தமிழில் கணினி செய்திகள்

கணினியை விரைவுபடுத்த - SpeedUpMyPC 2011

♠ Posted by Kumaresan Rajendran in at May 11, 2011
கணினியில் தினமும் பல்வேறு மென்பொருள்களை நிறுவி பயன்படுத்தி வருகிறோம். உதாரணமாக இணையத்தில் கிடைக்கும் இலவச மென்பொருள்களை பதிவிறக்கம் செய்வோம் பிடித்தால் பயன்படுத்துவோம் இல்லையெனில் கணினியிலிருந்து நீக்கி விடுவோம் இவ்வாறு கணினியில் இருந்து நீக்கம் செய்யும் போது மென்பொருள் முழுமையாக கணினியை விட்டு நீங்காது ஒரு சில பைல்கள் கணினியிலேயே தங்கிவிடும், மேலும் கணினியை பயன்படுத்தும் போது நாம் பயன்படுத்தும் மென்பொருள்கள் கணினியில் தேவையற்ற குப்பைகளை சேமிக்கும், அதுவும் கணினியிலேயே தங்கிவிடும். கணினியானது அடிக்கடி கிராஷ் ஆகினால் விண்டோஸ் ரிஸிஸ்ட்டரியில் பைல்கள் சேதமாகும், இதுபோன்ற காரணங்களால் கணினியினுடைய செயல்பாட்டில் வேகம் குறையும். இதுபோன்ற நிலையில் கணினியில் உள்ள தேவையற்ற குப்பைகளை நீக்கினால் மட்டுமே கணினியானது மிக விரைவாக செயல்படும். இதுபோன்ற பைல்களை நீக்கி கணினியை சுத்தம் செய்ய வேண்டுமெனில் நாம் ஒரு மென்பொருளின் உதவியை கண்டிப்பாக நாடிச்செல்ல வேண்டும். இதற்கு மென்பொருள் உதவி செய்கிறது. அதுவும் தற்போது அந்த மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது.

மென்பொருளை இலவசமாக தரவிறக்கம் செய்ய சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று Get your FREE product என்னும் பொத்தானை அழுத்தவும். பின் உங்களது சுயவிவரங்களை உள்ளிடவும். அடுத்ததாக மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கான இணைப்பு கிடைக்கும். அதனை பயன்படுத்தி மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். அதிலேயே இலவச லைசன்ஸ் கீயும் கிடைக்கும் அதையும் குறித்து வைத்து கொள்ளவும். இவை அனைத்தும் நீங்கள் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். அதையும் பயன்படுத்தி கொள்ளலாம். 


இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும்.பின் லைசன்ஸ் கீயை பயன்படுத்தி மென்பொருளை முழுமையாக நிறுவிக்கொள்ளவும். இந்த மென்பொருளுடைய சந்தை விலை $39.95 ஆகும். இந்த மென்பொருளை ஜீன்1, 2011 வரை மட்டுமே இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும். கணினியில் உள்ள தேவையற்ற குப்பைகளை நீக்கம் செய்ய இந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

1 Comments:

பயனுள்ள தகவல். தகவலுக்கு நன்றி

Post a Comment