தமிழில் கணினி செய்திகள்

படங்களுக்கு அழகூட்ட - BorderMaker

♠ Posted by Kumaresan R in , at 3:59 AM
வீட்டு விழாக்கள், வெளி இடங்கள் செல்லும் போது படங்கள் எடுத்து கொள்வது தற்போது வழக்கமாகிவிட்டது. செல்போன் எப்படி மனித தேவைகளில் ஒன்றாக ஆகிவிட்டதோ அதே போல்தான் கேமராவும். எங்கு சென்றாலும் கேமரா எடுத்து சென்று புகைப்படம் எடுப்பது தற்போது வழக்கமாகிவிட்டது. அப்படியே கேமரா இல்லாவிட்டாலும் செல்போனிலாவது புகைப்படங்களை எடுப்போம். அவ்வாறு எடுக்கும் புகைப்படங்கள் அனைத்தும் சரியானவையாக இருக்காது. ஒவ்வொன்று ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். அனைத்து கணினி பயனாளர்களும் போட்டோசாப் புலி என்று கூற முடியாது. புகைப்படங்கள் முறையற்றதாக இருந்தால் அவற்றை போடோசாப் உதவியுடன் சரிசெய்துவிடலாம் என்று என்னுவோம், போட்டோசாப் மென்பொருளை முறையாக கற்காதவர்கள் என்ன செய்வது, போட்டோசாப் கற்கும் வரை, அடுத்த மென்பொருளின் உதவியை நாடி செல்ல வேண்டும். போட்டோக்களை அழகுபடுத்த இணையத்தில் பல்வேறு இலவச மென்பொருள் உள்ளன. அவை பயன்படுத்தவும் மிகவும் எளிமையானதாக உள்ளது. அந்த வகையில் நமக்கு போட்டோக்களை அழகூட்ட பயன்படும் மென்பொருள் தான் BorderMaker.

மென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி


மென்பொருளை தரவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். இந்த மென்பொருளை கணினியில் நிறுவ ஜாவா உங்கள் கணினியில் இருக்க வேண்டும். இந்த மென்பொருளானது விண்டோஸ், லினக்ஸ் (.dep), மேக் இயங்குதளங்கு கிடைக்கிறது. போர்ட்டபிள் மென்பொருளாகவும் இந்த BorderMaker கிடைக்கிறது. இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும்.


பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் சரி செய்ய வேண்டிய போட்டோவினை தேர்வு செய்யவும். பின் Setting என்னும் தேர்வை தேர்வு செய்து வேண்டிய மாற்றங்களை செய்ய முடியும். பார்டர், வாட்டர்மார்க் மற்றும் பல எடிட்டிங் வேலைகளை செய்ய இந்த மென்பொருள் சிறந்தது ஆகும். போட்டோக்களை மறுஅளவு செய்யவும் இந்த மென்பொருள் பயன்படுகிறது. இந்த மென்பொருளுடைய மிகமுக்கியமான அம்சமே பார்டர் அமைப்பது ஆகும்.

5 comments:

மிகவும் பயனுள்ள தகவல். தகவலுக்கு நன்றி

நீங்கள் தந்த மென்பொருளும் தகவலும் சிறப்பானது பயனுள்ளதே.
ஆனால் உங்களிடம் சலிப்படைய செய்யும் விடயம் என்னவெனில் உங்களின் எழுத்தின் தன்மை அனைத்தும் ஒரேமாதிரியாக உள்ளமையே
அதாவது முதலாவது பந்தி அந்த மென்பொருள் எதற்கு பயன்படும் என்பது பற்றியும் அடுத்து தரவிறக்க .....என தொடர்கிறது இதனை மாற்றுங்கள். மற்றும் template இணையும் பல மாதமாக மாறவில்லை அதனையும் மற்றிபருங்கள்
இவை எனது தனிப்பட்ட கருத்துக்களே..எனது கருத்தில் தவறும் இருக்கலாம்

போட்டோஷாப் மென்பொருளுக்கு மாற்று மென்பொருள் அருமை. நன்றி! நன்றி!!

வருகை தந்தமைக்கும் பின்னுட்டம் அளித்தமைக்கும் மிக்க நன்றி நதியா, மணி.

//உங்களின் எழுத்தின் தன்மை அனைத்தும் ஒரேமாதிரியாக உள்ளமை//

உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே. இனி இதை மாற்றிக்கொள்ள முயற்ச்சி செய்கிறேன்.

ஒன்று மற்றும் புரியவில்லை உங்கள் பெயரை வெளியிட ஏன் விரும்பவில்லை. உங்களுடைய ஜிமெயில் கணக்கு மூலமாக பின்னுட்டம் தெரிவியுங்கள்.

Post a Comment