♠ Posted by Kumaresan Rajendran in Freewares,விண்டோஸ்-7 at May 23, 2011
விண்டோஸ் 7 ஆப்ரேடிங் சிஸ்ட்டத்தில் CTRL+ALT+DEL பொத்தான்களை ஒருசேர அழுத்தினால் Lock computer, Log off, Switch user, Change a Password மற்றும் Task manager போன்ற பயன்பாட்டு தேர்வுகள் தோன்றும் இவற்றை நமது விருப்பபடி மாற்றியமைத்து கொள்ள முடியும். மேலும் தேவையான தொகுப்பினை மட்டும் வைத்துவிட்டு மற்றவைகளை மறைத்து வைத்துகொள்ளவும் முடியும். கணினியானது மந்தநிலைக்கு செல்லும்போது உடனே CTRL+ALT+DEL பொத்தான்களை அழுத்தி கணினியில் இயங்கும் செயல்பாடுகளை நிறுத்த முயற்சிப்போம். சில நேரங்களில் கணினியை மறுதுவக்கம், மற்றும் வேறு பயனர்கணக்கில் நுழைய இந்த சுருக்குவிசை வழியையே மேற்கொள்ளுவோம். இதனை நம்முடைய விருப்பபடி மாற்றியமைத்து கொள்ள ஒரு மென்பொருள் உதவி செய்கிறது. இந்த மென்பொருளின் உதவியுடன் வேண்டிய பயன்பாட்டை மட்டும் வைத்துக்கொண்டு, மற்றவற்றினை மறைத்துக்கொள்ள முடியும்.
மென்பொருளை தரவிறக்க சுட்டி
மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும். Zip பைலாக இருக்கும் அதனை விரித்துகொண்டு, பின் அப்ளிகேஷன் மீது வலதுகிளிக் செய்து தோன்று விண்டோவில் Run as administrator என்னும் தேர்வினை தேர்வு செய்யவும். அடுத்ததாக தோன்றும் விண்டோவில் வேண்டிய தேர்வினை மட்டும் தேர்வு செய்து கொண்டு OK பொத்தானை அழுத்தவும். இப்போது CTRL+ALT+DEL கீகளை அழுத்தவும்.
இப்போது திரையை பார்த்தால் சாதாரணமாகவே தோன்றும், நீங்கள் தெரிவு செயத பயன்பாட்டை தவிர மற்ற அனைத்து பயன்பாடுகளும் திரையில் தெரியும். நான் அனைத்து பயன்பாடுகளை மூடிவிட்டேன் என்பது குறிப்பிடதக்கது. இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும். அளவில் சிறியதாகும் மேலும் இந்த மென்பொருளை கணினியில் நிறுவ தேவையில்லை. இதுவும் ஒரு ட்ரிக் தானே.
0 Comments:
Post a Comment