ஒரு கோப்பின் அளவு எவ்வளவு வேண்டுமானலும் இருக்கலாம், அதே போன்றுதான் பிடிஎப் கோப்பின் அளவும் எவ்வளவு வேண்டுமானலும் இருக்கும். மிக அதிகம் அளவுடைய பிடிஎப் கோப்பினை மின்னஞ்சல் அனுப்ப வேண்டுமெனில் கண்டிப்பாக அனுப்ப முடியாது. குறிப்பிட்ட அளவுடைய மின்னஞ்சல் கோப்பினை மட்டுமே அனுப்ப முடியும். அதிக அளவுடைய கோப்பினை மின்னஞ்சல் அனுப்ப வேண்டுமெனில் அந்த கோப்பினை தனித்தனி பகுதிகளாக பிரித்து அனுப்பினால் மட்டுமே முடியும். அவ்வாறு பிரித்து அனுப்பும் போது அந்த குறிப்பிட்ட கோப்புகளை மீண்டும் சேர்க்க மென்பொருளினை பயன்படுத்த வேண்டும். மேலும் இவ்வாறு கோப்பினை தனித்தனி பகுதிகளாக பிரித்து அனுப்பும் போது சில பகுதி கோப்புகளை தவறுதலாக இழக்க நேரிடலாம். இதனால் முழு கோப்பும் மின்னஞ்சல் வாயிலாக சென்றடைய வாய்ப்பில்லை.
அதிக அளவுடைய கோப்பினை மின்னஞ்சல் வாயிலாக அனுப்ப அந்த கோப்பின் அளவை சுருக்கி அனுப்பினால் அனுப்ப முடியும். இதற்கு ஒரு இலவச மென்பொருள் வழிவகை செய்கிறது.
மெபொருளை தரவிறக்க சுட்டி
சுட்டியில் குறிப்பிட்ட தளத்திலிருந்து மென்பொருளை பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். திறக்கும் விண்டோவில் அளவு குறைக்கப்பட வேண்டிய பிடிஎப் கோப்பினை தேர்வு செய்யவும். பின் கன்வெர்ட் செய்து சேமிக்கப்பட வேண்டிய பிடிஎப் கோப்பு சேமிக்கப்பட வேண்டிய இடத்தையும் தேர்வு செய்து பின் எந்த விருப்ப தேர்வில் கன்வெர்ட் செய்யப்பட வேண்டும் என்பதை குறிப்பிட்டு பின் Compress என்னும் பொத்தானை அழுத்தவும்.
சிறிது நேரத்தில் குறிப்பிட்ட கோப்பானது கன்வெர்ட் செய்யப்பட்டு , நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் சேமிக்கப்பட்டு இருக்கும்.
4 Comments:
Useful tip Thank you
வருகைதந்து பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே,,
the link shows 404 error :/
Mohamed Saajith said //
Page is open,
http://www.freepdfcompressor.com/
Post a Comment