♠ Posted by Kumaresan Rajendran in IE,விண்டோஸ்-7 at February 22, 2011
இண்டர்நெட் எக்ஸ்புளோரர் உலவி உலகளவில் மிகச்சிறந்த உலவியாகும். இந்த உலவியை பயன்படுத்தாத கணினி பயனாளர்களே இல்லை என்று கூறுமளவிற்கு சிறப்பான உலவியாகும். இண்டர்நெட் எக்புளோரர் உலவி மைக்ரோசாப்ட் நிறுவனத்துடையதாகும். இண்டர்நெட் எக்ஸ்புளோரரின் அன்மைய பதிப்பானது இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 ஆகும். இந்த இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 உலவியை இணைய இணைப்பு இல்லாமல் கணினியில் நிறுவ முடியாது. கணினியில் முழுவதுமாக இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 உலவி முழுவதுமாக இன்ஸ்டால் ஆக வேண்டுமெனில், இணைய இணைப்பு இருந்தே ஆக வேண்டும். அவ்வாறு இணைய இணைப்பு இல்லாமல் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 உலவியை கணினியில் நிறுவிக்கொள்ள முடியும்.
மென்பொருளை தரவிறக்க:-
இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி உங்களுடைய கணினியில் நிறுவிக்கொள்ளவும். இணைய இணைப்பு இல்லாத கணினிகளிலும் இண்டர்நெட் எக்ஸ்புளோரர்9 உலவியை நிறுவிக்கொள்ளவும். இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 உலவியினை விண்டோஸ்ஏழு ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் மட்டுமே நிறுவிக்கொள்ள முடியும், என்பது குறிப்பிடதக்கது.
தற்போது நீங்கள் இணைய இணைப்பு இல்லாத கணினியில் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 உலவியை நிறுவிக்கொள்ள முடியும். இதனை ஆப்லைன் இன்ஸ்டாலர் என்றும் கூறமுடியும்.
5 Comments:
//தற்போது நீங்கள் இணைய இணைப்பு இல்லாத கணினியில் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 உலவியை நிறுவிக்கொள்ள முடியும். இதனை ஆப்லைன் இன்ஸ்டாலர் என்றும் கூறமுடியும்.// இணைய இணைப்பு இல்லாமல் வெறும் இணைய உலவியை வைத்திருப்பதால் பயனேதும் உள்ளாதா என தெரியப் படுத்தினால் உதவியாக இருக்கும்.
//Jayadev Das,
இணைய இணைப்பு இல்லாமல் வெறும் இணைய உலவியை வைத்திருப்பதால் பயனேதும் உள்ளாதா என தெரியப் படுத்தினால் உதவியாக இருக்கும்//
கண்டிப்பாக, ஒருசில புரோகிராம் மொழிகளை இணைய உலவிகளின் உதவியுடன் மட்டுமே ரன் செய்ய முடியும்.உதாரணமாக PHP, நீங்கள் கூறுவதை பார்த்தால் இணைய இணைப்பு இல்லாத கணினியில் எதற்காக உலவி வேண்டும், என்பதை போல் இருக்கிறது. அப்படி பார்த்தால் விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை நிறுவும் போதே எக்ஸ்புளோரர் உலவியும் இணைந்தே நிறுவப்படும்.
\\கண்டிப்பாக, ஒருசில புரோகிராம் மொழிகளை இணைய உலவிகளின் உதவியுடன் மட்டுமே ரன் செய்ய முடியும்.உதாரணமாக PHP\\ கணிடிப்பாக ஏதாவது பயன் பாடு இருப்பதால்தான் நீங்கள் பதிவிட்டிருக்கிறீர்கள் என நினைத்தேன். இந்த தகவல் முன்னர் எனக்குத் தெரியாது. நன்றி.
நன்றி Jayadev Das உங்களை போன்ற வாசகர்களின் பின்னூட்டங்களையே நான் அதிகம் எதிர்பார்க்கிறேன்,
என் கணினியில் நெருப்பு நரி அல்லது கூகிள் குரோம் உலாவியில் ஏதோ ஒன்று எக்புளோரரின் செம்மையான செயலாக்கத்திற்குத் தடையாக இருக்கிறது என்று நினைக்கிறேன். ஐ.இ.9 இந்தப் பிரச்னையைத் தீர்க்குமா என்று தெரியவில்லை. இந்தப் பிரச்சனை தொடர்ந்து நீடித்தால், அதனை எப்படித் தவிர்க்க வேண்டும் என்று தயவு செய்து விளக்குங்கள். நன்றி.
Post a Comment