கணினியில் இயங்குதளத்தை நிறுவும்போதே வனதட்டினை பகுதிகளாக பிரித்து வைத்திருப்போம். இவ்வாறு வன்தட்டினை பிரித்து நாம் முழுமையாக பயன்படுத்த வேண்டுமெனில் அதனை ஒரு பைல் பார்மெட்டில் கன்வெர்ட் செய்ய வேண்டும். விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் புகழ்பெற்ற பைல் பார்மெட்கள் NTFS மற்றும் FAT பைல் பார்மெட்கள் ஆகும். இந்த பைல் பார்மெட்களை நாம் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டம் நிறுவும் போதே பிரித்து விடுவோம். NTFS பைல் பார்மெட்டானது நெட்வொர்க்கில் கோப்புகளை பரிமாறிக்கொள்ள பயன்படும். மற்றும் நெட்வொர்க்கில் கணினியை பரிமாறிக்கொள்ளவும் முடியும். முதலில் வன்தட்டினை பிரிக்கும் போது ஒரு சில நேரங்களில் FAT பைல் பார்மெட்டில் வன்தட்டினை பிரித்து விடுவோம். அதனை NTFS பைல் பார்மெட்டாக மாற்ற ஒரு இலவச மென்பொருள் உதவுகிறது.
மென்பொருளை தரவிறக்க சுட்டி
சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, உங்களது மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு ஒகே பொத்தானை அழுத்தவும். பின் உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு மென்பொருளை பதிவிறக்கம் செய்வதற்கான சுட்டி அனுப்பி வைக்கப்படும். அதை பயன்படுத்தி மென்பொருளை தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.
இந்த மென்பொருளை பயன்படுத்தி NTFS பைல் பார்மெட்டை FAT பைல் பார்மெட்டாகவும். FAT பைல் பார்மெட்டை NTFS பைல் பார்மெட்டாகவும் மாற்றி கொள்ள முடியும். எந்த வித தகவல் இழப்பும் இன்றி மாற்றிக்கொள்ள முடியும்.
3 Comments:
பகிர்வுக்கு நன்றி.. வாழ்த்துக்கள்
பயனுள்ள தகவல்
(NTFS to FAT32 கன்வெர்ட் நல்லா பயன் தந்தது நன்றி) நானும் பல வகையான மென்பொருட்கள் வைத்து படங்கள் டவுன்லோட் செய்து பார்த்தேன் ஆனால் எனக்கு எவ்வாறு அதை பயன்படுத்துவது என்று தெரியவில்லை நிங்கள்லாவது எனக்கு எந்த மென்பொருள் வேண்டும் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று விளக்கமாக சொல்லாவும்
Post a Comment