தமிழில் கணினி செய்திகள்

ஆடியோ பைல்களை கன்வெர்ட் செய்ய ஒரு தளம்

♠ Posted by Kumaresan R in , at 1:59 PM
ஆடியோ பைல்களை ஒரு பைல் பார்மெட்டிலிருந்து மற்றொரு பைல் பார்மெட்டாக கன்வெர்ட் செய்ய வேண்டுமெனில் நாம் எதாவது ஒரு மென்பொருளின் உதவியை மட்டுமே நாடி செல்ல வேண்டும். ஆடியோ பைல்களை கன்வெர்ட் செய்ய இணையத்தில் அதிகமான மென்பொருள்கள் கிடைக்கிறன. மென்பொருள்களின் உதவி இல்லாமல் ஆடியோ பைல்களை கன்வெர்ட் செய்ய ஒரு தளம் உதவி செய்கிறது. நாம் சாதாரணமாக பாடல்களை கன்வெர்ட் செய்ய வேண்டுமெனில் கணினியில் மென்பொருளை நிறுவி அந்த மென்பொருளின் வாயிலாக கன்வெர்ட் செய்வோம். சில நேரங்களில் நமக்கு குறிப்பிட்ட மென்பொருளானது கிடைக்கபெறாது அதுபோன்ற சூழ்நிலைகளில் நண்பர்களின் உதவியை நாடி செல்ல வேண்டும். ப்ரெளங் மையங்களின் எந்தவித மென்பொருளையும் நிறுவ விடாமல் கணினியை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பார்கள் அதுபோன்ற கணினிகளில் எவ்வாறு பாடல்களை கன்வெர்ட் செய்வது என்றால் அதற்கு ஒரே வழி ஆன்லைன் மட்டுமே ஆகும். அந்த வகையில் பாடல்களை கன்வெர்ட் செய்ய ஒருதளம் உதவி செய்கிறது.

தளத்திற்கான சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, உங்களுடைய பாடல்கோப்பினை தேர்வு செய்யவும். பின் எந்த பார்மெட்டாக கன்வெர்ட் செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்யவும். அடுத்ததாக மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். கடைசியாக Switch my file என்னும் பொத்தானை அழுத்தவும். சில நொடிகளில் உங்களுடைய பாடலானது கன்வெர்ட் செய்யப்பட்டு உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு தரவிறக்கம் செய்வதற்கான சுட்டி அனுப்பி வைக்கப்படும். 


மேலும் ஒரு வசதி என்னவெனில் பாடலை நம்முடைய விருப்பபடி கன்வெர்ட் செய்து கொள்ளும் வசதியும் இந்த தளத்தில் உள்ளது. WAV, MP3, AAC, AIF, AU, FLAC, M4A, OGG, WMA, மற்றும் M4R போன்ற பைல் பார்மெட்களில் பாடல்களை கன்வெர்ட் செய்துகொள்ள முடியும். பாடல்களை எளிமையான முறையில் கன்வெர்ட் செய்து கொள்ள இந்த கொள்ள இந்த தளம் உதவியாக இருக்கும். மொபைல் போன்களுக்கு ஏற்றவாறு பாடல்களை கன்வெர்ட் செய்து கொள்ள இந்த தளம் மிகவும் உதவியாக இருக்கும்.

0 comments:

Post a Comment