தமிழில் கணினி செய்திகள்

விண்டோஸ் தொடங்கும் நேரத்தை கணக்கிட

♠ Posted by Kumaresan Rajendran in , at February 14, 2011
நம்முடைய கணினி எவ்வாறு செயல்படுகிறது என்பதை கணினி தொடங்கும் நேரத்தை கொண்டே அளவிட முடியும். நம்முடைய கணினியில் அளவுக்கதிமான புரோகிராம்கள் நிறுவப்பட்டாலும், அல்லது கணினி வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகி இருந்தாலும் கணினி மெதுவாக செயல்பட தொடங்கும் இதனை நாம் கணினி தொடங்கும் நேரத்தை கொண்டே கணக்கிட்டு கொள்ள முடியும். நம்முடைய கணினியிலும் நம் நண்பருடைய கணினியிலும் ஒரே ஆப்ரேட்டிங் சிஸ்ட்டம் தான் நிறுவியிருப்போம். ஆனால் நம்முடைய கணினி தொடங்கும் நேரத்தை விட நண்பருடைய கணினி மிக விரைவாக தொடங்கும். நமக்கு ஆச்சர்யமாக இருக்கும் இதற்கு என்ன காரணம் நம்முடைய கணினியில் உள்ள வன்பொருள்களைவிட, நண்பருடைய கணினியில் இருக்கும் வன்பொருள்கள் அதிக மதிப்புடையதாக இருக்கும். ஆனால் இதற்கு இதுமட்டும் காரணமில்லை நம்முடைய கணினியில் நிறுவப்பட்டுள்ள மென்பொருள்கள், கணிப்பொறியில் தேங்கியுள்ள குப்பைகள் மற்றும்  ஹார்ட்டிஸ்க் முறைப்படுத்தபடாமல் இருத்தல் போன்றவை ஆகும். சரி நம்முடைய கணினியை விட நம் நண்பருடைய கணினி எவ்வளவு வேகமாக தொடங்குகிறது என்பதை துல்லியமாக அறிந்து கொள்ள ஒரு மென்பொருள் உள்ளது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும், பின் Start என்ற பொத்தானை அழுத்தவும் கணிப்பொறியை ரீஸ்டார்ட் செய்யுமாறு ஒரு செய்தி வரும், உடனே கணினியை ரீஸ்டார்ட் செய்து கொள்ளவும். உங்களுடைய கணினி மறுதொடக்கம் ஆனவுடன். எவ்வளவு நேரத்தில் தொடங்கியது என்ற செய்தி தோன்றும். 



குறைந்தபட்சம் 1நிமிடத்தில் கணினி தொடங்க வேண்டும். இல்லையெனில் கணிப்பொறியில் ஏதேனும் குறைபாடுகள் இருக்க வேண்டும். இவ்வாறு கணினி தொடங்கும் நேரத்தை நம்மால் அறிந்து கொள்ள முடியும். இந்த மென்பொருளின் உதவியுடன் விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்கள் தொடங்கும் நேரத்தை எளிமையாக கணக்கிட முடியும்.

0 Comments:

Post a Comment