அப்ளிகேஷன்களை விரைவாக அணுகுவதற்காக டெஸ்க்டாப்பில் சாட்கட் ஐகான்களை உருவாக்கி பயன்படுத்தி வருவோம். பிடிக்கவில்லையெனில் ஐகான்களை நீக்கி விடுவோம். ஒருசிலரது கணினியில் பார்த்தால் டெஸ்க்டாப் முழுவதும் வெறும் ஐகான்களாக மட்டுமே இருக்கும். இந்த டெஸ்க்டாப் ஐகான்களால் ஒரு சில நேரங்களில் நாமே குழம்பிவிடுவோம். நாம் அடிக்கடி பயன்படுத்தும் சாட்கட் ஐகான்களை மட்டுமே டெஸ்க்டாப்பில் வைப்பது பயன்படுத்துவதே என்னை பொறுத்தவரை சிறந்தது ஆகும். அவ்வாறு நாம் பயன்படுத்தும் ஐகான்களை மறைத்து வைக்கவும் முடியும். இதனால் கணிணியில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. டெஸ்க்டாப் ஐகான்களை மறைத்துவைக்க விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்திலேயே வழி உள்ளது. ஆனால் அதைவிட இந்த மென்பொருள் சிறப்பானது ஆகும்.
மென்பொருளை தரவிறக்க சுட்டி
மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, பின் ஒப்பன் செய்யவும். அதில் நேரத்தை தெரிவு செய்து கொள்ளவும். பின் நீங்கள் குறிப்பிட்ட நேரத்தில் டெஸ்க்டாப் ஐகான்கள் மறைக்கப்படும். பின் மெளசால் கிளிக் செய்வதன் மூலமாக டெஸ்க்டாப் ஐகான்களை உங்களால் காண முடியும். மேலும் டாஸ்க்பாரையும் மறைத்து வைத்துக்கொள்ள முடியும். இந்த அப்ளிகேஷனை நிறுத்த வேண்டுமெனில் Disable என்பதை தேர்வு செய்யவும். அப்போது அந்த குறிப்பிட்ட அப்ளிகேஷன் நிறுத்தி வைக்கப்படும். இதுவும் ஒரு சின்ன ட்ரிக்தானே.
0 Comments:
Post a Comment