தமிழில் கணினி செய்திகள்

சிகிளினருக்கு மாற்று மென்பொருள் - AppCleaner

♠ Posted by Kumaresan Rajendran in at June 27, 2011
கணினியில் உள்ள குப்பைகளை நீக்க பெரும்பாலான கணினி பயன்பாட்டாளர்களால் பயன்படுத்தபடுவது சிகிளினர் மட்டுமே ஆகும். ஏன் இந்த மென்பொருள் மட்டும்தான் கணினியில் உள்ள தேவையற்ற பைல்களை நீக்க பயன்படும் மென்பொருளா என்றால் இல்லை, இன்னும் இதுபோன்ற பல்வேறு இலவச மென்பொருள்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் ஆப்கிளினர் இந்த மென்பொருள் சிகிளினரை விட சிறந்த மென்பொருள் என்று கூறமுடியாவிட்டாலும். அதனுடன் போட்டி போடும் அளவிற்கு சிறப்பான மென்பொருள் ஆப்கிளினர்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். இந்த மென்பொருள் அளவில் சிறியதாகும். இதுஒரு இலவச மென்பொருள் ஆகும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் தோன்றும் விண்டோவில் Cleaner என்னும் டேப்பினை தேர்வு செய்து Analyze என்னும் பொத்தானை அழுத்தி கணினியில் உள்ள குப்பைகளை முன்னோட்டம் பார்த்து பின் Clean என்னும் பொத்தானை அழுத்தி குப்பைகளை நீக்கி கொள்ளவும்.


மேலும் இந்த மென்பொருள் மூலம் கணினியில் நிறுவிய மென்பொருளையும் நீக்கி கொள்ள முடியும். விண்டோஸ் ரிஸிஸ்ட்டரியில் தேங்கியுள்ள குப்பைகளை நீக்கவும் தனியே இந்த மென்பொருளில் வசதி உள்ளது. இந்த மென்பொருளை பயன்படுத்தி பாருங்கள் பயனுள்ளதாக இருக்கும்.

0 Comments:

Post a Comment