♠ Posted by Kumaresan Rajendran in Freewares at May 24, 2011
கணினி மையங்களில் உள்ள கணினிகளிலோ, அல்லது பொது இடத்தில் உள்ள கணினிகளிலோ குறிப்பிட்ட சில விண்டோஸ் பயன்பாடுகளை பயனாளர்கள் பயன்படுத்தாதவாறு காக்க வேண்டும். அவ்வாறு எடுத்துக்கொண்டால் விண்டோஸ் ரிஸிஸ்ட்டரி, டாஸ்க் மேமேஜர், கன்ட்ரோல் பேனல் மற்றும் பல மிக முக்கியமான விண்டோஸ் பயன்பாடுகளை பயனாளர்களின் பயன்பாட்டிற்கு வைக்ககூடாது, இவ்வாறு நாம் செய்வதால் கணினியில் ஏற்படும் கோளாருளை குறைகலாம், ஏன் முழுமையாகவே தவிர்க்க முடியும். இவ்வாறு விண்டோஸ் பயன்பாடுகை மறைக்க வேண்டுமெனில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தின் உதவியுடன், முதன்மை பயனாளர் (Administrator) கணக்கில் இருந்து செய்ய முடியும். அதுவும் ஒவ்வொரு பயன்பாட்டையும் நிறுத்த தனித்தனியாக நிறுத்த வேண்டும். இவ்வாறு செய்வதற்கு பதிலாக ஒரே மென்பொருளின் உதவியுடன் விண்டோஸின் பல்வேறு பயன்பாடுகளை நிறுத்த முடியும். இதற்கு ஒரு இலவச மென்பொருள் உதவி செய்கிறது.
மென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி
இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷன் மீது வலதுகிளிக் செய்து தோன்று விண்டோவில் Run as administrator என்னும் தேர்வினை தேர்வு செய்யவும். அடுத்ததாக தோன்றும் விண்டோவில் உங்களுக்கு வேண்டிய பயன்பாட்டை மட்டும் தேர்வு செய்து மற்றவற்றை அன்செலக்ட் செய்து விட்டு Restart Explorer என்னும் பொத்தானை அழுத்தவும். பின் கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். தற்போது நீங்கள் குறிப்பிட்ட பயன்பாடு மட்டுமே இருக்கும். தேர்வு செய்யாத பயன்பாட்டினை ஒப்பன் செய்தால். எரர் செய்தியே வரும்.
மேலும் பல்வேறு விதமான விண்டோஸ் பயன்பாடுகளையும் மூடி வைக்க முடியும். குறிப்பாக விண்டோஸ் shutdown பொத்தானை கூட மறைக்க முடியும்.
சாதாரண விண்டோஸ் பயன்பாட்டில் இருந்து முக்கியமான விண்டோஸ் பயன்பாடுவரை மிக விரைவாக மறைத்துக்கொள்ள முடியும். நொடிப்பொழுதில் எளிதாக விண்டோஸ் பயன்பாடுகளை மறைத்துக்கொள்ள இந்த மென்பொருள் உதவி செய்கிறது. இந்த மென்பொருளை கையாளும் போது கவனமாக இருக்க வேண்டும் இல்லையெனில் விண்டோஸ் இயங்குதளத்தினையே இழக்க நேரிடும். இந்த மென்பொருளை கவனமாக பயன்படுத்த வேண்டும்.
2 Comments:
தகவலுக்கு மிக்க நன்றி..!வாழ்த்துக்கள்.!!
all tips are useful..can u able to give guidelines for reset or remove a password from system....
Post a Comment