தமிழில் கணினி செய்திகள்

உண்டிவில் விளையாட்டு - (Angry Birds)

நான் வலைப்பூ ஆரபித்து ஒரு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது, இதுவரை நான் 250+ பதிவுகளுக்கு மேல் எழுதியுள்ளேன் இவையாவும் தொழில்நுட்ப பதிவுகள் ஆகும். இந்த வலைப்பூவில் எனக்கு தெரிந்த தொழிநுட்ப செய்திகளை மட்டுமே பகிர்ந்து வருகிறேன். அவ்வபோது வாசகர்களின் குழப்பங்களையும் நிவர்த்தி செய்து வருகிறேன் என்னால் முடிந்த வரை. நாம் வலைபூ எழுதுகிறோம் என்றால் எதோ சாதித்து விட்டோம் என்று சிலரது நினைப்பு அது முற்றிலும் தவறானது. சரி நான் சொல்ல வந்த விசயத்தை சொல்லி விடுகிறேன். நான் இதுவரை எழுதிய பதிவுகள் அனைத்தும் ஒரே மாதிரி உள்ளதாக நிறைய வாசகர்கள் பின்னுட்டம் மூலம் தெருவித்தனர். ஒரு சில சக வலைப்பூ நண்பர்களும் தெரிவித்தனர். அப்போதுதான் தோன்றியது நாம் என்னவோ ஒரே மாதிரியான பதிகளை எழுதிகிறோம் என்று. பின்பு முடிவு செய்தேன் இனி கூட்டுசுவையாக பதிவுகளை எழுத வேண்டும் என்று. அந்த வகையில் தற்போது ஒரு அருமையான விளையாட்டை உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறேன்.

விளையாட்டுகான சுட்டி


இந்த நீட்சியை கூகுள் குரோம் உலவியில் பதிந்து கொள்ளவும். இந்த விளையாட்டானது குரோம் உலவியில் செயல்படுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விளையாட்டை எக்ஸ்புளோரர், நெருப்புநரி உலவிகளிலும் விளையாட முடியும். ஆனால் குரோம் உலவியில் இந்த விளையாட்டை விளையாட ஏதுவாக பல்வேறு அம்சங்கள் உள்ளன. பின் உலவியை ஒரு முறை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பின் விளையாட்டை துவக்கவும்.


இந்த விளையாட்டானது கிராமங்களில் விளையாடும் உண்டிவில் விளையாட்டு போன்றது, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விளையாடும் வகையில் உள்ளது. குறிபார்த்து எறிந்து குறிப்பிட்ட எதிரியை அழிக்க வேண்டும். இதன் மூலம் விளையாட்டின் அடுத்தடுத்த நிலைக்கு நீங்கள் செல்ல முடியும். விளையாட்டானது மிகவும் அருமையாக உள்ளது. விளையாடி பாருங்கள் பின்பு உங்கள் பதிலை கூறுங்கள்.

2 comments:

காலம் சென்ற பதிவு நண்பா. ஏற்கனவே இரு பிரபல்யமான தொழில்நுட்ப பதிபவர்கள் எழுதி விட்டனர்.மற்றவர்களின் பதிவையும் வசித்து பழகுங்கள்.

நீங்கள் சொல்வது உண்மைதான் நண்பரே, பொன்மலர்,வந்தேமாதரம் இரண்டிலும் கண்டேன்.

நான் கூறிய விளையாட்டு ஒன்றுதான். ஆனால் அவர்கள் தரவிறக்கம் செய்து பயன்படுத்துமாறு சொல்வார்கள்.ஆனால் நான் நீட்சியாக கொடுத்துள்ளேன். அதை கவனியுங்கள்.

பிற பதிவர்களுடைய பதிவுகளை பார்க்காமல் நான் இல்லை நண்பரே, உங்களை விட அதிகமாக அனைத்து தரப்பு பதிவர்களின் பதிவுகளை பார்ப்பவர்களுள் நானும் ஒருவன்.

Post a Comment