தமிழில் கணினி செய்திகள்

Youtube வீடியோக்களின் பாடல் வரிகளை பெற

உலகின் புகழ்பெற்ற வீடியோ தளமான யூடுப் தளத்தில் தினமும் பல்லாயிர கனக்கான வீடியோக்கள் பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்யப்படுகிறது. ஒரு சிலர் வீடியோவை பதிவிறக்கம் செய்யும் முன்னரே அதன் வரிகளை கேட்க விரும்புவர்கள். ஆனால் அவர்களுடைய கணினியில் ஸ்பீக்கர்/ஹெட்செட் போன்ற ஆடியோ சாதனங்கள் இருக்காது எனவே குறிப்பிட்ட வீடிவோவை முழுமையாக பதிவிறக்கம் செய்து அதனை வேறொரு கணினிக்கு மாற்றம் செய்த பின்னரே அதனை கேட்க முடியும். இதற்கு பதிலாக யூடுப் தளத்தில் இருந்து வீடியோவை பதிவிறக்கம் செய்யும் போதே அதன் வரிகளை எழுத்து வடிவில் பெற முடியும்.

இதற்காக நாம் எந்த மூன்றாம் தர மென்பொருளையும் நாடி செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நேரடியாக யூடுப் தளத்திலேயே பெற முடியும்.  இதற்கு நாம் பயன்படுத்தும் உலாவியில் நீட்சியை இணைத்துகொண்டால் போதுமானது. 

இந்த பாடல் வரிக்கான நீட்சியானது நெருப்புநரி, குரோம், இண்டர்நெட் எக்ஸ்புளோரர், சபாரி மற்றும் ஒபேரா உலாவிகளுக்கு மட்டும் உள்ளது.


சுட்டியில் குறிப்பிட்ட இணைப்பினை பயன்படுத்தி உலாவியில் நீட்சியை பதிந்து கொள்ளவும். பின் ஒரு முறை உலாவியை மறுதொடக்கம் செய்து கொண்டு பின் யூடுப் தளத்தை ஒப்பன் செய்து குறிப்பிட்ட வீடியோவை ஒப்பன் செய்யவும். அப்போது அந்த வீடியோக்கான பாடல் வரி தோன்றும். மேலும் இந்த வசதியை நமது விருப்பபடி மற்றியமைத்து கொள்ளவும் முடியும்.


அமைப்பினை பயன்படுத்தி விரும்பியவாறு இந்த பாடல்வரி நீட்சியை மாற்றியமைத்துக்கொள்ள முடியும்.

இண்டர்நெட் எக்ஸ்புளோரர் பெயரை மாற்ற

♠ Posted by Kumaresan Rajendran in ,,
இண்டர்நெட் எக்ஸ்புளோரர் உலாவியானது மைக்ரோசாப்ட் நிறுவனத்துடையது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே, விண்டோஸ் இயங்குதளத்துடன் இருப்பியல்பாகவே இருப்பது இண்டர்நெட் எக்ஸ்புளோரர் உலாவி ஆகும். விண்டோஸ் 7 ல் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் உலாவி 8 ம், விண்டோஸ் 8 ல் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் உலாவி 9 ம் இருப்பியல்பாகவே உள்ளது. இந்த இண்டர்நெட் எக்ஸ்புளோரர் உலாவியின் பெயரை பயனாளர்களின் விருப்பபடி மாற்றியமைத்துக்கொள்ள முடியும்.


மேலே இருக்கும் படமானது இருப்பியல்பாக இருக்கும் பெயர் Windows Internet Explorer இதனை மாற்றம் செய்ய வழிமுறைகள்.

முதலில் ரிஸிஸ்டர்  எடிட்டரினை ஒப்பன் செய்யம். இதற்கு விண்டோஸ் பொத்தான் மற்றும் R பொத்தானை ஒரு சேர அழுத்தும் போது. Run விண்டோ ஒப்பன் ஆகும் அதில் regedit என்று டைப் செய்து ஒகே பொத்தானை அழுத்தவும். தற்போது ரிஸிஸ்டர்  எடிட்டர் ஒப்பன் ஆகும்.



அதில் பின் வரும் வரிசைப்படி ஒப்பன் செய்யவும்.  HKEY_CURRENT_USER -> Software -> Microsoft -> Internet Explorer ->Main , பின் Main பட்டையை தேர்வு செய்து. Edit -> New -> String Value என்பதை தேர்வு செய்யவும்.


பின் நீங்கள் உருவாக்கிய String Value வின் பெயரை மாற்றம் செய்ய வேண்டும். இதற்கு சுட்டெலியின் உதவியுடன், வலது கிளிக் செய்து தோன்றும் Context Menu வில் Rename என்பதை தெரிவு செய்து, Window Title என்பதை உள்ளிடவும்.


தற்போது Window Title என்பதை சுட்டெலியின் உதவியுடன் இருமுறை சொடுகி, தோன்றும் விண்டோவில் Value Data என்பதில் உங்களுக்கு விருப்பமான பெயரை உள்ளிடவும். நான் //TCINFO என்று சான்றாக உள்ளிட்டுள்ளேன். நீங்கள் விரும்பிய படி பெயரை மாற்றிக்கொள்ள முடியும். தமிழிலும் மாற்றிக்கொள்ள முடியும். 


அவ்வளவு தான் தற்போது ரிஸிஸ்டர் எடிட்டரை மூடிவிட்டு, இண்டர்நெட் எக்ஸ்புளோரரை ஒப்பன் செய்து பார்க்கவும். தற்போது பெயர் மாற்றம் செய்ய பட்டு இருக்கும்.


இதே முறைமையை பயன்படுத்தி மீண்டும். இண்டர்நெட் எக்ஸ்புளோரர் பெயரை மாற்றியமைத்துக்கொள்ள முடியும். இல்லையெனில் Window Title வரை சென்று அதனை நீக்கி விட்டால் போதும். மீண்டும் எக்ஸ்புளோரர் பழைய நிலைக்கு வந்துவிடும்.

இண்டர்நெட் எக்ஸ்புளோரர் ஒரு பார்வை

♠ Posted by Kumaresan Rajendran in ,
இணையத்தை பயன்படுத்தும் பலரும் அறிந்த உலவி என்றால் அது மைக்ரோசாப்ட் நிறுவனத்துடைய இண்டர்நெட் எக்ஸ்புளோரர் உலவி மட்டுமே ஆகும். இந்த உலவியானது இணைய பயனாளர்களால் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மொசில்லா பயர்பாக்சின் வருகையால் தனது வாடிக்கையாளர்களை இண்டர்நெட் எக்ஸ்புளோரர் இழந்து வந்தது ஆனால் அன்மையில் வெளியான இண்டர்நெட் எக்ஸ்புளோரர் - 9 ன் வருகையால் மீண்டும் எழுச்சி பெற்று வருகிறது, இண்டர்நெட் எக்ஸ்புளோரர் உலவி.  இண்டர்நெட் எக்ஸ்புளோரர் உலவியானது 1995 ம் வருடம் முதல் முறையாக வெளிவந்தது. விண்டோஸ் 95 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்துடன் இணைந்து வெளியானது. முதல் முறை இண்டர்நெட் எக்ஸ்புளோரர் வெளிவரும் போது சாதரணமாகவே இருந்தது, ஆனால் தற்போது இருக்கும் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் உலவியானது பன்மடங்கு மேம்படுத்தப்பட்டு உள்ளது.

இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 1.0 (1995):-
முதல்முறையாக வெளிவந்த இண்டர்நெட் எக்ஸ்புளோரர் உலவி விண்டோஸ் 95 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் மட்டும் பயன்படுத்துமாறு வெளிவந்தது.



இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 2.0 (1995):-
இண்டர்நெட் எக்ஸ்புளோரருடைய இரண்டாவது பதிப்பு அதே வருடம் வெளியானது, ஆனால் இந்த பதிப்பு முந்தைய பதிப்பை விட சற்று மேம்படுத்தப்பட்டு வெளியானது , ஆனால் இந்த பதிப்பானது விண்டோஸ் மற்றும் மேக் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களில் செயல்படுமாறு வெளியானது.



இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 3.0 (1996):-
இந்த பதிப்பில் புதிய சிறப்பம்சங்கள் புகுத்தப்பட்டது ஈமெயில் மற்றும் ஆடியோ போன்ற சேவைகளை இந்த பதிப்பில் இருந்து  பயன்படுத்த முடிந்த்தது.


இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 4.0 (1997):-
இண்டர்நெட் எக்ஸ்புளோரரின் அடுத்த பதிப்பு 1997 ம் வருடம் வெளியானது, புதிய வசதிகள் இந்த பதிப்பில் புகுத்தப்பட்டுள்ளது.


இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 5.0 (1999):-
வணிகம் தொடர்பான புதிய வசதிகள் இந்த பதிப்பில் புகுத்தப்பட்டது.


இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 6.0 (2001):-
முந்தைய பதிப்பைவிட பல புதிய அம்சங்கள் இந்த பதிப்பில் புகுத்தப்பட்டட்து, டூல்பார் போன்ற புதிய வசதிகள் இந்த பதிப்பில் இருந்தே இணைக்கப்பட்டது.


இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 7.0 (2006):-
இந்த பதிப்பில்தான் முதல்முதலாக டேப் வசதி தொடங்கப்பட்டது, மேலும் இண்டர்நெட் ப்ரவுசிங் ஹிஸ்ட்ரியை கிளியர் செய்யும் வசதியும் இந்த பதிப்பில்தான் புகுத்தப்பட்டது.


இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 8.0 (2009):-
அதிவேக திறத்துடன் வெளிவந்த பதிப்பாகும். இதில் Private Browsing அறிமுகப்படுத்தப்பட்டது.


இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 9.0 (2011):-
தற்போது பயன்படுத்தப்படும் பதிப்பு 9.0 ஆகும். முந்தைய பதிப்புகளை விட இந்த பதிப்பு மிகச்சிறப்பாக உள்ளது என இண்டர்நெட் வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இண்டர்நெட் எக்ஸ்புளோரர்  தனது முந்தைய பதிப்புகளை விட, இந்த புதிய பதிப்பானது பல மடங்கு சிறப்பாக உள்ளது.

இண்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிவிறக்க சுட்டி

இணைய இணைப்பு இல்லாமல் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 உலவியை நிறுவ

♠ Posted by Kumaresan Rajendran in ,
இண்டர்நெட் எக்ஸ்புளோரர் உலவி உலகளவில் மிகச்சிறந்த உலவியாகும். இந்த உலவியை பயன்படுத்தாத கணினி பயனாளர்களே இல்லை என்று கூறுமளவிற்கு சிறப்பான உலவியாகும். இண்டர்நெட் எக்புளோரர் உலவி மைக்ரோசாப்ட் நிறுவனத்துடையதாகும். இண்டர்நெட் எக்ஸ்புளோரரின் அன்மைய பதிப்பானது இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 ஆகும். இந்த இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 உலவியை இணைய இணைப்பு இல்லாமல் கணினியில் நிறுவ முடியாது. கணினியில் முழுவதுமாக இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 உலவி முழுவதுமாக இன்ஸ்டால் ஆக வேண்டுமெனில், இணைய இணைப்பு இருந்தே ஆக வேண்டும். அவ்வாறு இணைய இணைப்பு இல்லாமல் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 உலவியை கணினியில் நிறுவிக்கொள்ள முடியும்.  



மென்பொருளை தரவிறக்க:-
இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி உங்களுடைய கணினியில் நிறுவிக்கொள்ளவும். இணைய இணைப்பு இல்லாத கணினிகளிலும் இண்டர்நெட் எக்ஸ்புளோரர்9 உலவியை நிறுவிக்கொள்ளவும். இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 உலவியினை விண்டோஸ்ஏழு ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் மட்டுமே நிறுவிக்கொள்ள முடியும், என்பது குறிப்பிடதக்கது.

தற்போது நீங்கள் இணைய இணைப்பு இல்லாத கணினியில் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 உலவியை நிறுவிக்கொள்ள முடியும். இதனை ஆப்லைன் இன்ஸ்டாலர் என்றும் கூறமுடியும்.

இண்டர்நெட் எக்ஸ்புளோரரை முழுவதுமாக பேக்அப் எடுக்க

♠ Posted by Kumaresan Rajendran in ,
என்னத்தான் சந்தைக்கு புதிய புரவுசர்கள் வந்துகொண்டிருந்தாலும் எக்ஸ்புளோரர் மீது மக்களுக்கு உள்ள மோகம் இன்னும் குறையவில்லை என்றே கூறலாம். இணைய உலகில் பலரது கையினை கட்டிபோட்டுருப்பது எக்ஸ்புளோரர் தான் என்றால் அது மிகையல்ல, உலகில் அதிகம் நபர்களால் பயன்படுத்தப்படும், புரவுசர்கள் பட்டியலில் இண்டர்நெட் எக்ஸ்புளோரர்க்குதான் முதலிடம். இந்த IE-தொகுப்பானது மைக்ரோசாப்ட் நிறுவனத்தினுடையது ஆகும். அண்மையில் எக்ஸ்புளோரரின் புதிய தொகுப்பு வெளியானது என்பது குறிப்பிடதக்கது.


இண்டர்நெட் எக்ஸ்புளோரரை பயன்படுத்தும் போது அதில் அமைந்துள்ள Setting மற்றும் புக்மார்க் போன்ற அனைத்தையுமே முழுவதுமாக பேக்அப் செய்து கொள்ள முடியும். அதற்கு உதவுவதுதான் Back Rex என்னும் மென்பொருள் ஆகும்.
மென்பொருளை பதிவிறக்க: Download

மென்பொருளை பதிவிறக்கி கணினியில் நிறுவிகொள்ளவும், பின் அதை ஒப்பன் செய்து பேக்அப் செய்து கொள்ள முடியும். இது அன்மையில் வெளியான IE தொகுப்பாப 9 பீட்டாவிற்கும்  பொருந்தும்.






இவ்வாறு எக்ஸ்புளோரர் தொகுப்பினை Backup செய்துகொள்வதன் மூலமாக ஒரு கணினியில் உள்ள புக்மார்க், Setting போன்றவற்றை மற்ற கணினியில் நிறுவிகொள்ள முடியும்.

இண்டர்நெட் எக்ஸ்புளோரரில்  BackRex பேக்அப் செய்பவை:
  • Favorites
  • Proxy & connection settings
  • Security zones
  • User customizations
  • Cookies
  • History
  • Dialup accounts
  • Form Autocomplete entries