தமிழில் கணினி செய்திகள்

இமேஜ் பைல்களை பிடிஎப் கோப்பாக மாற்ற

♠ Posted by Kumaresan Rajendran in ,
சான்றிதழ்கள், புத்தகங்கள் நகலெடுத்து (Scan) தனித்தனி இமேஜ் பைலாக வைத்திருப்போம். மேலும் இதுபோன்று முக்கியமான கோப்புகளை பிரதியெடுத்து இமேஜ் பைலாக வைத்திருப்போம். அவை அனைத்தையும் ஒரே கோப்பாக ஒன்றினைக்க வேண்டுமெனில் நாம் அந்த இமேஜ் பைல்களை பிடிஎப் கோப்பாக மாற்றினால் மட்டுமே முடியும். இமேஜ் கோப்புகளை பிடிஎப் கோப்பாக மாற்ற ஒரு இலவச மென்பொருள் வழிவகை செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி 


மென்பொருளை சுட்டியில் குறிபிட்ட தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து படத்தினை தேர்வு செய்து பின் Convert Now என்னும் பொத்தானை அழுத்தி கன்வெர்ட் செய்து கொள்ளவும்.


Setting பொத்தானை அழுத்தி Security Settings எனும் டேப்பினை கடவுச்சொல்லை உள்ளிட்டு இறுதியாக Convert Now பொத்தானை அழுத்தவும். தற்போது கடவுச்சொல் குறிப்பிட்ட பிடிஎப் கோப்பிற்கு கடவுச்சொல் உள்ளிடப்பட்டு இருக்கும். மேலும் குறிப்பிட்ட பிடிஎப் கோப்பிற்கு வாட்டர்மார்க் இட்டுக்கொள்ளவும் முடியும்.

படங்களின் வண்ணங்களை மாற்ற

எந்த ஒரு தளத்தை பயன்படுத்த வேண்டுமானாலும் அதற்கு புதியதாக பயனர் கணக்கு ஒன்று உருவாக்க வேண்டும். அவ்வாறு உருவாக்கும் பயனர் கணக்குகளுக்கு படங்களை அமைக்க வேண்டும். அதே போன்று சோஷியல் தளங்களான முகநூல், டுவிட்டர், கூகுள்+ போன்ற தளங்களிலும் அடிக்கடி படங்களை பகிர்ந்து கொள்வோம். சாதரணமாக புகைப்படங்களை பகிர்ந்து கொள்வதற்கு பதிலாக அதனை மெறுகேற்றம் செய்து வண்ணமயமாக பகிர்ந்து கொண்டால் அழகாக இருக்கும். படங்களை வண்ணமயக்காக ஒரு இலவச மென்பொருள் வழிவகை செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திலிருந்து மென்பொருளை பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் படத்தினை ஒப்பன் செய்து பின் Randomize எனும் பொதியை கிளிக் செய்யவும். அடுத்தடுத்து கிளிக் செய்தால் படத்தின் வண்ணம் தொடர்ந்து மாற்றமடையும். 

பின் படத்தினை .jpg, .gif, .pcx, .png, .bmp, .tif, .tga போன்ற பார்மெட்களில் சேமித்துக்கொள்ள முடியும்.  படத்தினை திருப்பிகொள்ளும் வசதியும் இந்த மென்பொருளில் உள்ளது.

போட்டோக்களை அழகூட்ட XnRetro

செல்போன் மற்றும் டிஜிட்டல் கேமிரா மூலமாக எடுக்கும் படங்கள் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்காது, அதனை எடிட் செய்த பின்பே படங்கள் வண்ணமயமாக இருக்கும். படங்களை எடிட் செய்ய செல்போன்களுக்கு பல்வேறு இலவச அப்ளிகேஷன்கள் உள்ளது. அதுவும் ஆன்ட்ராய்ட் சாதனங்களுக்கு என்றால் போட்டோக்களை எடிட் செய்ய பல்வேறு இலவச மென்பொருள்கள் உள்ளன. ஆனால் கணினிக்கு விண்டோஸ் இயங்குதளத்திற்கு அவ்வாறு மென்பொருள்கள் இல்லை. ஏதோ ஒரிரண்டு மென்பொருள்கள் மட்டுமே உள்ளது, அதில் ஒன்றுதான் XnRetro.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திலிருந்து மென்பொருளை பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் XnRetro அப்ளிகேஷனை ஒப்பன் செய்து குறிப்பிட்ட படத்தை ஒப்பன் செய்யவும். பின் வேண்டிய எடிட்டிங் வேலைகளை செய்துவிட்டு பின் படத்தை சேமித்துக்கொள்ளவும். இது ஒரு இலவச மென்பொருள் ஆகும்.

இந்த மென்பொருளில் எடிட் செய்துவிட்டு நேரிடையாக சோஷியல் தளங்களில் பதிவேற்றம் செய்து கொள்ளவும் முடியும்.

PDF கோப்பினை கன்வெர்ட் செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in ,,
தற்போது அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்படும் ஒரே டாக்குமெண்ட் பார்மெட்டாக .pdf டாக்குமெண்ட் மாறி வருகிறது இதற்கு காரணம் பிடிஎப் பைல் பார்மெட்டில் உள்ள கோப்புகளை எளிதில் உடைத்து எடிட் செய்து விட முடியாது. மேலும் எதாவது ஒரு பிடிஎப் ரீடர் மென்பொருள் இருந்தால் போதும் பிடிஎப் பைலை ஒப்பன் செய்துவிடலாம். சரி இவ்வாறு பிடிஎப் கோப்பாக உருவாக்கும் டாக்குமெண்ட்களில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு அதனை சரி செய்ய வேண்டுமெனில் நாம் கண்டிப்பாக மூன்றாம் தர மென்பொருளின் உதவியை நாடிச் செல்ல வேண்டும்.

வேர்ட், இமேஜ், எச்டிஎம்எல் மற்றும் பல்வேறு டாக்குமெண்ட்களை நாம் பிடிஎப் கோப்பாக மாற்றி பயன்படுத்துவோம். அதில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமெனில் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி மென்பொருளை நாட வேண்டும் அதற்கு பதிலாக பிடிஎப் கன்வெர்ட் தொடர்பான அனைத்து வேலைகளையும் ஒரே மென்பொருளில் செய்ய முடியும் அந்த மென்பொருளின் பெயர்தான் PDFMate.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திலிருந்து மென்பொருளை பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து பின் Add PDF என்னும் பொத்தானை அழுத்தி பிடிஎப் பைலை தேர்வு செய்யவும். பின் எந்த பார்மெட்டில் கன்வெர்ட் செய்ய வேண்டுமோ அதை குறிப்பிட்டு பின் Convert என்னும் பொத்தானை அழுத்தவும். 

சிறிது நேரத்தில் கோப்பானது நீங்கள் குறிப்பிட்ட பார்மெட்டில் கன்வெர்ட் செய்யப்பட்டு நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் இருக்கும். பின் நீங்கள் அதை வழக்கம்போல் பயன்படுத்திக்கொள்ள முடியும். இது ஒரு இலவச மென்பொருள் ஆகும்.

இமேஜ் பைலை வேர்ட் பைலாக கன்வெர்ட் செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in ,,
நம்மிடம் இருக்கும் டாக்குமெண்ட்களை ஸ்கேன் செய்து வைத்திருப்போம், அதில் நாம் ஒரு சில எழுத்தையோ அல்லது வார்த்தையையோ மாற்ற வேண்டி இருக்கும். அவ்வாறு மாற்ற வேண்டிய டாக்குமெண்டை எளிமையாக மாற்ற முடியும். இதனை நாம் போட்டோசாப் அல்லது வேறு எதாவது போட்டோ எடிட்டிங் மென்பொருள் துணைகொண்டு மட்டுமே மாற்றுவோம் இதற்கு பதிலாக, இமேஜ் பைலை வேர்ட் அல்லது டெக்ஸ்ட் பைலாக மாற்றிக்கொள்ள முடியும். இவ்வாறு இமேஜ் பைலை வேர்ட் பைலாக ஆன்லைனிலேயே மாற்றம் செய்ய சுட்டி. இவ்வாறு செய்வதற்கு இணைய இணைப்பு கண்டிப்பாக தேவை இணைய இணைப்பு இல்லாமல் செய்ய ஒரு மென்பொருள் உதவி செய்கிறது. இந்த மென்பொருள் மூலமாக எளிதாக இமேஜ் பைலை வேர்ட் பைலாக மாற்ற முடியும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று மென்பொருளை தரவிறக்கம் செய்து பின் உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த மென்பொருளை ஒப்பன் செய்து குறிப்பிட்ட படத்தினை ஒப்பன் செய்யவும். பின் OCR என்னும் பொதியை அழுத்தவும். அந்த படமானது டெக்ஸ்ட் பைலாக மாற்றப்பட்டுவிடும். பின் Export Text into Microsoft Word என்னும் பொதியை அழுத்தி நேரிடையாகவே வேர்டில் தரவேற்றம் செய்து கொள்ள முடியும்.


மேலும் இந்த OCR to Word மென்பொருள் மூலமாகவே ஸ்கேன் செய்து வேர்ட் பைலாகவும் மாற்றிக்கொள்ள முடியும். இது ஒரு இலவச மென்பொருள் ஆகும்.


இந்த மென்பொருள் மூலமாக எளிமையாக இமேஜ் பைல்களை வேர்ட் பைலாக மாற்றிக்கொள்ள முடியும். இணைய இணைப்பு ஏதும் தேவை இல்லை.

எம்.எஸ்.ஆப்பிஸ் டாக்குமெண்ட்களில் இருந்து படங்களை(IMAGE) தனியாக பிரித்தெடுக்க

♠ Posted by Kumaresan Rajendran in ,
தற்போது பல்வேறு கோப்புகள் யாவும் ஆப்பிஸ் பார்மெட்டுகளிலேயே உருவாக்கப்படுகிறன. அதிலும் பல கோப்புகள் எம்.எஸ்.ஆப்பிஸ் மென்பொருளை பயன்படுத்தியே உருவாக்கப்படுகிறன. ஆப்பிஸ் கோப்புகள் (வேர்ட்,எக்சல்,பவர் பாயின்ட்) பலவும் படங்களுடன் இணைக்கப்பட்டு தற்போது உருவாக்கப்படுகிறன. இணையத்தில் நாம் ஒரு தகவலை தேடி செல்லும் போது பல கோப்புகள் வேர்ட்,எக்சல்,பவர் பாயின்ட் பார்மெட்களில் இருக்கும். அவ்வாறு உள்ள கோப்புகள் படங்களுடன்  மட்டுமே இருக்கும். அவற்றை  தனியே பிரித்தெடுக்க Image Extraction Wizard என்னும் மென்பொருள் உதவுகிறது. இதன் மூலம் படங்களை மட்டும் தனியே பிரித்தெடுக்க முடியும். உதாரணமாக நாம் ஒரு வேர்ட் டாக்குமெண்டை எடுத்துக்கொள்வோம் அதில் அதிகமான விளக்கப்படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன அவற்றை மட்டும் தனியே பிரித்தெடுக்க வேண்டுமெனில் தனித்தனி படங்களாக தேர்வு செய்து மட்டுமே சேமிக்க முடியும். அதற்கு பதிலாக ஒட்டுமொத்தாக அனைத்து படங்களையும் ஒரே சமயத்தில் பிரித்தெடுக்க முடியும். அதற்கு உதவும் மென்பொருள் தான் இந்த Image Extraction Wizard.

மென்பொருளை தரவிறக்க சுட்டி



மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒரு முறை கணினியை மறுதொடக்கம் செய்துவிட்டு பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.  பின் குறிப்பிட்ட ஆப்பிஸ் கோப்பினை தேர்வு செய்யவும். அடுத்து எந்த இடத்தில் சேமிக்க வேண்டும் என்பதையும் தெரிவு செய்து கொள்ளவும். அடுத்து Next என்னும் பொத்தானை அழுத்தவும்.


அவ்வளவு தான் இதே போல் அனைத்து விதமான ஆப்பிஸ் கோப்புகளில் உள்ள படங்களையும் தனியே பிரித்தெடுத்துக்கொள்ள முடியும். இந்த மென்பொருள் பல்வேறு விதமான ஆப்பிஸ் பைல் பார்மெட்களை சப்போர்ட் செய்யக்கூடியது ஆகும். இந்த மென்பொருள் 40+ மேற்பட்ட ஆப்பிஸ் பைல் பார்மெட்டுகளை சப்போர்ட் செய்யக்கூடியது ஆகும்.

படங்களை முன்னோட்டம் பார்க்க - Fast Preview

நம்முடைய கணினியில் என்னற்ற படங்களை வைத்திருப்போம் அவற்றை பற்றிய விவரங்கள் அறிய வேண்டுமெனில் நாம் அதன் ப்ராபட்டிஸ்யை பார்த்து மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். அதுவும் அவ்வளவாக தெரிந்து கொள்ள வாய்ப்பு இருக்காது.ஒரு குறிப்பிட்ட அளவு விவரங்களை மட்டுமே காண முடியும். படங்களை முன்னோட்டம் பார்க்க வேண்டுமென்றாலும் அதனை ஒப்பன் செய்து மட்டுமே பார்க்க வேண்டும். படங்களின் முழுவிவரங்களை அறிந்து கொள்ள் Fast Preview என்னும் மென்பொருள் உதவி செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒரு முறை கணினியை மறுதொடக்கம் செய்து கொண்டு, பின் வேண்டிய படத்தின் மீது வலது கிளிக் செய்து தோன்றும் விண்டோவில் போட்டோவினை ப்ரிவியூ பார்த்துக்கொள்ள முடியும். படத்தின் ப்ராபட்டிஸ்யை தேர்வு செய்து, பின் FastPreview என்னும் டேப்பினை அழுத்தி குறிப்பிட்ட படத்தினுடைய முழுவிவரங்களையும் அறிந்து கொள்ள முடியும்.


படங்களின் விவரங்களை முழுமையாக அறிந்து கொள்ள இந்த மென்பொருள் மிகவும் உதவியாக இருக்கும். இந்த மென்பொருள் அளவில் சிறியதாகும். மேலும் இது இலவச மென்பொருள் ஆகும்.

போட்டோக்களை அழகுபடுத்த Ashampoo Photo Commander 8 - லைசன்ஸ் கீயுடன் பதிவிறக்கம் செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in ,
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், என்னுடைய வலைப்பூவில் கடந்த நான்கு ஐந்து பதிவுகள் விண்டோஸ் சர்வர் 2008 னை பயன்படுத்தி எழுதி வந்தேன். இதற்கு காரணம் கணினி பயன்பாட்டில் மற்றவர்களுக்கு உள்ள ஆர்வத்தை போன்றே எனக்கும் உள்ள ஆர்வமே ஆகும். என்னதான் இந்த விண்டோஸ் சர்வரில் உள்ளது என்று பார்த்துவிடுவோம் என்று களமிறங்கினேன். கணினியில் முதல்முறையாக நிறுவினேன் தொடக்கத்திலேயே பிரச்சினை ஆரம்பம் ஆகியது, சரியான ஆண்டிவைரஸ் மென்பொருள்கள் கிடைக்கவில்லை, ஒரு வழியாக இணையத்தில் போராடி ஒரு ஆண்டிவைரஸ் மென்பொருளை தேடிப்பிடித்தேன் அதன் பெயர் ClamWin  சரி பிரச்சினை தீர்ந்துவிட்டது என்றால் இல்லை எந்த மென்பொருளை நிறுவினாலும். ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை சப்போர்ட் செய்ய முடியவில்லை என்ற கோளாரு செய்தியே தோன்றும். ஒரு வழியாக இரண்டு வாரங்கள் இந்த விண்டோஸ் சர்வர் 2008 டுடன் போராடினேன், சரி இனி இதை வைத்து நம்மால் காலத்தை கடத்த முடியாது என்று என்னி மீண்டும் பழைய படியே விண்டோஸ்7க்கே மாறிவிட்டேன். சரி இன்றைய பதிவிற்கு செல்வோம்.

போட்டோக்களை அழகுப்படுத்தவும், மாற்று வேலைகளை செய்யவும் இணையத்தில் பல்வேறு மென்பொருள்கள் கிடைக்கிறன. அதுவும் இலவசமாக நிறைய மென்பொருள்கள் கிடைக்கிறன. இவற்றில் வசதிகள் யாவும் குறைவு. போட்டோக்களை எடிட் செய்ய புகழ்பெற்ற மென்பொருள் போட்டோசாப் ஆகும். இந்த மென்பொருளை தான் தற்போது அதிக இடங்களில் பயன்படுத்தி வருகிறனர். போட்டோக்களை எடிட் செய்ய உதவும் மற்றொரு மென்பொருள்தான் இந்த Ashampoo Photo Commander 8 ஆகும். இந்த மென்பொருளுடைய சந்தை மதிப்பு £29.99 ஆகும். இதனை தற்போது இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

மென்பொருளை பதிவிறக்கம் செய்ய சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று மென்பொருளை பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவவும். கடைசியாக நிறுவி முடிக்கும் போது லைசன்ஸ் கீயை பெறுவதற்கான விண்டோ தோன்றும் அதில் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். பின் உங்களுடைய மின்னஞ்சலுக்கு ஒரு லிங் அனுப்பபடும் அதில் சுய விவரங்களை உள்ளிடவும். இறுதியாக உங்களுக்கான லைசன்ஸ் கீ கிடைக்கும். APHCFF-7770EC-3FD08A  மென்பொருளுக்கான இலவச லைசன்ஸ் கீ இதுபோன்ற அமைப்பில் கிடைக்கும். அந்த கீயை பயன்படுத்தி மென்பொருளை முழுமையாக நிறுவிக்கொள்ளவும். இதில் கீயானது முழுமையாக தெரியாது மறைக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் அளவில் பெரியதாகும் 99.1 MB ஆகும்.


இந்த மென்பொருளை கணினியில் நிறுவிய பிறகு இந்த மென்பொருளை ஒப்பன் செய்யவும். இதில் தோன்றும் ஆப்ஷனை பயன்படுத்தி போட்டோக்களை எடிட் செய்து கொள்ள முடியும். படங்களை எடிட் செய்யவும், அளவினை மாற்றியமைக்கவும், கணினி திரையை படம் பிடிக்கவும். புதியதாக ஒரு படத்தை உருவாக்கவும், சீடி/டிவிடி க்களில் படங்களை பதிவேற்றவும். படங்களை slideshow வாக உருவாக்கவும் இந்த மென்பொருள் உதவி செய்கிறது. மேலும் பல்வேறு வசதிகள் இந்த மென்பொருளில் உள்ளது. பயன்படுத்தி பார்த்துவிட்டு உங்கள் பதிலை கூறவும். இந்த மென்பொருள் பயனளிக்க கூடியது ஆகும்.