தமிழில் கணினி செய்திகள்

பேஸ்புக்கின் மெனுபார் நிறத்தை மாற்றுவதற்கான நெருப்புநரி நீட்சி

♠ Posted by Kumaresan Rajendran in , at February 27, 2011
பேஸ்புக் தளமானது நண்பர்களிடம் தகவல்களை பறிமாறிக்கொள்ளவும் வேண்டிய தகவல்களை தேடிப்பெறவும் பயன்படுகிறது. தற்போதைய நிலையில் கூகுளை மிஞ்ச கூடிய வகையில் பேஸ்புக் தளம் உள்ளது. இணையத்தை பயன்படுத்தும் பலரும் பேஸ்புக் கணக்கு வைத்திருப்பார்கள். நம்ம ஊர் ராமசாமியில் தொடங்கி அமெரிக்க அதிபர் ஒபாம வரை அனைவருமே பேஸ்புக்கில் தங்களை பற்றிய தகவலை அவ்வப்போது தெரியப்படுத்துகிறனர். இந்த பேஸ்புக் தளத்தை தினமும் கோடிகணக்கான பயனாளர்கள் பயன்படுத்துகிறனர். இந்த தளத்தில் முகப்பு பக்கத்தில் தோன்றும் மெனுபாரானது Blue கலரில் தோன்றும். இதை மாற்றியைமைத்து நமக்கு விருப்பமான கலரை பயன்படுத்த வேண்டுமெனில் அதற்கு பேஸ்புக்கில் வழியில்லை. பேஸ்புக் தளத்தில் தோன்றும் மெனுபார் கலரை மாற்ற நெருப்புநரி உலவியில் வழி உள்ளது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


நெருப்புநரி உளவிக்கான Add-ons யை நிறுவிக்கொள்ளவும். பின் ஒரு முறை நெருப்புநரி உளவியை மறுதொடக்கம் செய்துகொள்ளவும். அடுத்ததாக பேஸ்புக் மெனுபார் கலரை மாற்றுவதற்கான  ஸ்கிரிப்டை இணைத்துக்கொள்ளவும்.

தரவிறக்க சுட்டி

ஸ்கிரிப்டை நிறுவிய பின் மீண்டும் ஒரு முறை நெருப்புநரி உலவியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். அடுத்து உங்களுடைய பேஸ்புக் அக்கவுண்டை ஒப்பன் செய்யவும். ஒப்பன் செய்த பிறது பயர்பாக்ஸ் உலவியில் அடிப்பகுதியில் தோன்றும் Greasemonkey icon மீது வலது கிளிக் செய்து தோன்றும் மெனுவில் Userscript commands > Customize Facebook Color என்பதை தேர்வு செய்யவும்.


கிளிக் செய்தவுடன் தோன்றும் விண்டோவில் உங்களுக்கு விருப்பமான கலரை தேர்வு செய்து கொண்டு Set என்ற பொத்தானை அழுத்தவும்.


இப்போது பேஸ்புக்கின் மெனுபாரானது நீங்கள் குறிப்பிட்ட கலரில் மாற்றப்பட்டிருக்கும்.


நீங்கள் மாற்றும் பேஸ்புக் கலர் மெனுபாரானது, அனைத்து பேஸ்புக் வாடிக்கையாளர்க்கும் பொருந்தும். நீங்கள் மாற்றம் செய்வது உங்களுடைய உலவியில் மட்டுமே என்பது குறிப்பிடதக்கது.

0 comments:

Post a Comment