தமிழில் கணினி செய்திகள்

கணினியின் வேகத்தை கூட்ட மற்றும் தேவையற்ற பைல்களை நீக்க

♠ Posted by Kumaresan Rajendran in , at November 17, 2013
கணினி மந்தமாக செயல்படுகிறது என்றால் இதற்கு பல்வேறு காரணங்களை கூறலாம். முறையாக கணினியை பராமரிக்கவில்லையெனில் கணினி மந்தமாகவே செயல்படும். முறையாக மென்பொருள் நிறுவாமை இணையம் பயன்படுத்துகையில் தேங்கி கிடக்கும் பைல்கள் மற்றும் ரிஸிஸ்டரி பைல்கள் போன்றை ஆகும். மேலும் வைரஸ் பாதிக்கப்பட்டாலும் இதே நிலைதான் கணினி முழுவதுமாக மந்தமாகவே செயல்படும். இது போன்ற பிரச்சினைகளை சரிசெய்ய YAC - Yet Another Cleaner என்னும் மென்பொருள் உதவி செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி 


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திலிருந்து மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவவும். மென்பொருளை நிறுவும் போது இணைய இணைப்பு அவசியம் தேவைப்படும்.


மென்பொருளை முழுவதுமாக கணினியில் நிறுவிய பின் Yet Another Cleaner அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.


கணினியில் நிலை, பராமரிப்பு, நீட்சி பராமரிப்பு, தரவுகளை நீக்குதல், தேவையற்ற ஜங்க் கோப்புகளை நீக்குதல், கணினியை வேகப்படுத்துதல் மேலும் மென்பொருள்களை நீக்குதல் போன்ற செயல்களை இந்த மென்பொருள் வாயிலாக செய்ய முடியும். 




கணினியில் எவ்வளவு வேகத்தில் தரவு (Data) பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் ஆகிறது என்பதனை அறிந்து கொள்ளவும் இந்த மென்பொருள் வழிவகை செய்கிறது. 


எவ்வளவு நேரத்தில் கணினி பூட் ஆக தொடங்குகிறது என்பதனை அறிந்து கொள்ளவும் முடியும். மிக விரைவாக பூட் ஆக வேண்டுமெனில் நீட்சி மற்றும் அப்ளிகேஷன்களை டிசேபிள் செய்து கொண்டால் கணினியானது மிக விரைவாக பூட் ஆகும்.

2 Comments:

இன்றைய வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள். இன்றுதான் முதன்முறையாக இங்கு வருகிறேன். எனக்கு மிகவும் தேவை இந்த தளம். இனி அடிக்கடி வருகிறேன். புரியாதவற்றை உங்களிடம் கேட்கலாம், அல்லவா?

Ranjani Narayanan said//

வருகை தந்தமைக்கு நன்றி, கண்டிப்பாக கேட்கலாம்.

Post a Comment