தமிழில் கணினி செய்திகள்

குழுவாக Find and Replace செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in
Find and Replace என்பது குறிப்பிட்ட ஒரு சொற்களையோ அல்லது ஒரு குறிப்பிட்ட வரியினையோ தேடி அதனை மாற்றிக்கொள்ள முடியும். இவ்வாறு செய்ய அனைத்து எடிட்டிங் மென்பொருள்களிலும் வசதி உள்ளது. நாம் இதனை குறிப்பிட்ட ஒவ்வொரு கோப்பினையும் திறந்து , அந்த கோப்பில் மட்டுமே Find and Replace செய்ய முடியும். இதற்கு பதிலாக குழுவாக பல்வேறு கோப்புகளை Find and Replace செய்ய ஒரு வசதி உள்ளது. 

மென்பொருள் நிரலாளர்கள் பல்வேறு பைல்களில் ஒரே நேரத்தில் குறிப்பிட்ட ஒரு வார்த்தையினை மாற்ற வேண்டிய நிலை அடிக்கடி ஏற்படும். இதுபோன்ற நிலையில் பல்வேறு கோப்புகளை குழுவாக Find and Replace செய்ய ஒரு இலவச மென்பொருள் வழிவகை செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி 


மென்பொருளை தரவிறக்கி பின் அதனை ஒப்பன் செய்யவும். பின் குறிப்பிட்ட பைல்கள் அடங்கிய கோப்பினை தெரிவு செய்யவும். பின் Find Only பொத்தானை அழுத்தவும். அப்போது எத்தனை முறை நீங்கள் தேடிய வார்த்தை உள்ளது என்பதை காட்டும். 


பின்பு எந்த வார்த்தையை மாற்ற வேண்டுமோ அதனை Replace பாக்சில் டைப் செய்து விட்டு பின் Replace பொத்தானை அழுத்தவும். இப்போது நீங்கள் தெரிவு செய்த கோப்பில் நீங்கள் செய்ய மாற்றங்கள் குறிப்பிட்ட வார்த்தையோடு மாற்றம் செய்யப்பட்டு இருக்கும்.

எந்தெந்த நேரத்தில் அப்ளிகேஷன்ளை ஒப்பன் செய்ய வேண்டும்

♠ Posted by Kumaresan Rajendran in ,,
கடிகாரம் மற்றும் மொபைல் போன்களில் அலராம் என்ற ஒரு வசதி இருக்கும் அதனை பயன்படுத்தி குறிப்பிட்ட நேரத்தில் அலாரத்தினை ஒலிக்க செய்து பயன்படுத்திக்கொள்ள முடியும். அதனை போன்று வலைதளங்களில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குறிப்பிட்ட செயலை செய்ய CRON JOB மற்றும் CURL போன்ற வசதிகள் பயன்படுகிறன. இவைகளைப்போன்று விண்டோஸ் இயங்குதளத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட அப்ளிகேஷனை தானாகவே செயல்படுத்த முடியும். இதற்கு Freebyte Task Scheduler என்னும் மென்பொருள் வழிவகை செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை தரவிறக்கி அன்ஜிப் செய்து பின் ஒப்பன் செய்யவும். இது ஒரு போர்ட்டபிள் அப்ளிகேஷன் ஆகும். மேலே குறிப்பிட்ட விண்டோ போன்று தோன்றும் அதில் + பொத்தானை அழுத்தவும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் உங்கள் விருப்ப படி தேர்வுகளை தெரிவு செய்து கொள்ளவும். Program location என்பதனை தெரிவு செய்து எந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்ய வேண்டுமோ அதனை தேர்ந்தெடுக்கவும்.  பின் Save பொத்தானை அழுத்தி சேமித்து கொள்ளவும். Active செக் பாக்ஸ் செக் செய்யப்பட்டிருக்க வேண்டும்.


நாம் உருவாக்கிய அட்டவனைகளை (Scheduler) நீக்கி கொள்ளவோ அல்லது மாற்றியமைத்து கொள்ளவோ முடியும். இது ஒரு இலவச மென்பொருள் ஆகும்.

இணையத்தின் உதவியுடன் ட்ரைவர்களை இன்ஸ்டால்/அப்டேட் செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in ,,,
கணினியில் விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவியவுடன் அதன் கூடவே ட்ரைவர்களையும் நிறுவ வேண்டும் இல்லையெனில் இயங்குதளத்தின் செயல்பாடுகள் திருப்தி அளிக்க கூடிய வகையில் கண்டிப்பாக இருக்காது. ஆடியோ பிரச்சினை அல்லது ஏதேனும் வன்பொருள் பிரச்சினைகள் கண்டிப்பாக எழும். இதுபோன்ற நிலையில் இணையத்தின் உதவியுடன் தேவையான ட்ரைவர்களை நிறுவிக்கொள்ள முடியும் மேலும் பதிவேற்றமும் செய்து கொள்ள முடியும். இதன் மூலம் அனைத்து விதமான செயல்பாடுகளும் உங்களுடைய கணினியில் திருப்தி அளிக்க கூடிய வகையில் இருக்கும். 

இதில் சில பிரச்சினைகள் எழும். அவை முதன்முதலாக கணினில் இயங்குதளத்தினை நிறுவிய பின், லேன் (Ethernet) கேபிள் மூலமாக இணையத்தை இணைக்க முடியாது. இதற்கு ஒரு சில ட்ரைவர்கள் தேவைப்படும். அதுபோன்ற நிலையில் USB மோடம் அல்லது மெபைல் போனின் உதவியுடன் இணையத்தை பயன்படுத்தி எளிதாக குறிப்பிட்ட ட்ரைவர்களை கணினியில் நிறுவிக்கொள்ள முடியும். 

மென்பொருளை தரவிறக்க சுட்டி




மென்பொருளை தரவிறக்கி பின் செய்து, குறிப்பிட்ட அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். ஒப்பன் செய்தவுடன் மேலே தோன்றும் விண்டோ போன்று வரும். அதில் உங்கள் கணினியில் இல்லாத, மற்றும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ட்ரைவர்களை சிறிது நேரத்தில் கணக்கிட்டு காட்டும்.  அதனை கிளிக் செய்து குறிப்பிட்ட ட்ரைவர்களை தெரிவு செய்து பின் Install என்னும் பொத்தானை அழுத்தவும்.


சிறிது நேரத்தில் ட்ரைவரானது இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கம் செய்யப்பட்டு கணினியில் நிறுவப்பட்டும் விடும்.


விண்டோஸ் இயங்குதளத்தில் ட்ரைவர்களை பதிவேற்றம் செய்ய இது ஒரு நல்ல வழி ஆகும். மேலும் இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும். 

GIF - இமேஜ்களை உருவாக்க

இணையத்தில் நாம் பார்க்கும் ஒரு நிகழ்வினை படமாக்க வேண்டுமெனில், சாதரணமாக விண்டோஸ் இயங்குதளத்தில் PrtScn பொத்தானை அழுத்தி நாம் பார்க்கும் கணினி திரையினை முழுவதுமாக நகலெடுத்துக்கொள்ள முடியும். இது வெறும் (.jpeg, .png, .tiff) போன்ற பார்மெட்களில் மட்டுமே கணினியில் சேமித்து வைத்துக்கொள்ள முடியும். 

நாம் கணினியில் பார்க்கும் நிகழ்வினை தொடர்ச்சியாக படமாக்க வேண்டுமெனில் ஒன்று வீடியோ எடுக்க வேண்டும். இல்லையெனில் அதனை .gif பைல் பார்மெட்டில் போட்டோவாக எடுக்க வேண்டும்.  .gif இமேஜினை உருவாக்க  ScreenToGif என்ற மென்பொருள் உதவி செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி




மென்பொருளை தரவிறக்கி பின் அன்ஜிப் செய்துகொண்டு பின் Screen To Gif அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். இதனை கொண்டு கணினியில் நடக்கும் அனைத்து விதமான செயல்களையும் படம் பிடிக்க முடியும். நான் வேர்ட் தொகுபினை படம் எடுத்துள்ளேன்.

எப்பொழுது படம் எடுக்க வேண்டுமோ அப்போது Record என்னும் பொத்தானை அழுத்தவும். உடனே ரெக்கார்ட் ஆக தொடங்கி விடும். பாதியில் நிறுத்த வேண்டுமெனில் Pasue பொத்தானை அழுத்தி நிறுத்தி கொள்ளவும். பின் இறுதியாக ரெக்கார்ட் முடிந்தவுடன் Stop பொத்தானை அழுத்தி ரெக்கார்டினை நிறுத்திக்கொள்ளவும்.


அடுத்து தோன்றும் விண்டோவில் Done என்னும் பொத்தானை அழுத்தவும். உடனே ஜிப் பைலை எங்கு சேமிக்க வேண்டும் என்பதை தெரிவு செய்து சேமித்துக்கொள்ளவும்.


மேலே குறிப்பிட்ட விண்டோவானது நானே உருவாக்கிய ஜிப் பைல் ஆகும். மேலும் இந்த மென்பொருளில் பல்வேறு வசதிகள் உள்ளன. ஜிப் பைலின் வேகத்தை நமது வசதிக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக்கொள்ள முடியும்.

இதனைப்போன்று Frame வசதியினை கொண்டு ஜிப் பைலினை எளிதாக அழகு தோற்றத்தில் மாற்ற முடியும். இது ஒரு இலவச மென்பொருள் ஆகும்.

விண்டோஸ் இயங்குதளத்தில் டாஸ்க்பார் கடிகாரத்தில் விநாடிகளை காட்ட

விண்டோஸ் இயங்குதளத்தில் டாஸ்க்பார் கடிகாரத்தில் மணி மற்றும் நிமிடங்கள் மட்டுமே காட்டும். மேலும் குறிப்பிட்ட தேதியினையும் காட்டும் விநாடி காட்டப்பட மாட்டது. இந்த விநாடியினை காட்ட ஒரு சிறிய மென்பொருள் வழிவகை செய்கிறது.



மென்பொருளை தரவிறக்க சுட்டி 




மென்பொருளை தரவிறக்கம் செய்து அன்ஜிப் செய்து கொள்ளவும். பின் Clock என்னும் அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். உங்கள் கணினி 64 பிட் என்றால் Clock64 என்ற அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். சிறிது நேரத்தில் டாஸ்க்பார் கடிகாரத்தில் விநாடியானது ஓடத் துவங்கி விடும்.  இந்த மென்பொருள் விண்டோஸ் 7 / 8.1 / 10 ஆகிய இயங்குதளங்களில் இயங்க கூடியது ஆகும்.

SecretFolder - போல்டர் லாக்

♠ Posted by Kumaresan Rajendran in ,,
கோப்புகளை இரகசியமாக பூட்டி வைக்கவும், முக்கியமான சில தகவல்களை பாதுகாத்து கொள்வதற்கும், விண்டோஸ் இயங்குதளத்திற்கு என பல்வேறு மென்பொருள் உள்ளன. அதில் ஒன்றுதான் SecretFolder .


மென்பொருளை தரவிறக்க சுட்டி 


மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். மென்பொருளை நிறுவும் போதே கடவுச்சொல் கேட்கும் அதனை உள்ளிட்டு கொள்ளவும். பின் இந்த மென்பொருளை ஒப்பன் செய்து Add பொத்தானை அழுத்தி எந்தெந்த கோப்புகளை லாக் செய்ய வேண்டுமோ அதனை தெரிவு செய்யவும். பின் Lock என்ற பொத்தானை அழுத்தவும். நீங்கள் தெரிவு செய்த கோப்புகள் லாக் செய்யப்பட்டு விடும். 

மீண்டும் லாக் செய்த கோப்பினை அன்லாக் செய்ய, SecretFolder  அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் எந்தெந்த கோப்புகளை அன்லாக் செய்ய வேண்டுமோ அதனை தெரிவு செய்து பின் Unlock பொத்தானை அழுத்தவும். 


நீங்கள் SecretFolder ன் கடவுச்சொல்லை மாற்றிக்கொள்ளவும் முடியும். இதற்கு Preferences என்னும் பொத்தானை அழுத்தவும். தோன்றும் விண்டோவில் Change password என்னும் பொத்தானை அழுத்தி கடவுச்சொல்லை மாற்றியமைத்துக்கொள்ள முடியும். 

கோப்புகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள இந்த மென்பொருள் கண்டிப்பாக உதவும்.

கோப்புகளுக்கு கடவுச்சொல் கொண்டு பூட்ட (Kryptelite)

♠ Posted by Kumaresan Rajendran in ,,,
அனைத்து விதமான கோப்புகளையும் நாம் நண்பர்களுடன் பரிமாறிக்கொள்ளும் போதும், அலுவலக சம்பந்தமான முக்கிய தகவல்கள் அடங்கிய கோப்புகளை பாதுகாப்பாக வைக்கவும் மேலும் அதனை மற்றவர்களுக்கு தெரிந்து விடாமல் பாதுகாப்பாக மின்னஞ்சல் அனுப்பவும். மென்பொருளை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லாமல் இலவசமாகவே மென்பொருள் ஒன்று கிடைக்கிறது. இந்த மென்பொருள் மூலம் கோப்புகளை Encrypt மற்றும் Decrypt செய்து கொள்ள முடியும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி




மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் எந்த கோப்பினை கடவுச்சொல் கொண்டு பூட்ட நினைக்கிறீர்களோ அதன் மீது சுட்டெலியின் உதவியுடன் வலது கிளிக் செய்து தோன்றும் சாளரப்பெட்டியில் Encrypt என்னும் தேர்வினை தெரிவு செய்யவும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் கடவுச்சொல்லை உள்ளிட்டு OK என்ற பொத்தானை அழுத்தவும். சிறிது நேரத்தில் கோப்பானது மாற்றப்பட்டு விடும். 

Encrypt செய்து பூட்டப்பட்ட கோப்பினை  திறக்க , கோப்பின் மீது வலது கிளிக் செய்து தோன்றும் சாளரப்பெட்டியில் Decrypt  என்னும் தேர்வினை தெரிவு செய்யவும். அடுத்து தோன்றும் விண்டோவில் கடவுச்சொல்லை உள்ளிட்டு OK பொத்தானை அழுத்தவும். கோப்பானது மீண்டும் சாதாரண நிலைக்கு திரும்பிவிடும்.



இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும். இதன் மூலம் எளிதாக கோப்புகளை பாதுகாப்பாக பகிர்ந்து கொள்ள முடியும். 

பைல்களின் அளவை குறைக்க / கோப்புகளை (Folder) ஜிப் மற்றும் அன்ஜிப் செய்ய

மிகப்பெரிய அளவுடைய கோப்புகளை மின்னஞ்சல் அனுப்பவோ அல்லது தனித்தனி பைல்களை ஒன்று சேர்க்கவோ நாம் அதனை கம்ப்ரஸ் செய்து ஒரே கோப்பாக மாற்றுவோம். விண்டோஸ் இயங்குதளத்தில் கோப்புகளை கம்ப்ரஸ் மற்றும் அன்கம்ப்ரஸ் செய்ய Ashampoo-ZIP-Free என்ற மென்பொருள் வழிவகை செய்கிறது.


மென்பொருளை தரவிறக்க சுட்டி 

மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் வழக்கம் போல் நாம் ஜிப் பைல்களை எப்படி உருவாக்குவோமோ அதே முறையினை பின்பற்றி Ashampoo-ZIP-Free  னை பயன்படுத்தி உருவாக்கி கொள்ள முடியும். 

ஒரு கோப்பறையின் மீது வலது கீளிக் செய்து தோன்றும் சாளரப்பெட்டியில் Ashampoo-ZIP-Free னுடைய ஆப்ஷன்கள் தோன்றும் அதை பயன்படுத்தி எளிமையாக உருவாக்கி கொள்ள முடியும்.


அதே போல அன்ஜிப் செய்து கொள்ளவும் முடியும். ஜிப் செய்யப்பட்ட கோப்பினை வலது கிளிக் செய்து தோன்றும் சாளரப்பெட்டியில் Ashampoo-ZIP-Free னுடைய ஆப்ஷன்கள் தோன்றும் அதை பயன்படுத்தி அன்ஜிப் செய்து கொள்ளலாம். 

மேலும் ஜிப் செய்யப்பட்ட பைலை டபுள் கிளிக் செய்து ஒப்பன் செய்யவும். தோன்றும் விண்டோவில் Extract பொத்தானை கிளிக் செய்து, எந்த இடத்தில் பைல்களை சேமிக்க வேண்டும் என்பதை தெரிவு செய்து அன்ஜிப் செய்து கொள்ளமுடியும்.



இந்த மென்பொருள் அனைத்து விதமான ஜிப் பார்மெட்களையும் ஆதரிக்க கூடிய வகையில் உள்ளது. ZIP, CAB, 7-ZIP, LHA, TAR (TAR,TAR.XZ,TAR.BZ2 and TAR.GZ)




இந்த மென்பொருள் விண்டோஸ்7, விண்டோஸ் 8.1 மற்றும் விண்டோஸ் 10 ஆகிய இயங்குதளங்களில் இயங்க கூடியது ஆகும்.

இணையம் இல்லாமல் கணினிகளுக்கிடையே தகவல்களை பரிமாறிக்கொள்ள

♠ Posted by Kumaresan Rajendran in ,
தகவல் பரிமாற்றம் என்பது அத்தியாவசியமான ஒன்று. மொபைல் போனை எடுத்துக்கொண்டாலும் சரி கணினியை எடுத்துக்கொண்டாலும் சரி தகவல் பரிமாற்றம் செய்ய பல்வேறு வழிமுறைகள் உள்ளன. மொபைல் சாதனங்களுக்கு இடையே பரிமாறிக்கொள்ள புளூட்டுத், வைபை போன்றவைகளும் தற்போது இணைய இணைப்புடன் தகவல்களை பரிமாறிக்கொள்ள  வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற பலவிதமான மென்பொருள்கள் சந்தையில் கிடைகிறன.  இதைப் போன்று கணினிகளுக்கிடையே தகவல்களை பரிமாறிக்கொள்ளவும் பல்வேறு வழிகள் உள்ளன. நெட்வொர்க் சேரிங் மூலமாக தகவல்களை கணினிகளுக்கிடையே பரிமாறிக்கொள்ள முடியும். இவ்வாறு பரிமாற்றம் செய்யும் நேர விரயம் அதிகம் ஆகும். கணினிகளுக்கிடையே தகவல்களை பரிமாற்றிக்கொள்ள அற்புதமான மென்பொருள் உள்ளது. 

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருள் விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களில் இயங்க கூடியது ஆகும். மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த ஐபிமெஜேஞ்சர் மென்பொருளை ஒப்பன் செய்யவும். இந்த மெபொருள் நெட்வொர்க்கில் இணைந்துள்ள கணினியில் ஐபிமெஜேஞ்சர் நிறுவப்பட்டு தற்போது ஒப்பன் செய்யப்பட்டு இருந்தால் பட்டியலிட்டு காட்டும்.  நீங்கள் தகவல் அனுப்ப நினைக்கும் கணினியிலும் ஐபிமெஜேஞ்சர்  மென்பொருள் நிறுவப்பட்டு இருக்க  வேண்டும்.

சர்வர், கிளையன்ட் என தனித்தனி மென்பொருள் இல்லை ஒரே ஒரு மென்பொருள் மட்டுமே இதனை அனைத்து கணினியிலும் நிறுவி பயன்படுத்திக்கொள்ள முடியும். 

எந்த கணினிக்கு நீங்கள் தகவல்களை பரிமாற நினைக்கிறீர்களோ அந்த கணினியை தெரிவு செய்து பின் சதாரணமாக எழுத்துகளை மட்டும் தட்டச்சு செய்து அனுப்ப விரும்பினால். தட்டச்சு செய்து அனுப்பவும். கூடுதலாக பைல்களை அனுப்ப விரும்பினால் அதனை ட்ராக் அன்ட் ட்ராப் செய்து பின் அனுப்பவும். ஒரு முழு கோப்பறையையும் (Folder) அனுப்ப முடியும். கோப்புகளை தனித்தனியாக தெரிவு செய்தும் அனுப்ப முடியும்.


புதியதாக ஏதும் செய்திகள் வந்தால் டாஸ்க்பாரில் அறிவிப்புகள் காட்டும்.



வந்த அறிப்பினை கிளிக் செய்தால் மேலே இருக்கும் விண்டோ போன்று வரும். அதில் Open என்னும் பொத்தானை அழுத்தி செய்தியை பெற்றுக்கொள்ளவும். கோப்புகள் ஏதும் வந்திருந்தால் அதனை தெரிவு செய்து சேமித்துக்கொள்ளவும். நீங்கள் அனுப்பிய செய்தி திறக்கப்படும் போது உங்களுக்கும் அறிவிப்பு செய்தி வரும்.


இந்த மென்பொருள் மூலம் கணினிகளுக்கிடையே தகவல்களை எளிதாகவும், மிக விரைவாகவும் பரிமாறிக்கொள்ள முடியும். அலுவலகங்கள் மற்றும் கல்லூரிகளில் இந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இழந்த தகவல்களை மீட்டெடுக்க / டெலிட் செய்த கோப்புகளை மீட்டெடுக்க

தகவல்களை சேமித்து வைக்கவோ அல்லது தவல்களை பரிமாறிக்கொள்ளவோ நாம் முன்பு ப்ளாப்பி, குறுவட்டுகளை பயன்படுத்தி வந்தோம். ஆனால் தற்போது பெண்ட்ரைவ், மெமரிகார்ட், யூஎஸ்பி-ஹார்ட்டிஸ்குகளை பயன்படுத்தி வருகிறோம் அவ்வாறு தகவல் பரிமாற்றம் செய்யும் போது , ஒரு சில கோப்புகளை இழக்க நேரிடும், மேலும் மெமரி கார்டினை முறையாக கணினியில் இருந்து எஜெக்ட் செய்யமால் , கணினியில் இருந்து உருவும் போதும் இதுபோன்று கோப்புகள் இழப்பு அல்லது மெமரிகார்டினை முழுவதுமாக இழக்க நேரிடும். 

பெண்ட்ரைவ் மற்றும் வன்தட்டினை பார்மெட் செய்யும் பொழுதும் இதுபோன்ற பிரச்சினைகள் நிகழும். இவ்வாறு இழந்த கோப்புகளை மீட்டெடுக்க ஒரு மென்பொருள் உதவிசெய்கிறது. அதன் மூலம் எளிதாக இழந்த கோப்புகளை மீட்டெடுக்க முடியும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி




மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த டிஸ்க் ட்ரில் மென்பொருளை ஒப்பன் செய்யவும். 

உங்களுடைய வன்தட்டில் பிரிக்கப்பட்ட தனித்தனி அடைவுகள் காட்டும். அதற்கு நேரே உள்ள Recover என்னும் பொத்தானை அழுத்தவும். 




அடுத்து இழந்த தகவல்கள் வகை வாரியாக பட்டியலிடப்படும் அதனை தெரிவு செய்து பின், எந்த இடத்தில் கோப்புகளை சேமிக்க வேண்டுமோ அந்த இடத்தினை தெரிவு செய்து பின் Recover என்ற பொத்தானை அழுத்தவும். தவறுதலாக டெலிட் செய்த கோப்புகளையும் மீட்டெடுக்க முடியும்.

அதேபோன்று கணினியுடன் இணைக்கப்பட்ட யுஎஸ்பி ட்ரைவுகளும் பட்டியலிடப்படும் அதனை தெரிவு செய்தும் இழந்த கோப்புகளை மீட்டெடுத்துக்கொள்ள முடியும். கோப்புகள் அனைத்தையும் .dmg பைல் பார்மெட்டில் நகல் எடுத்துக்கொள்ள முடியும்.


இந்த மென்பொருள் இழந்த தகவல்களை மீட்டெடுக்க மிகவும் ஏற்றது. மேலும் இந்த மென்பொருள் கணினி வன்தட்டு பார்மெட்களான FAT , exFAT, NTFS, HFS , EXT2, EXT3 மற்றும் EXT4 பார்மெட்களை ஆதரிக்க கூடியது ஆகும்.

டிஸ்க் ட்ரில் மென்பொருள் விண்டோஸ் 7, விண்டோஸ் 8.1 மற்றும் விண்டோஸின் புதிய இயங்குதளமான விண்டோஸ் 10 லும் இயங்க கூடியது ஆகும்.

PDF கோப்பின் அளவை மாற்றியமைக்க

♠ Posted by Kumaresan Rajendran in ,,
ஒரு கோப்பின் அளவு எவ்வளவு வேண்டுமானலும் இருக்கலாம், அதே போன்றுதான் பிடிஎப் கோப்பின் அளவும் எவ்வளவு வேண்டுமானலும் இருக்கும். மிக அதிகம் அளவுடைய பிடிஎப் கோப்பினை மின்னஞ்சல் அனுப்ப வேண்டுமெனில் கண்டிப்பாக அனுப்ப முடியாது. குறிப்பிட்ட அளவுடைய மின்னஞ்சல் கோப்பினை மட்டுமே அனுப்ப முடியும். அதிக அளவுடைய கோப்பினை மின்னஞ்சல் அனுப்ப வேண்டுமெனில் அந்த கோப்பினை தனித்தனி பகுதிகளாக பிரித்து அனுப்பினால் மட்டுமே முடியும். அவ்வாறு பிரித்து அனுப்பும் போது அந்த குறிப்பிட்ட கோப்புகளை மீண்டும் சேர்க்க மென்பொருளினை பயன்படுத்த வேண்டும். மேலும் இவ்வாறு கோப்பினை தனித்தனி பகுதிகளாக பிரித்து அனுப்பும் போது சில பகுதி கோப்புகளை தவறுதலாக இழக்க நேரிடலாம். இதனால் முழு கோப்பும் மின்னஞ்சல் வாயிலாக சென்றடைய வாய்ப்பில்லை. 

அதிக அளவுடைய கோப்பினை மின்னஞ்சல் வாயிலாக அனுப்ப அந்த கோப்பின் அளவை சுருக்கி அனுப்பினால் அனுப்ப முடியும். இதற்கு ஒரு இலவச மென்பொருள் வழிவகை செய்கிறது.

மெபொருளை தரவிறக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திலிருந்து மென்பொருளை பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். திறக்கும் விண்டோவில் அளவு குறைக்கப்பட வேண்டிய பிடிஎப் கோப்பினை தேர்வு செய்யவும்.  பின் கன்வெர்ட் செய்து சேமிக்கப்பட வேண்டிய பிடிஎப் கோப்பு சேமிக்கப்பட வேண்டிய இடத்தையும் தேர்வு செய்து பின் எந்த விருப்ப தேர்வில் கன்வெர்ட் செய்யப்பட வேண்டும் என்பதை குறிப்பிட்டு பின் Compress என்னும் பொத்தானை அழுத்தவும்.



சிறிது நேரத்தில் குறிப்பிட்ட கோப்பானது கன்வெர்ட் செய்யப்பட்டு , நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் சேமிக்கப்பட்டு இருக்கும்.

கணினியின் வேகத்தை கூட்ட மற்றும் தேவையற்ற பைல்களை நீக்க

♠ Posted by Kumaresan Rajendran in ,
கணினி மந்தமாக செயல்படுகிறது என்றால் இதற்கு பல்வேறு காரணங்களை கூறலாம். முறையாக கணினியை பராமரிக்கவில்லையெனில் கணினி மந்தமாகவே செயல்படும். முறையாக மென்பொருள் நிறுவாமை இணையம் பயன்படுத்துகையில் தேங்கி கிடக்கும் பைல்கள் மற்றும் ரிஸிஸ்டரி பைல்கள் போன்றை ஆகும். மேலும் வைரஸ் பாதிக்கப்பட்டாலும் இதே நிலைதான் கணினி முழுவதுமாக மந்தமாகவே செயல்படும். இது போன்ற பிரச்சினைகளை சரிசெய்ய YAC - Yet Another Cleaner என்னும் மென்பொருள் உதவி செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி 


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திலிருந்து மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவவும். மென்பொருளை நிறுவும் போது இணைய இணைப்பு அவசியம் தேவைப்படும்.


மென்பொருளை முழுவதுமாக கணினியில் நிறுவிய பின் Yet Another Cleaner அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.


கணினியில் நிலை, பராமரிப்பு, நீட்சி பராமரிப்பு, தரவுகளை நீக்குதல், தேவையற்ற ஜங்க் கோப்புகளை நீக்குதல், கணினியை வேகப்படுத்துதல் மேலும் மென்பொருள்களை நீக்குதல் போன்ற செயல்களை இந்த மென்பொருள் வாயிலாக செய்ய முடியும். 




கணினியில் எவ்வளவு வேகத்தில் தரவு (Data) பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் ஆகிறது என்பதனை அறிந்து கொள்ளவும் இந்த மென்பொருள் வழிவகை செய்கிறது. 


எவ்வளவு நேரத்தில் கணினி பூட் ஆக தொடங்குகிறது என்பதனை அறிந்து கொள்ளவும் முடியும். மிக விரைவாக பூட் ஆக வேண்டுமெனில் நீட்சி மற்றும் அப்ளிகேஷன்களை டிசேபிள் செய்து கொண்டால் கணினியானது மிக விரைவாக பூட் ஆகும்.

பிடிஎப் கோப்புகளை உருவாக்க மற்றும் கன்வெர்ட் செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in ,,,
பிடிஎப் கோப்பு என்ற ஒன்று முதலில் உருவாக்கப்பட்ட போது அதனை யாரும் எளிதில் எடிட் செய்ய முடியாது. மேலும் இதனை உருவாக்குவது என்பது அவ்வளவு எளிதான் செயல் இல்லை என்று இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலைமை இல்லை அது தலைகீழாக மாறிவிட்டது, பிடிஎப் கோப்புகளை எடிட் செய்வதற்கும், உருவாக்குவதற்கும் , கன்வெர்ட் செய்வதற்கும் மென்பொருள் சந்தையில் என்னற்ற மென்பொருளும் இணையத்தில் இலவச வலைமனைகளும் உள்ளன. அதில் ஒன்றுதான் Cometdocs. இதில் இரண்டுவிதமான சேவைகளும் உள்ளன. டெஸ்க்டாப் அப்ளிகேஷன் மற்றும் ஆன்லைன் கன்வெர்சன் ஆகியவை.

மென்பொருளை தரவிறக்க சுட்டி 


மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒருமுறை கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். இந்த மென்பொருளை முழுமையாக பயன்படுத்த வேண்டுமெனில் ஒரு கணக்கினை உருவாக்கி கொள்ளவும். பின் பிடிஎப் கோப்பின் மீது சுட்டெலியின் உதவியுடன் வலது கிளிக் செய்து தோன்றும் பாப்-அப் விண்டோவில் Convert To என்பதை தெரிவு செய்து எந்த பார்மெட்டில் கன்வெர்ட் செய்ய வேண்டும் என்பதை தெரிவு செய்யவும்.






 சிலமணி நேரங்களில் குறிப்பிட்ட கோப்பானது கன்வெர்ட் செய்யப்பட்டு விட்டது என்ற அறிவிப்பு செய்தி வரும். பின் அந்த கோப்பினை வழக்கம் போல்  பயன்படுத்திக்கொள்ள முடியும்.


பிடிஎப் கோப்பினை உருவாக்க குறிப்பிட்ட கோப்பின் மீது சுட்டெலியின் உதவியுடன் வலது கிளிக் செய்து தோன்றும் பாப்-அப் விண்டோவில் Create PDF என்பதை கிளிக் செய்யவும். சிறிது நேரத்தில் குறிப்பிட்ட கோப்பானது பிடிஎப் கோப்பாக கன்வெர்ட் செய்யப்பட்டு விட்டது என்ற அறிவிப்பு செய்தி வரும்.


பின் அந்த பிடிஎப் கோப்பினை வழக்கம் போல பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும் இதே நிறுவனம் ஆன்லைனிலும் இந்த வசதியை வழங்குகிறது.

தளத்திற்கான சுட்டி
  
குறிப்பிட்ட சுட்டியினை கிளிக் செய்யவும். ஒப்பன் ஆகும் தளத்தில் ஒரு கணக்கினை உருவாக்கி கொள்ளவும். பின் வேண்டிய பைலை தெரிவு செய்து பின் கன்வெர்ட் செய்து கொள்ளவும். 2ஜிபி அளவு வரை கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். 

தேவையற்ற மென்பொருள்களை கணினியில் இருந்து நீக்க

♠ Posted by Kumaresan Rajendran in
கணினியில் பல்வேறு மென்பொருள்களை நிறுவி பயன்படுத்துவோம் குறிப்பிட்ட மென்பொருள் கணினிக்கு தேவையில்லையெனில் அதனை கணினியில் இருந்து நீக்கி கொள்ள விண்டோஸ் இயங்குதளத்திலேயே வழி உள்ளது. கன்ட்ரோல் பேனல் வழியாக சென்று தேவையற்ற மென்பொருள்களை நீக்கி கொள்ள முடியும். ஒருசில நேரங்களில் குறிப்பிட்ட மென்பொருள்களை இதன்வழியாக நீக்கம் செய்ய முடியாது. மேலும் ஒருசில கணினியில் வைரஸ் பாதிக்கப்பட்டால் கன்ட்ரோல் பேனல் ஒப்பன் ஆகாது. இதனால் அப்ளிகேஷன்களை கணினியில் இருந்து நீக்க முடியாது. இதுபோன்ற சூழ்நிலையில் அப்ளிகேஷன்களை கணினியில் இருந்து நீக்க மூன்றாம் தர மென்பொருள் உதவி செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்தில் மென்பொருளை பதிவிறக்கம் செய்து பின் அதனை ஒப்பன் செய்யவும். கணினியில் நிறுவிய அனைத்து மென்பொருள்களும் பட்டியலிடப்படும் அதில் தேவையற்ற மென்பொருள்களை தேர்ந்தெடுத்து பின் அதனை நீக்கி கொள்ள முடியும்.

இணைய பயன்பாட்டு அளவுகளை கணக்கிட

♠ Posted by Kumaresan Rajendran in ,
மொபைல் போனில் இரண்டு வகையான சிம் கார்டுகளை பயன்படுத்துவோம் பிரிபெய்டு, போஸ்ட்பெய்டு இவற்றில் பிரிபெய்டு சிம்கார்டில் இருப்புதொகை எவ்வளவு இருக்கிறது என்று பார்த்துக்கொள்ளும் வசதி உள்ளது. அதேபோல் போஸ்ட்பெய்டு சிம்கார்டில் எவ்வளவு தொகைக்கு பேசுகிறமோ அதனை பார்த்துக்கொள் வசதியும் உள்ளது. அதேபோன்று மீதமுள்ள இணைய பயன்பாட்டு அளவுகளையும் பார்த்துக்கொள்ளும் வசதி உள்ளது. மொபைல் போன் கொண்டு இணையத்தை பயன்படுத்தும் போது இதுவரை எவ்வளவு இணைய பயன்பாட்டினை பயன்படுத்தியுள்ளோம் என்று பார்த்துகொள்ளும் வசதி மொபைல் போன் நிறுவன புரவைடர்களிடம் உள்ளது. அதுபோன்று டேட்டாகார்டு மூலம் இணைய இணைப்பினை பயன்படுத்தும் போதும் எவ்வளவு இணைய பயன்பாட்டினை பயன்படுத்தியுள்ளோம் என்று பார்த்துக்கொள்ளும் வசதியும் உள்ளது. ஒரே கணினியில் நாம் பல்வேறு இணைய இணைப்புகளை மாற்றி மாற்றி இணைத்து பயன்படுத்தும் வாய்ப்பு அதிகம். 

நம்முடைய கணினியில் எவ்வளவு இணைய பயன்பாட்டு அளவுகளை பயன்படுத்தி உள்ளோம் என்று முழுமையாக அறிந்து கொள்ள விண்டோஸ் இயங்குதளத்தில் வழி இல்லை, இதற்கு ஒரு மாற்று மென்பொருள் ஒன்று வழிவகை செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி




இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி பின் ஒப்பன் செய்யவும். இது ஒரு போர்ட்டபிள் மென்பொருள் ஆகும். 32பிட் மற்றும் 64பிட் என தனித்தனியாக மென்பொருள் உள்ளது.


மேலும் தனிப்பட்ட ஒரு பயனர் பயன்படுத்தும் இணைய இணைப்பு அளவுகளையும் அறிந்து கொள்ளும் வசதியும் இந்த மென்பொருளில் உண்டு. மேலும் எக்சல் கோப்பு வடிவில் பயன்படுத்திய அளவுகளை பிரதி எடுத்துக்கொள்ளும் வசதி இந்த மென்பொருளில் உள்ளது.