தமிழில் கணினி செய்திகள்

ஆன்லைனில் கோப்புகளை கன்வெர்ட் செய்ய - CloudConvert

♠ Posted by Kumaresan Rajendran in ,,
ஒரு பைல் பார்மெட்டிலிருந்து மற்றொரு பைல் பார்மெட்டாக கன்வெர்ட் செய்ய பல்வேறு மென்பொருள்கள் இணையத்தில் கிடைக்கிறன. ஆன்லைனிலும் நூற்றுகணக்கான இணையதளங்கள் கோப்பினை கன்வெர்ட் செய்து கொள்ளும் வசதியினை வழங்கி வருகிறன. இருப்பினும் உடனடியாக சில கோப்புகளை கன்வெர்ட் செய்து கொள்ளும் வசதி பல இணையதளங்களில் தேடினாலும் கிடைப்பது அரிது. மேலும் gif கோப்புகளை வீடியோ கோப்புகளாக மாற்றுவதற்கு மென்பொருள்களோ , ஆன்லைன் கன்வெர்ட் வசதி கொண்ட இணையதளங்களோ கிடைப்பது மிகவும் அரிதான செயல். இப்படி அனைத்து விதமான வசதிகளையும் கொண்ட கோப்புகளை கன்வெர்ட் செய்யும் இணையதளம் ஒன்று உள்ளது. இதன் மூலம் எளிதாக கோப்புகளை கன்வெர்ட் செய்து கொள்ள முடியும்

தளத்திற்கான சுட்டி 



சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று உங்களுக்கு என்று தனியாக பயனர் கணக்கினை உருவாக்கி கொள்ளவும். பயனர் கணக்கு தேவையெனில் மட்டுமே உருவாக்கி கொள்ளவும். பின் கன்வெர்ட் செய்ய வேண்டிய பைல்களை எல்லாம் தேர்வு செய்யவும் பின் எந்த பார்மெட்டில் கன்வெர்ட் செய்யப்பட வேண்டும் என்பதை தெரிவு செய்யவும். அடுத்து Start Conversion என்னும் பொத்தானை அழுத்தவும்.


சிறிது நேரத்தில் உங்களுடைய கோப்புகள் அனைத்தும் கன்வெர்ட் செய்யப்பட்டு விடும். பின் நீங்கள் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.



கோப்புகளை பதிவிறக்கம் செய்ய பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அதில் ஒன்றுதான் QR Code இதனை பயன்படுத்தியும் கோப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

குழுவாக Find and Replace செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in
Find and Replace என்பது குறிப்பிட்ட ஒரு சொற்களையோ அல்லது ஒரு குறிப்பிட்ட வரியினையோ தேடி அதனை மாற்றிக்கொள்ள முடியும். இவ்வாறு செய்ய அனைத்து எடிட்டிங் மென்பொருள்களிலும் வசதி உள்ளது. நாம் இதனை குறிப்பிட்ட ஒவ்வொரு கோப்பினையும் திறந்து , அந்த கோப்பில் மட்டுமே Find and Replace செய்ய முடியும். இதற்கு பதிலாக குழுவாக பல்வேறு கோப்புகளை Find and Replace செய்ய ஒரு வசதி உள்ளது. 

மென்பொருள் நிரலாளர்கள் பல்வேறு பைல்களில் ஒரே நேரத்தில் குறிப்பிட்ட ஒரு வார்த்தையினை மாற்ற வேண்டிய நிலை அடிக்கடி ஏற்படும். இதுபோன்ற நிலையில் பல்வேறு கோப்புகளை குழுவாக Find and Replace செய்ய ஒரு இலவச மென்பொருள் வழிவகை செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி 


மென்பொருளை தரவிறக்கி பின் அதனை ஒப்பன் செய்யவும். பின் குறிப்பிட்ட பைல்கள் அடங்கிய கோப்பினை தெரிவு செய்யவும். பின் Find Only பொத்தானை அழுத்தவும். அப்போது எத்தனை முறை நீங்கள் தேடிய வார்த்தை உள்ளது என்பதை காட்டும். 


பின்பு எந்த வார்த்தையை மாற்ற வேண்டுமோ அதனை Replace பாக்சில் டைப் செய்து விட்டு பின் Replace பொத்தானை அழுத்தவும். இப்போது நீங்கள் தெரிவு செய்த கோப்பில் நீங்கள் செய்ய மாற்றங்கள் குறிப்பிட்ட வார்த்தையோடு மாற்றம் செய்யப்பட்டு இருக்கும்.

விண்டோஸ் 10 இயங்குதளம் ஜூலை 29 ல் வெளியீடு

♠ Posted by Kumaresan Rajendran in ,
விண்டோஸ் இயங்குதளத்தின் அடுத்த பதிப்பான விண்டோஸ் 10 இயங்குதளம் ஜூலை 29 ம் தேதி வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. பயனாளர்களுக்கு சோதனை அடிப்படையில் இலவசமாக ப்ரிவியூ பதிப்பினை வழங்கியது. இந்த பதிப்பில் இருந்த குறைகளை நீக்கி முழு சிறந்த தொகுப்பினை விண்டோஸ் நிறுவனம் வெளியிட உள்ளது.

விண்டோஸ் 10 இயங்குதளத்தில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன, மிகச்சிறப்பான ஸ்டார்ட் மெனுவையும், மிக விரைவாக தொடங்குதளையும் , மறுதொடங்குதளையும் கொண்டுள்ளது. வைரஸ் தொல்லைகளிருந்து கணினியை பாதுகாக்கும் விதமாக விண்டோஸ் 10 இயங்குதளத்துடன் இலவசமாகவே விண்டோஸ் டிபெண்ட்டர் ஆண்டி மால்வேர் மென்பொருள் வருகிறது.

விண்டோஸ் 10 சிறப்பம்சங்கள்:

  • Cortana: இந்த வசதி தற்போது விண்டோஸ் மொபைல்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தற்போது விண்டோஸ் இயங்குதளத்திலும் வரஉள்ளது. இதன் மூலம் எளிமையாக நினைவூட்டல் (Reminders) , தகவல்களை மிக விரைவாக தேடும் வசதியையும் பெற முடியும்.
  • Microsoft EDGE: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய உலாவி, இதுவரை வெளிவந்த இயங்குதளங்களில் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் உலாவி இருப்பியல்பாகவே இருந்து வந்தது , இனி அதற்கு பதிலாக மைக்ரோசாப்ட் எட்ஜ் உலாவி வெளிவர உள்ளது.
  • மைரோசாப்ட் ஆப்பிஸ்: விண்டோஸ் இயங்குதளங்கள் வெளியிடும் போது, ஆப்பிஸ் பதிப்புகளின் புது வெளியீடு வெளியிடப்படும்.  தற்போது விண்டோஸ் 10 இயங்குதளம் வெளிவர உள்ள நிலையில் மைக்ரோசாப்ட் ஆப்பிஸ் 2016 பதிப்பும் வெளிவர உள்ளது.
  • Xbox: எக்ஸ் பாக்ஸ் விளையாட்டு அப்ளிகேஷன் விண்டோஸ் 10 இயங்குதளத்துடன் இருப்பியல்பாகவே வெளிவர உள்ளது. இதன் மூலம் விண்டோஸ் கணினிகளை நெட்வோர்க்கில் இணைத்து விளையாட முடியும்.
இதுபோன்று பல்வேறு விதமான வசதிகளுடன் ஜூலை 29, 2015 அன்று விண்டோஸ் 10 இயங்குதளம் வெளிவர உள்ளது. தற்போது நீங்கள் வாங்கும் கணினியில் விண்டோஸ் 8.1 இயங்குதளம் இருப்பின் அதனை நீங்கள் விண்டோஸ் 10 ஆக புதுப்பித்து கொள்ள முடியும்.