தமிழில் கணினி செய்திகள்

கணினியில் இருக்கு Junk பைல்களை நீக்கம் செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in at June 16, 2011
கணினியை தினமும் பயன்படுத்தும் போது பல்வேறு விதமான பைல்கள் கணினியில் குப்பையாக தேங்கி நிற்கும். இதுபோன்ற பைல்களை கணினியை விட்டே அகற்ற எதாவதொரு கிளினர் மென்பொருளை பயன்படுத்தி வருவோம். நாம் அனைவரும் அறிந்த கிளினர் என்றால் அது சிகிளினர் மட்டுமே ஆகும். இது தவிர இன்னும் சில மென்பொருள்களும் இணையத்தில் இலவசமாக கிடைக்கிறன. அவற்றில் ஒன்றுதான் Sys Optimizer ஆகும். இது கணினியில் உள்ள தேவையற்ற Junk பைல்களை கணினியை விட்டு அகற்ற பயன்படுகிறது. மேலும் இணையம் பயன்படுத்தும் போது Temp மற்றும் Junk பைல்கள் கணினியில் அதிகம் தேங்கும் இவற்றை கணினியை விட்டு அழிக்க இந்த Sys Optimizer மென்பொருள் உதவுகிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் கணினியை ஒரு முறை மறுதொடக்கம் செய்யவும். பின் Sys Optimizer மென்பொருளை ஒப்பன் செய்யவும். தோன்றும் விண்டோவில் Analyse என்னும் பொத்தானை அழுத்தவும் பின் Delete என்னும் பொத்தானை அழுத்தி பைல்களை நீக்கம் செய்து கொள்ளவும். இதன் மூலமாக கணினினுடைய செயல்பாட்டில் மாற்றத்தை காண முடியும். இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும். அளவில் மிகச்சிறிய மென்பொருள் ஆகும்.

5 Comments:

நல்லதொரு பதிவு சகோ. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்

பயனுள்ள பதிவு,
மேலும் ஒரு சின்ன வேண்டுகோள், இந்த லிங்கை பாருங்கள்
http://tamil-computer.blogspot.com/2011/06/blog-post_17.html

வருகைதந்து பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி, இக்பால் செல்வன்
சு. ராபின்சன்
Gangaram.

Post a Comment