தகவல்களை பறிமாற்றம் என்ற ஒன்றை மட்டுமே இன்றைய இணைய வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணம் ஆகும். இணையத்தில் தகவல்களை பரிமாற்றம் செய்துகொள்ள பல்வேறு விதமான தளங்கள் உதவி செய்கிறன. என்பது குறிப்பிடதக்கது. ஆனால் கணினிகளுக்கிடையே தகவல்களை பறிமாற்றம் செய்து கொள்ள வேண்டுமெனில் கணினி வலைப்பின்னல் மூலமாகவோ அல்லது இணையத்தின் உதவியுடனோ அல்லது, ஒரு கணினியில் உள்ள தகவல்களை நகல் எடுத்து அதனை மற்றொரு கணினியில் ஒட்ட வேண்டும். இவ்வாறு செய்வதால் காலவிரயம் மட்டுமே ஆகும். அளவில் மிகப்பெரிய கோப்புகளாக இருப்பின் அதை நகல் எடுத்து ஒட்டிக்கொள்ளலாம், ஆனால் சிறிய கோப்புகளை இதே நடைமுறையில் செய்வதால் கால விரயம் மட்டுமே ஆகும். காலவிரயத்தை தவிர்க்க ஒரு வழிஉள்ளது நாம் இதுபோன்ற கோப்புகளை இணையத்தில் பதிவேற்றம் செய்து பின் எளிதாக தரவிறக்கம் செய்துகொள்ள முடியும். இதற்கு ஒரு மென்பொருள் உதவிசெய்கிறது.
மென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி
மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொண்டு, மென்பொருளை திறக்கவும். இந்த மென்பொருளானது போட்டபிள் மென்பொருள் ஆகும். அதில் Create new upload session என்னும் தேர்வினை அழுத்தி உங்களுடைய டாக்குமெண்ட்டை தேர்வு செய்யவும். பின் Register என்னும் பொத்தானை அழுத்தி டாக்குமெண்ட்டை பதிவேற்றம் செய்து கொள்ளவும். பின் உங்களுடைய டாக்குமெண்ட்டிற்கென ஒரு URL கொடுக்கப்படும். அதை குறித்து கொள்ளவும்.
அடுத்த கட்டமாக பதிவிறக்க வேண்டிய கணினியில் மென்பொருளை நிறுவி Start a download from link என்னும் பொத்தானை அழுத்தி URL-யை உள்ளிடவும். பின் Start a download from link என்னும் பொத்தானை மீண்டும் அழுத்தி டாக்குமெண்ட் பதிவிறக்கம் செய்ய வேண்டிய இடத்தை தேர்வு செய்யவும். சில நொடிகளில் உங்களுடைய டாக்குமெண்ட்டானது நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் பதிவாகியிருக்கும். இந்த முறையினை பயன்படுத்தி எளிமையான முறையில் கோப்புகளை கணினிகளுக்கிடையே பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். இவையணைத்தும் இணைய இணைப்பு இருந்தால் மட்டுமே சாத்தியம் ஆகும். இந்த முறையை கையாளுவதால் உங்களுடைய கோப்புகளுகு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாது. பாதுகாப்பாக கையாளப்படும். மிக விரைவாக இந்த செயல்பாடானது நடைபெறும்.
3 Comments:
அட ரொம்ப நல்லாருக்கே..
தகவலுக்கு நன்றி
உங்களின் வருக்கைகும், பின்னுட்டத்திற்கும் நன்றி திரு.முனைவர்.இரா.குணசீலன், திரு.ராஜா.
Post a Comment