த விளையாட்டில் ஒவ்வொரு நிலையிலும் பல்வேறு இடையூறுகள் உள்ளன அதனை எதிர்கொள்ள நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் துப்பாக்கி மட்டும் தான். இந்த விளையாட்டு அருமையாக உள்ளது. விளையாடி பாருங்கள்.

4 comments:

விளையாட்டை விளையாட்டாக பேரனிடம் காண்பித்தேன். இப்போது கணிணியில் எனனை உட்கார விடமாட்டேன் என்கிறான்.
இரா.குமரேசரே! ம்.

வருகைதந்து பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி திரு. ராஜா, திரு.மணி அவர்களே.

Post a Comment