நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், என்னுடைய வலைப்பூவில் கடந்த நான்கு ஐந்து பதிவுகள் விண்டோஸ் சர்வர் 2008 னை பயன்படுத்தி எழுதி வந்தேன். இதற்கு காரணம் கணினி பயன்பாட்டில் மற்றவர்களுக்கு உள்ள ஆர்வத்தை போன்றே எனக்கும் உள்ள ஆர்வமே ஆகும். என்னதான் இந்த விண்டோஸ் சர்வரில் உள்ளது என்று பார்த்துவிடுவோம் என்று களமிறங்கினேன். கணினியில் முதல்முறையாக நிறுவினேன் தொடக்கத்திலேயே பிரச்சினை ஆரம்பம் ஆகியது, சரியான ஆண்டிவைரஸ் மென்பொருள்கள் கிடைக்கவில்லை, ஒரு வழியாக இணையத்தில் போராடி ஒரு ஆண்டிவைரஸ் மென்பொருளை தேடிப்பிடித்தேன் அதன் பெயர் ClamWin சரி பிரச்சினை தீர்ந்துவிட்டது என்றால் இல்லை எந்த மென்பொருளை நிறுவினாலும். ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை சப்போர்ட் செய்ய முடியவில்லை என்ற கோளாரு செய்தியே தோன்றும். ஒரு வழியாக இரண்டு வாரங்கள் இந்த விண்டோஸ் சர்வர் 2008 டுடன் போராடினேன், சரி இனி இதை வைத்து நம்மால் காலத்தை கடத்த முடியாது என்று என்னி மீண்டும் பழைய படியே விண்டோஸ்7க்கே மாறிவிட்டேன். சரி இன்றைய பதிவிற்கு செல்வோம்.
போட்டோக்களை அழகுப்படுத்தவும், மாற்று வேலைகளை செய்யவும் இணையத்தில் பல்வேறு மென்பொருள்கள் கிடைக்கிறன. அதுவும் இலவசமாக நிறைய மென்பொருள்கள் கிடைக்கிறன. இவற்றில் வசதிகள் யாவும் குறைவு. போட்டோக்களை எடிட் செய்ய புகழ்பெற்ற மென்பொருள் போட்டோசாப் ஆகும். இந்த மென்பொருளை தான் தற்போது அதிக இடங்களில் பயன்படுத்தி வருகிறனர். போட்டோக்களை எடிட் செய்ய உதவும் மற்றொரு மென்பொருள்தான் இந்த Ashampoo Photo Commander 8 ஆகும். இந்த மென்பொருளுடைய சந்தை மதிப்பு £29.99 ஆகும். இதனை தற்போது இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
மென்பொருளை பதிவிறக்கம் செய்ய சுட்டி
சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று மென்பொருளை பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவவும். கடைசியாக நிறுவி முடிக்கும் போது லைசன்ஸ் கீயை பெறுவதற்கான விண்டோ தோன்றும் அதில் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். பின் உங்களுடைய மின்னஞ்சலுக்கு ஒரு லிங் அனுப்பபடும் அதில் சுய விவரங்களை உள்ளிடவும். இறுதியாக உங்களுக்கான லைசன்ஸ் கீ கிடைக்கும். APHCFF-7770EC-3FD08A மென்பொருளுக்கான இலவச லைசன்ஸ் கீ இதுபோன்ற அமைப்பில் கிடைக்கும். அந்த கீயை பயன்படுத்தி மென்பொருளை முழுமையாக நிறுவிக்கொள்ளவும். இதில் கீயானது முழுமையாக தெரியாது மறைக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் அளவில் பெரியதாகும் 99.1 MB ஆகும்.
இந்த மென்பொருளை கணினியில் நிறுவிய பிறகு இந்த மென்பொருளை ஒப்பன் செய்யவும். இதில் தோன்றும் ஆப்ஷனை பயன்படுத்தி போட்டோக்களை எடிட் செய்து கொள்ள முடியும். படங்களை எடிட் செய்யவும், அளவினை மாற்றியமைக்கவும், கணினி திரையை படம் பிடிக்கவும். புதியதாக ஒரு படத்தை உருவாக்கவும், சீடி/டிவிடி க்களில் படங்களை பதிவேற்றவும். படங்களை slideshow வாக உருவாக்கவும் இந்த மென்பொருள் உதவி செய்கிறது. மேலும் பல்வேறு வசதிகள் இந்த மென்பொருளில் உள்ளது. பயன்படுத்தி பார்த்துவிட்டு உங்கள் பதிலை கூறவும். இந்த மென்பொருள் பயனளிக்க கூடியது ஆகும்.
1 Comments:
இந்த மென்பொருளை பயன்படுத்தி செய்த website
Post a Comment