தமிழில் கணினி செய்திகள்

போட்டோக்களை எடிட் செய்ய மற்றும்மொரு மென்பொருள்

♠ Posted by Kumaresan Rajendran in
புகைப்படங்களை எடிட் செய்ய வேண்டுமெனில் எதாவது ஒரு போட்டோ எடிட்டரின் உதவி நமக்கு வேண்டும். அனைவரும் அறிந்த ஒரு போட்டோ எடிட்டிங் மென்பொருள் என்றால் அது போட்டோசாப் மட்டுமே. இதில் மட்டும்தானா போட்டோக்களை எடிட் செய்ய வேண்டும். இல்லை உங்களுக்கு விருப்பமான எந்த போட்டோ எடிட்டர்களில் வேண்டுமானாலும் போட்டோக்களை எடிட் செய்து கொள்ளலாம், ஆனால் அவை யாவும் மிகச்சிறப்புடையதாக இருப்பதில்லை போட்டோசாப் அளவிற்கு எந்த மென்பொருளும் இல்லை என்றால் நாம் ஒத்துக்கொள்ள தான் வேண்டும். அதற்காக எப்போது போட்டோசாப் மென்பொருளையே நம்பி இருக்கவும் கூடாது. போட்டோசாப் மென்பொருளுக்கு மாற்று மென்பொருள் ஏதாவது சந்தையில் உண்டா என்றால் நிறைய போட்டோ எடிட்டிங் மென்பொருள்கள் உள்ளது ஆனால் அவை யாவும் சிறப்புடையதாக இல்லை. போட்டோசாப் மென்பொருளுக்கு இணையான போட்டோ எடிட்டிங் மென்பொருள் ஒன்று உள்ளது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவிக்கொள்ள வேண்டும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து பயன்படுத்தவும் வழக்கமாக பயன்படுத்தப்படும் போட்டோ எடிட்டிங் மென்பொருள்களை விட இந்த மென்பொருள் மிகவும் சிறப்புடையதாகும். இது அளவில் சிறயதாகும், 4 எம்.பி அளவுடையதாகும். 50 க்கும் மேற்பட்ட எபக்ட்ஸ் இந்த மென்பொருளில் உள்ளது. 

போட்டோசாப் இல்லாத நேரத்தில் இந்த மென்பொருளானது உங்களுக்கு கைகொடுக்கும். நீங்கள் வேண்டுமானால் போட்டோக்களை மேலும் அழகுபடுத்த விரும்பினால் clipart, frame, texture, stamp, brush style போன்ற டூல்ஸ்களை இணையத்தில் இருந்து இலவசமாக பதிவிறக்கி பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த மென்பொருளின் உதவியுடன் போட்டோக்களை மிகவும் சிறப்பாக எடிட் செய்ய முடியும். விண்டோஸ்  7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் இந்த மென்பொருளானது முழுமையாக வேலை செய்கிறது.

வேர்ட் 2010 ல் எக்சல் சீட்டை இணைக்க

♠ Posted by Kumaresan Rajendran in
ஆப்பிஸ் தொகுப்பின் அண்மைய வெளியிடான 2010 மிகவும் சிறப்புடையதாகும். இதில் பல்வேறு சிறப்பம்சங்கள் நிறைந்துள்ளது. இதில் மற்றும்மொரு சிறப்பம்சம் என்னவெனில் வேர்ட் 2010 ல் இருந்தப்படியே எக்சல் சீட்டையும் இணைத்துக்கொள்ள முடியும். இந்த வசதியின் மூலமாக வேர்ட் தொகுப்பில் இருந்தப்படியே எக்சல் தொகுப்பையும் பயன்படுத்திக்கொள்ள முடியும். சில நேரங்களில் வேர்ட் தொகுப்பில் ஒரு சில கணக்குளை போட வேண்டிவரும் அதுபோன்ற நிலை பெரும் சிரமப்படுவோம். சதாரண கணக்கென்றால் பராவயில்லை மிகப்பெரிய அளவிளான கணக்குளை செய்ய வேண்டுமெனில் என்ன செய்வது எக்சல் உதவியைதான் நாட வேண்டும். இதற்கு பதிலாக எக்சல் சீட்டையே வேர்ட் தொகுப்பில் பயன்படுத்தினால் எவ்வளவு சுலபமாக இருக்கும்.

வேர்ட் 2010 தொகுப்பில் எக்சல் சீட்டை இணைக்க முதலில் வேர்ட் 2010 தொகுப்பை ஒப்பன் செய்யவும். அடுத்ததாக Insert என்னும் டேபை தேர்வு செய்யவும். அதில் டேபிள் என்னும் தேர்வை தேர்வு செய்யது, அதில் Excelspreadsheet என்பதை தேர்வு செய்யவும்.


தற்போது எக்சல் சீட்டானது வேர்ட் டாக்குமெண்டில் இணைக்கப்பட்டிருக்கும். அதை பயன்படுத்தி எளிமையாக எக்சல் பணிகளையும் வேர்ட் தொகுப்பிலேயே செய்ய முடியும்.


எக்சல் தொகுப்பை இணைத்தவுடன், எக்சல் தொகுப்பிற்கு உண்டான டூல்பாரையும் காண முடியும்.


இந்த டூல்பாரின் உதவியுடன் எக்சல் பணிகளை மிகவிரைவாக செய்ய முடியும். வேர்ட் தொகுப்பை பயன்படுத்தி வேலை செய்பவர்களுக்கு இந்த வசதியானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பேஸ்புக்கின் மெனுபார் நிறத்தை மாற்றுவதற்கான நெருப்புநரி நீட்சி

♠ Posted by Kumaresan Rajendran in ,
பேஸ்புக் தளமானது நண்பர்களிடம் தகவல்களை பறிமாறிக்கொள்ளவும் வேண்டிய தகவல்களை தேடிப்பெறவும் பயன்படுகிறது. தற்போதைய நிலையில் கூகுளை மிஞ்ச கூடிய வகையில் பேஸ்புக் தளம் உள்ளது. இணையத்தை பயன்படுத்தும் பலரும் பேஸ்புக் கணக்கு வைத்திருப்பார்கள். நம்ம ஊர் ராமசாமியில் தொடங்கி அமெரிக்க அதிபர் ஒபாம வரை அனைவருமே பேஸ்புக்கில் தங்களை பற்றிய தகவலை அவ்வப்போது தெரியப்படுத்துகிறனர். இந்த பேஸ்புக் தளத்தை தினமும் கோடிகணக்கான பயனாளர்கள் பயன்படுத்துகிறனர். இந்த தளத்தில் முகப்பு பக்கத்தில் தோன்றும் மெனுபாரானது Blue கலரில் தோன்றும். இதை மாற்றியைமைத்து நமக்கு விருப்பமான கலரை பயன்படுத்த வேண்டுமெனில் அதற்கு பேஸ்புக்கில் வழியில்லை. பேஸ்புக் தளத்தில் தோன்றும் மெனுபார் கலரை மாற்ற நெருப்புநரி உலவியில் வழி உள்ளது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


நெருப்புநரி உளவிக்கான Add-ons யை நிறுவிக்கொள்ளவும். பின் ஒரு முறை நெருப்புநரி உளவியை மறுதொடக்கம் செய்துகொள்ளவும். அடுத்ததாக பேஸ்புக் மெனுபார் கலரை மாற்றுவதற்கான  ஸ்கிரிப்டை இணைத்துக்கொள்ளவும்.

தரவிறக்க சுட்டி

ஸ்கிரிப்டை நிறுவிய பின் மீண்டும் ஒரு முறை நெருப்புநரி உலவியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். அடுத்து உங்களுடைய பேஸ்புக் அக்கவுண்டை ஒப்பன் செய்யவும். ஒப்பன் செய்த பிறது பயர்பாக்ஸ் உலவியில் அடிப்பகுதியில் தோன்றும் Greasemonkey icon மீது வலது கிளிக் செய்து தோன்றும் மெனுவில் Userscript commands > Customize Facebook Color என்பதை தேர்வு செய்யவும்.


கிளிக் செய்தவுடன் தோன்றும் விண்டோவில் உங்களுக்கு விருப்பமான கலரை தேர்வு செய்து கொண்டு Set என்ற பொத்தானை அழுத்தவும்.


இப்போது பேஸ்புக்கின் மெனுபாரானது நீங்கள் குறிப்பிட்ட கலரில் மாற்றப்பட்டிருக்கும்.


நீங்கள் மாற்றும் பேஸ்புக் கலர் மெனுபாரானது, அனைத்து பேஸ்புக் வாடிக்கையாளர்க்கும் பொருந்தும். நீங்கள் மாற்றம் செய்வது உங்களுடைய உலவியில் மட்டுமே என்பது குறிப்பிடதக்கது.

எம்.எஸ்.ஆப்பிஸ் தொகுப்புகளில் இருந்து நேரிடையாக கூகுள் டாக்ஸ்க்கு பதிவேற்றம் செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in ,,
நாம் இதுவரை கூகுள் டாக்ஸில் டாக்குமெண்ட்களை பதிவேற்றம் செய்ய வேண்டுமெனில் தனியாக சென்று கூகுள் டாக்ஸ்யை ஒப்பன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆனால் தற்போது நேரிடையாக எம்.எஸ்.ஆப்பிஸ் தொகுப்பில் இருந்தவாறே நேரிடையாக இணையத்தின் உதவியுடன் கூகுள் டாக்ஸில் பதிவேற்றம் செய்ய முடியும். இதற்கு Google Cloud Connect என்ற அப்ளிகேஷனை உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளவும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை இணையத்தின் உதவியுடன் நிறுவிக்கொள்ளவும், இந்த அப்ளிகேஷனை  உங்களுடைய கணினியில் நிறுவ வேண்டுமெனில் உங்கள் கணினியில் .NET Framework 2.0 வேண்டும். மேலும் ஆப்பிஸ் தொகுப்பு 2003,2007 மற்றும் 2010 இவற்றில் எதாவது ஒன்று. இந்த அப்ளிகேஷன் விண்டோஸ்  XP, Vista, மற்றும் 7  ஆகிய ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களில் மட்டுமே வேலை செய்ய கூடியது ஆகும். இந்த அப்ளிகேஷனை உங்கள் கணினியில் நிறுவியப்பின் ஆப்பிஸ் தொகுப்பை ஒப்பன் செய்யவும்.


எம்.எஸ்.ஆப்பிஸ் தொகுப்பை ஒப்பன் செய்யவும் அதில் Google Cloud Connect என்ற அப்ளிகேஷனானது உங்கள் கணினியில் நிறுவிப்பட்டிருக்கும். அதில் உங்களுடைய கூகுள் அக்கவுண்டின் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு உள்நுழையவும். அடுத்ததாக தோன்றும் Approve access to your Google Account என்ற விண்டோவில் Deny access என்பதை கிளிக் செய்யவும்.


பின் அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Automatic (on every sare or when others update on Google Docs) என்னும் ஆப்ஷன் பட்டனி தேர்வு செய்து கொண்டு ஒகே பட்டனை அழுத்தவும்.


பின் ஆப்பிஸ் தொகுப்பில் உங்கள் வேலையை தொடங்கவும். பின் தானாவே இணையத்தில் கூகுள் டாக்ஸில் உங்களுடைய கோப்பானது சேமிக்கப்பட்டு விடும். 


இந்த வசதியை நீங்கள் பயன்படுத்த வேண்டுமெனில் கண்டிப்பாக இணைய இணைப்பு உங்கள் கணினியில் இருக்க வேண்டும். இந்த வசதியின் மூலமாக நீங்கள் மறதியாக கணினியில் இருந்து நீக்கிய டாக்குமெண்ட்களை கூகுள் டாக்ஸில் இருந்து மீட்டெடுத்துக்கொள்ள முடியும்.

இமேஜ்களை பிடிஎப் பைலாக கன்வெர்ட் செய்ய சிறந்த மென்பொருள் இலவசமாக லைசன்ஸ் கீயுடன்

♠ Posted by Kumaresan Rajendran in ,,
வேர்ட் பைல் பார்மெட்டிலிருந்து பிடிஎப் பைலாக மாற்றம் செய்ய பல்வேறு வழிகள் உள்ளன. ஆனால் இமேஜ்களை பிடிஎப் பைல்களாக மாற்றம் செய்ய வழிகள் குறைவு. நம்முடைய சான்றிதழ்கள் முக்கிய ஆவணங்களை ஸ்கேன் செய்து, இமேஜ் பைல் பார்மெட்களில் வைத்திருப்போம். JPG, GIF, BMP, TIF, PNG, TGA, PBM, மற்றும் PSD போன்ற பைல் பார்மெட்களில் மட்டுமே ஸ்கேன் செய்த ஆவணங்களை வைத்திருப்போம். இது போல நம்மிடம் பல்வேறு விதமான டாக்குமெண்ட்கள் இமேஜ் பார்மெட்டில் இருக்கும். இவை அனைத்தையும் ஒரே பைலாக மாற்ற வேண்டுமெனில் நாம் வேர்ட் மற்றும் பிடிஎப் பைலாக மாற்ற வேண்டும். வேர்ட் பைலாக மாற்றினால் அதை நம்முடைய அனுமதி இல்லாமல் யார் வேண்டுமானலும் எடிட் செய்ய முடியும். அவ்வாறு இல்லாமல் பிடிஎப் பைல் பார்மெட்டாக இருப்பின் அந்த பைல்களை யாராலும் எடிட் செய்ய முடியாது. அவ்வாறு இமேஜ்களை பிடிஎப் பைல்களாக உருவாக்க மென்பொருள் ஒன்று இலவசமாக கிடைக்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி

மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும் 4867JWVI3C3F5D9 இந்த கீயினை உள்ளிட்டு பதிவு செய்து கொள்ளவும். இந்த மென்பொருளின் சந்தை விலை $29.95 ஆகும். இந்த மென்பொருளை 2011- மார்ச் 22வரை மட்டுமே இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.


JPG to PDF Converter மென்பொருளை ஒப்பன் செய்யவும். பின் Add என்ற பொத்தானை அழுத்தி இமேஜ் பைல்களை தேர்வு செய்து கொள்ளவும்.


பின் எந்த இடத்தில் பிடிஎப் பைலை சேமிக்க வேண்டுமோ, அந்த இடத்தை தேர்வு செய்து கொள்ளவும். பின் Compress Quality என்பதில் அளவினை தேர்வு செய்து கொள்ளவும். பின் Convert To PDF Now என்ற பொத்தானை அழுத்தி பிடிஎப் பைலாக  சேமித்து கொள்ளவும். இமேஜ்களை  பிடிஎப் பைலாக கன்வெர்ட் செய்ய JPG to PDF Converter சிறந்த மென்பொருள் ஆகும்.

கோப்புகளுக்கு கடவுச்சொல் இட்டு பூட்ட மற்றும் மறைத்துவைக்க

♠ Posted by Kumaresan Rajendran in ,,,
கணினியை பயன்படுத்தும் பலரும் அவர்களுக்கென தனிப்பட்ட டேட்டாவினை கணினியில் சேமித்து வைத்திருப்போம். அதில் சில முக்கியமான தகவல்களும் அடங்கும், உதாரணமாக பேங்க் சம்பந்தமான டாக்குமெண்ட்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் ஆகியவை ஆகும். அவற்றை நாம் தனியே கணினியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தின் உதவியுடன் மறைத்து வைத்திருப்போம் அவற்றை எளிதாக மீட்டெடுத்து விட முடியும். அவ்வாறு இல்லாமல் அந்த குறிப்பிட்ட தகவல்களை நம்முடைய ஒருவரின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும். ஒரே கணினியை பலரும் பயன்படுத்தும் நிலையில் நம்முடைய தனிப்பட்ட தகவல்களை மற்றவர்களிடம் இருந்து மறைத்து வைக்கவும் கடவுச்சொல் இட்டு பூட்டவும். சந்தையில் பல்வேறு மென்பொருட்கள் உள்ளன. அவ்வாறு கோப்புகளுக்கு கடவுச்சொல் இட்டு பூட்டவும், மறைத்துவைக்கவும் சந்தையில் மென்பொருள் உள்ளது. ஆனால் அவையாவும் சிறப்புடையதாக இல்லை, ஒரு சில குறைபாடுகளுடன் உள்ளது. இதுபோன்ற குறைபாடுகள் எதுவும் இல்லாமல் சிறப்பான மென்பொருள் ஒன்று உள்ளது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவிக்கொள்ளவும், பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். முதல்முறையாக ஒப்பன் செய்யும் போது கடவுச்சொல்லை உருவாக்கி கொள்ளவும். பின் நீங்கள் Add என்னும் பட்டியை அழுத்தி எந்த டக்குமெண்ட்களுக்கு கடவுச்சொல் இட வேண்டுமோ அதனை தேர்வு செய்து கொள்ளவும். 


இப்போது நீங்கள் விரும்பிய போல்டர் மற்றும் டாக்குமெண்ட்  கணினியில் மறைக்கப்பட்டிருப்பதை காணமுடியும். இதை Unlock செய்ய குறிப்பிட்ட டாக்குமெண்டை தேர்வு செய்து unlock பொத்தானை அழுத்தவும். இப்போது நீங்கள் தேர்வு செய்த டாக்குமெண்ட் அன்லாக் செய்யப்பட்டிருக்கும்.


நமது விருப்பபடி அமைப்பினை (setting) மாற்றி கொள்ள முடியும்.  இதற்கு Option என்னும் பட்டியை தேர்வு செய்து மாற்றிக்கொள்ள  முடியும். இந்த மென்பொருளின் உதவியுடன் கோப்புகளை எளிதாக மறைத்து வைத்துக்கொள்ள முடியும். வேண்டுமெனில் கடவுச்சொல்லை மட்டும் உள்ளிட்டு கோப்பினை மறைக்காமல் விட்டுவிடலாம். அதே போல் கோப்பினை மறைத்து விட்டு கடவுச்சொல் இல்லாமலும் விட்டுவிடலாம். இவை அனைத்துமே நமது வசதிகேற்ப செய்து கொள்ள வேண்டியதுதான். இந்த மென்பொருளானது மிகவும் சிறப்புடையதாக இருக்கும்.

பிடிஎப் பைல்களுக்கு வாட்டர்மார்க்கினை உருவாக்க

♠ Posted by Kumaresan Rajendran in ,
தற்போது அனைத்து விதமான டாக்குமெண்ட்களும். பிடிஎப் பைல்களாவே உள்ளது. பிடிஎப் பைல்களை யாரும் எடிட் செய்ய முடியாது என்பற்காவே இதனை நாம் அதிகமாக பயன்படுத்தி வருகிறோம். ஆனால் தற்போது இந்த பிடிஎப் பைல்களை எடிட் செய்ய பல்வேறு விதமான மென்பொருட்கள் சந்தையில் உள்ளது. நாம் ஆப்பிஸ் மென்பொருட்களின் துணையுடன் ஒரு டாக்குமெண்டை உருவாக்குவோம். ஆனால் அதை பலரும் பிடிஎப் பைலக்ளாவே சேமித்து பயன்படுத்தி வருவோம். நாம் ஆப்பிஸ் டாக்குமெண்டை உருவாக்கும் போதே வாட்டர்மார்க்கையும் உருவாக்க முடியும். ஆனால் அவ்வாறு உருவாக்கும் வாட்டர்மார்க்கை எடிட் செய்து கொள்ள முடியும். அதனால் பிடிஎப் பைல்களை மற்றவர்கள் பயன்படுத்த வாய்ப்புள்ளது. மேலும் வாட்டர்மார்க் உருவாக்காமல் இருக்கும் பிடிஎப் பைல்களுக்கும் வாட்டர்மார்க்கினை உருவாக்க முடியும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவிக்கொள்ளவும், பின் இந்த Batch PDF Watermark உங்களுடைய கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் Batch PDF Watermark அப்ளிகேஷனை ஒப்பன் செய்து கொள்ளவும். பின் எந்த பிடிஎப் பைல்களுக்கு வாட்டர்மார்க் உருவாக்க நினைக்கிறீர்களோ அதனை தேர்வு செய்து கொண்டு, Text Watermark என்பதை தேர்வு டெக்ஸ்டை உள்ளிட்டு கலர் மற்றும் அளவினை தேர்வு செய்து,  Start Processing என்ற பொத்தானை அழுத்தவும். 


இப்போது நீங்கள் குறிப்பிட்ட பிடிஎப் பைலுக்கு வாட்டர்மார்க் உருவாக்கப்படிருக்கும். டெக்ஸ்ட் வாட்டர்மார்க் உருவாக்குவது போல இமேஜ் வாட்டர்மார்க்கும் உருவாக்க இந்த மென்பொருளில் வசதி உள்ளது. அதை பயன்படுத்தி இமேஜ் வாட்டர்மார்க்கினையும் உருவாக்கி கொள்ள முடியும்.


இந்த பிடிஎப் பைல் வாட்டர்மார்க் வசதியுடன், இனி பிடிஎப் பைலகளுக்கு எளிமையாக வாட்டர்மார்க்கினை உருவாக்கி கொள்ள முடியும். நம்முடைய டாக்குமெண்டை மற்றவர்கள் பயன்படுத்துவதை, இதன் மூலம் தடுக்க முடியும்.

ஆன்லைனில் 20ஜிபி வரை தகவல்களை பறிமாறிக்கொள்ள

♠ Posted by Kumaresan Rajendran in
இணையத்தை பயன்படுத்தும் அனைவருமே நண்பர்களுடன் தகவல்களை பறிமாறிக்கொள்வோம். அந்த வகையில் தகவல்களை ஆன்லைன் மூலமாக பறிமாறிக்கொள்ள பல்வேறு தளங்கள் உள்ளன. அவை அனைத்தும் குறைந்த அளவுடைய பைல்களை மட்டுமே பறிமாறிக்கொள்ள அனுமதிக்கும் ஆனால் இந்த தளத்தின் மூலம் 20ஜிபி வரை தகவல்களை பறிமாறிக்கொள்ள முடியும். நாம் இந்த தளத்தில் ஒரு நாளைக்கு 20ஜிபி வரை வேண்டுமானலும் தகவல்களை பறிமாறிக்கொள்ள முடியும். ஆனால் ஒரு பைலுடைய அளவானது 200 எம்.பி வரை மட்டுமே இருக்க வேண்டும்.   அதிக அளவுடைய தவல்களை பறிமாறிக்கொள்ள வேண்டுமெனில் நாம் ஏதாவது ஒரு மெமரி டிவைஸ் துணையுடன் மட்டுமே தகவல்களை பறிமாற்றம் செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு நம் அருகாமையில் உள்ள நண்பர்களிடம் தகவல்களை எளிமையாக பறிமாறிக்கொள்ள முடியும். ஆனால் வெளியூர்களில் பார்க்க முடியாத தூரத்தில் உள்ள நண்பர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ தகவல்களை பறிமாற்றம் செய்ய வேண்டுமெனில் அது இணையத்தின் உதவியுடன் மட்டுமே மிக விரைவாக முடியும். 

தளத்தின் முகவரிக்கான சுட்டி

இந்த தளத்தில் உங்களுக்கென ஒரு கணக்கை தொடங்கி கொள்ளவும். பின் File Manager என்பதை கிளிக் செய்து புதியதாக Create Folder என்னும் பட்டியை அழுத்தி ஒரு போல்டரை உருவாக்கி கொள்ளவும். வேண்டுமெனில் பாஸ்வேர்ட் உருவாக்கி கொள்ள முடியும்.  பின் Upload என்னும் பட்டியை அழுத்தி வேண்டிய பைலை பதிவேற்றம் செய்து கொள்ள முடியும்.


நீங்கள் விரும்பினால் தளத்தில் இருந்தவாறே பல பைல்களை ஒருகிணைத்து Compress பைலாக உருவாக்க முடியும். இதற்கு பைல்களை தேர்வு செய்துகொண்டு More Actions என்னும் தேர்வு மெனுவை கிளிக் செய்து Compress File என்பதை கிளிக் செய்து பைலை சேமித்துக்கொள்ள முடியும்.


இந்த தளத்தில் நீங்கள் தகவல்களை சேமித்து  வைப்பதுடன், நண்பர்களுக்கு பைலுடைய லிங்கினை அனுப்பி தகவலை பறிமாறிக்கொள்ள முடியும். இந்த தளத்தின் மற்றொரு வசதி என்னவெனில் MP3 பிளேயர் மற்றும் Flash பிளேயர் வசதி உள்ளது. இந்த வசதியின் மூலம் தளத்தில் இருந்தவாறே பாடலை கேட்க முடியும்.

YOUTUBE சாங்க் டவுண்லோடர்

♠ Posted by Kumaresan Rajendran in ,
யூடியூப் தளத்தில் உள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்ய பல வழிமுறைகள் உள்ளன. நேரிடையாக குறிப்பிட்ட வீடியோவின் முகவரியை (URL) பயன்படுத்தி வீடியோவினை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். இதற்கு பல்வேறு மென்பொருள்கள் உள்ளன. மேலும் இந்த யூடியூப் தளத்தில் உள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்ய ஒரு சில தளங்களும் உதவி செய்கிறன. இவ்வாறு யூடியூப் தளத்தில் இருக்கும் வீடியோவினை தரவிறக்கம் செய்ய பல்வேறு வழிகள் இருப்பினும் இவையாவும் சிறப்புடையதாக இல்லை. யூடியூப் தளத்தில் இருக்கும் வீடியோவினை தரவிறக்கம் செய்ய ஒரு அருமையான மென்பொருள் உள்ளது. நாம் இந்த மென்பொருளில் இருந்தவாறே இணையத்தின் உதவியுடன் யூடியூப் தளத்தில் இருந்து வீடியோ மற்றும் ஆடியோவினை தனித்தனியே பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். வேண்டுமெனில் இரண்டையும் சேர்த்தும் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளவும். இந்த மென்பொருளை கணினியில் நிறுவ வேண்டுமெனில் உங்களுக்கு டாட்நெட் ப்ரேம்வோர்க் வேண்டும். இந்த மென்பொருளை முதல் முதலாக நீங்கள் பயன்படுத்தும் போது, உங்களுடைய பெயர் மற்றும் ஈமெயில் முகவரியை உள்ளிட்டு, ஒரு கோடினை பெற்று மென்பொருளை ஒப்பன் செய்ய வேண்டும். 


Search Music or Videos என்பதை தேர்வு செய்யவும். தோன்றும் சர்ச் பாக்சில் உங்களுக்கு விருப்பமான கீவேர்டினை உள்ளிட்டு GO என்ற பொத்தானை அழுத்தவும்.அடுத்ததாக தோன்றும் லிஸ்ட்டில்  உங்களுக்கு விருப்பமான ஆடியோ மற்றும் விடியோவை தேர்வு செய்து Download Music, Download Video அல்லது Download Music & Video என்ற பொத்தானை அழுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.  இந்த மென்பொருளின் சிறப்பம்சமே வீடியோ மற்றும் ஆடியோவினை தனித்தனியாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். வேண்டுமெனில் இரண்டையும் சேர்த்தும் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

இணைய இணைப்பு இல்லாமல் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 உலவியை நிறுவ

♠ Posted by Kumaresan Rajendran in ,
இண்டர்நெட் எக்ஸ்புளோரர் உலவி உலகளவில் மிகச்சிறந்த உலவியாகும். இந்த உலவியை பயன்படுத்தாத கணினி பயனாளர்களே இல்லை என்று கூறுமளவிற்கு சிறப்பான உலவியாகும். இண்டர்நெட் எக்புளோரர் உலவி மைக்ரோசாப்ட் நிறுவனத்துடையதாகும். இண்டர்நெட் எக்ஸ்புளோரரின் அன்மைய பதிப்பானது இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 ஆகும். இந்த இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 உலவியை இணைய இணைப்பு இல்லாமல் கணினியில் நிறுவ முடியாது. கணினியில் முழுவதுமாக இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 உலவி முழுவதுமாக இன்ஸ்டால் ஆக வேண்டுமெனில், இணைய இணைப்பு இருந்தே ஆக வேண்டும். அவ்வாறு இணைய இணைப்பு இல்லாமல் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 உலவியை கணினியில் நிறுவிக்கொள்ள முடியும்.  



மென்பொருளை தரவிறக்க:-
இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி உங்களுடைய கணினியில் நிறுவிக்கொள்ளவும். இணைய இணைப்பு இல்லாத கணினிகளிலும் இண்டர்நெட் எக்ஸ்புளோரர்9 உலவியை நிறுவிக்கொள்ளவும். இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 உலவியினை விண்டோஸ்ஏழு ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் மட்டுமே நிறுவிக்கொள்ள முடியும், என்பது குறிப்பிடதக்கது.

தற்போது நீங்கள் இணைய இணைப்பு இல்லாத கணினியில் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 உலவியை நிறுவிக்கொள்ள முடியும். இதனை ஆப்லைன் இன்ஸ்டாலர் என்றும் கூறமுடியும்.

லோகோக்களை உருவாக்க Logo Creator இலவசமாக

♠ Posted by Kumaresan Rajendran in ,
லோகோ என்பது முழுவிவரத்தையும் குறிப்பிடும் முத்திரையாகும், லோகோ என்பது ஒரு முக்கியமான அடையாளம் ஆகும். இதை நாம் அனைத்துவிதமான வலைப்பக்கங்களிலும் மற்றும் நிறுவனத்தின் குறியீடாகவும் பார்க்க முடியும். இந்த லோகோக்களை உருவாக்க நாம் போட்டோசாப் அல்லது வேறு எதாவது ஒரு மென்பொருளின் உதவியினை நாட வேண்டும். இது மாதிரியான லோகோக்களை உருவாக்க ஒரு மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது. இந்த மென்பொருளின் சந்தை விலை $29.95 ஆகும். தற்போது இந்த மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது. இந்த லோகோ கிரியேட்டர் மென்பொருளானது மேக் மற்றும் விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்திற்கு மட்டுமே இலவசமாக தற்போது கிடைக்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய உங்களிடம், முகநூல் (Face Book) கணக்கு இருக்க வேண்டும். சுட்டியினை கிளிக் செய்து குறிப்பிட்ட தளத்திற்கு சென்று உங்களுடைய முகநூல் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். மென்பொருளை தரவிறக்கம் செய்ய Like என்னும் பொத்தானை கிளிக் செய்ய வேண்டும். 

இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கணிப்பொறியில் நிறுவிக்கொள்ளவும். பின் மென்பொருளை ஒப்பன் செய்யவும், அதில் ஏற்கனவே லோகோ டெம்பிளேட்கள் இருக்கும், அதை தேர்வு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். இல்லையெனில் புதியதாக நீங்களே ஒரு லோகோவினை உருவாக்கி கொள்ள முடியும். இந்த மென்பொருளில் எடிட்ங் வேலைகளை மிகவும் எளிமையாக செய்ய முடியும். இந்த மென்பொருளில் உருவாக்கிய லோகோக்களை பல்வேறு விதமான பார்மெட்களில் சேமித்துக்கொள்ள முடியும்.


இந்த லோகோ கிரியேட்டர் மென்பொருளின் உதவியுடன் மிகவும் எளிமையான முறையில் லோகோக்களை உருவாக்கி கொள்ள முடியும்.

விண்டோஸ் எக்ஸ்புளோரர் டூல்பாரில் Copy, Paste, Delete பொத்தான்களை சேர்க்க

♠ Posted by Kumaresan Rajendran in ,
கணினியை பயன்பாட்டாளர்கள் தினமும் கணினியில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் குறிப்பிடதக்கது காப்பி, பேஸ்ட் மற்றும் டெலிட் போன்றவை ஆகும்.  பலர் அதிகமாக காப்பி, பேஸ்ட் மற்றும் டெலிட் நடவடிக்கைகளில் ஈடுபடுவர், இந்த நடவடிக்கைகளை நாம் மெனுபார் மற்றும் சாட்கட் உதவியுடன் மட்டுமே மேற்கொள்வோம். மிஞ்சி போனால் மொளஸ் உதவியுடன் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வோம். இந்த செயல்பாடுகளை செய்ய நாம் டூல்பாரில் பட்டன்களை நிறுவி அதன் மூலமும் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். அதற்கு விண்டோஸ் ரிஸ்டரியில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும். 

காப்பி, பேஸ்ட் மற்றும் டெலிட் பொத்தான்களை விண்டோஸ் லைபரரியில் இணைக்க:-

முதலில் ரன் (Winkey + R) விண்டோவை ஒப்பன் செய்து அதில் regedit என டைப் செய்து ஒகே பொத்தானை அழுத்தவும், அடுத்ததாக ஒப்பன் ஆகும் விண்டோவில் கீழ்காணும் முறைப்படி ஒப்பன் செய்யவும்.

HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\
Explorer\FolderTypes\{fbb3477e-c9e4-4b3b-a2ba-d3f5d3cd46f9}


கடைசியாக ஒப்பன் செய்யும் {fbb3477e-c9e4-4b3b-a2ba-d3f5d3cd46f9} என்பதை தெரிவு செய்யவும் அதில் தோன்றும் துணை பிரிவில் TasksItemsSelected என்பதை கிளிக் செய்யவும்.  வலது புறமாக தோன்றும் Default என்பதை டபுள் கிளிக் செய்யவும் தோன்றும் விண்டோவில் ஏற்கனவே Windows.print;Windows.email;Windows.burn;Windows.CscWorkOfflineOnline இந்த கட்டளைகள் இடம் பெற்றிருக்கும். அதில் Windows.Copy;Windows.Paste;Windows.Delete;  இந்த கட்டளைகளையும் சேர்த்துக்கொள்ளவும். பின் ஒகே செய்து விடவும்.

காப்பி, பேஸ்ட் மற்றும் டெலிட் பொத்தான்களை விண்டோஸ் எக்ஸ்புளோரரில் இணைக்க:-

முதலில் கூறியவாறே விண்டோஸ் ரிஸ்டரியை ஒப்பன் செய்து கொள்ளவும். பின் கீழ்கண்டவாறு பட்டியல்களை தேர்வு செய்யவும்.

HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\
Explorer\FolderTypes\{5c4f28b5-f869-4e84-8e60-f11db97c5cc7}


கடைசியாக தோன்றும் {5c4f28b5-f869-4e84-8e60-f11db97c5cc7} என்னும் துணைப்பிரிவில் வலதுகிளிக் செய்து New > Key என்பதை தேர்வு செய்யவும் தோன்றும் விண்டோவில் TaskItemsSelected குறிப்பிட்டு ஒகே செய்யவும். பின் வலது புறமாக தோன்றும் Default என்பதை டபுள் கிளிக் செய்யவும் தோன்றும் தோன்றும் விண்டோவில் Windows.Copy;Windows.Paste;Windows.Delete; என்னும் கட்டளையை இணைக்கவும். 


பின் கணினியை ஒரு முறை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். இப்போது விண்டோஸ் எக்ஸ்புளோரரை ஒப்பன் செய்து பார்க்கவும். டூல்பாரில் காப்பி, பேஸ்ட் மற்றும் டெலிட் பொத்தான்கள் இணைக்கப்பட்டிருக்கும்.


இந்த காப்பி, பேஸ்ட் மற்றும் டெலிட் பொத்தான்களை பயன்படுத்தி இனி எளிமையாக இந்த காப்பி, பேஸ்ட் மற்றும் டெலிட் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

வேர்ட் - 2010 ல் பேக்ரவுண்டில் இமேஜ்யை கொண்டுவருவது எப்படி

♠ Posted by Kumaresan Rajendran in
வேர்ட் 2010 - ல் பலவிதமான புதிய வசதிகள் உள்ளன. வேர்ட் தொகுப்பானது புதியதாக ஒரு டாக்குமெண்டை உருவாக்கவும். அதில் வேலைபாடுகளை செய்யவும் பயன்படுகிறது.  இதில் பல்வேறு விதமான வேலைபாடுகள் உள்ளன சாதாரண Font மாற்றத்தில் தொடங்கி பேக்ரவுண்டை மாற்றம் செய்வது வரை பல்வேறு வசதிகள் இந்த வேர்ட் தொகுப்பில் உள்ளது. இந்த வேர்ட் தொகுப்பில் இவ்வாறு பல்வேறு வசதிகள் நிறைந்திருந்தாலும் இது போன்ற வசதிகளை  எவ்வாறு பயன்படுத்துவது என்று பயனாளருகளுக்கு தெரிவதில்லை. இது போன்ற வசதிகள் மறைமுகமாகவே உள்ளது. பேக்ரவுண்டில் ஒரு கலரை அமைப்பதற்கு பதிலாக ஒரு புகைப்படத்தை அமைத்தால் எவ்வளவு சிறப்பாக பேக்ரவுண்டில் புகைப்படத்தை எவ்வாறு கொண்டுவருவது என்று கீழே காண்போம்.

முதலில் வேர்ட் 2010 யை ஒப்பன் செய்து கொள்ளவும் பின் மெனுபார் தொகுப்பில் Page Layout என்பதை தேர்வு செய்யது  தோன்றும் பிரிவில்  Page Color என்பதை தேர்வு செய்யவும். அதில் Fill Effects என்பதை தேர்வு செய்யவும்.


Fill Effects என்பதை கிளிக்   செய்தவுடன் தோன்றும் விண்டோவில், Picture என்னும் பட்டியை தேர்வு செய்து எந்த படம் பேக்ரவுண்டாக வேண்டுமோ அதனை தேர்வு செய்து கொள்ளவும்.



பின் ஒகே செய்துவிடவும் பின் நீங்கள் விரும்பிய படமானது பேக்ரவுண்டில் இருக்கும். இதில் டெக்ஸ்டை டைப் செய்ய வேண்டுமெனில் டெக்ஸ்ட் கலரை மாற்றம் செய்து கொண்டு வேர்ட் டாக்குமெண்டை உருவாக்க முடியும்.

விண்டோஸ் தொடங்கும் நேரத்தை கணக்கிட

♠ Posted by Kumaresan Rajendran in ,
நம்முடைய கணினி எவ்வாறு செயல்படுகிறது என்பதை கணினி தொடங்கும் நேரத்தை கொண்டே அளவிட முடியும். நம்முடைய கணினியில் அளவுக்கதிமான புரோகிராம்கள் நிறுவப்பட்டாலும், அல்லது கணினி வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகி இருந்தாலும் கணினி மெதுவாக செயல்பட தொடங்கும் இதனை நாம் கணினி தொடங்கும் நேரத்தை கொண்டே கணக்கிட்டு கொள்ள முடியும். நம்முடைய கணினியிலும் நம் நண்பருடைய கணினியிலும் ஒரே ஆப்ரேட்டிங் சிஸ்ட்டம் தான் நிறுவியிருப்போம். ஆனால் நம்முடைய கணினி தொடங்கும் நேரத்தை விட நண்பருடைய கணினி மிக விரைவாக தொடங்கும். நமக்கு ஆச்சர்யமாக இருக்கும் இதற்கு என்ன காரணம் நம்முடைய கணினியில் உள்ள வன்பொருள்களைவிட, நண்பருடைய கணினியில் இருக்கும் வன்பொருள்கள் அதிக மதிப்புடையதாக இருக்கும். ஆனால் இதற்கு இதுமட்டும் காரணமில்லை நம்முடைய கணினியில் நிறுவப்பட்டுள்ள மென்பொருள்கள், கணிப்பொறியில் தேங்கியுள்ள குப்பைகள் மற்றும்  ஹார்ட்டிஸ்க் முறைப்படுத்தபடாமல் இருத்தல் போன்றவை ஆகும். சரி நம்முடைய கணினியை விட நம் நண்பருடைய கணினி எவ்வளவு வேகமாக தொடங்குகிறது என்பதை துல்லியமாக அறிந்து கொள்ள ஒரு மென்பொருள் உள்ளது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும், பின் Start என்ற பொத்தானை அழுத்தவும் கணிப்பொறியை ரீஸ்டார்ட் செய்யுமாறு ஒரு செய்தி வரும், உடனே கணினியை ரீஸ்டார்ட் செய்து கொள்ளவும். உங்களுடைய கணினி மறுதொடக்கம் ஆனவுடன். எவ்வளவு நேரத்தில் தொடங்கியது என்ற செய்தி தோன்றும். 



குறைந்தபட்சம் 1நிமிடத்தில் கணினி தொடங்க வேண்டும். இல்லையெனில் கணிப்பொறியில் ஏதேனும் குறைபாடுகள் இருக்க வேண்டும். இவ்வாறு கணினி தொடங்கும் நேரத்தை நம்மால் அறிந்து கொள்ள முடியும். இந்த மென்பொருளின் உதவியுடன் விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்கள் தொடங்கும் நேரத்தை எளிமையாக கணக்கிட முடியும்.

வீடியோக்களை எடிட் செய்ய Daniusoft Video Studio Express மென்பொருள் இலவசமாக லைசன்ஸ் கீயுடன்

♠ Posted by Kumaresan Rajendran in
நான் இதுவரை பல மென்பொருட்களை பகிர்ந்துள்ளேன், ஆனால் வீடியோவினை எடிட் செய்வதற்கு எந்த மென்பொருளையும் இதுவரை பகிர்ந்தது இல்லை. முதல் முறையாக வீடியோவினை எடிட் செய்வதற்கான மென்பொருளை பகிர்ந்து கொள்கிறேன். இந்த Daniusoft Video Studio Express மென்பொருளானது $35.00 மதிப்புடையதாகும். இந்த மென்பொருளை வரும் 2011, பிப்ரவரி 16ம் தேதி வரை பேஸ்புக் மற்றும் டிவிட்டர் வாடிக்கையாளர்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். அதுவும் லைசன்ஸ் கீயுடன். நாம் இதுபோன்ற மென்பொருள்களை விலைக்கொடுத்து மட்டுமே வாங்க வேண்டும். இலவசமாக எந்த மென்பொருளும் கிடைக்காது அப்படியே இலவசமாக கிடைக்கும் மென்பொருள்கள் எதுவும் சிறப்புடையதாக இருக்காது. Daniusoft Video Studio Express மிகவும் சிறப்பான மென்பொருளாகும்.

மென்பொருளை இலவசமாக பெற சுட்டி


சுட்டியை கிளிக் செய்தவுடன் பேஸ்புக் தளத்திற்கு அழைத்து செல்லப்படுவீர்கள், பேஸ்புக் தளத்தின் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டவும். பின் Like என்னும் பட்டியை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் முகப்புதிரை விலகும். பின் உங்களுடைய பெயர் மற்றும் ஈ-மெயில் முகவரியை உள்ளிட்டு Get it free now என்ற பொத்தானை அழுத்தவும். பின் உங்களுடைய ஈ-மெயிலுக்கு ஒரு மெயில் அனுப்பபடும் அதில் கீ மற்றும் மென்பொருளை பதிவிறக்கம் செய்வதற்கான சுட்டி இரண்டும் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த சுட்டியினை பயன்படுத்தி மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். உங்களுக்கு வந்த ஈ-மெயிலானது Spam மெயிலாக இருக்கும். பின் மென்பொருளை இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளவும். 



இந்த மென்பொருளை பயன்படுத்தி வீடியோவினை எடிட் செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளின் மூலமாக வீடியோக்களை எளிமையாக எடிட் செய்ய முடியும். இந்த மென்பொருளின் உதவியுடன் வீடியோக்களை iPod, iPhone, iPad  ஆகிய சாதனங்களுக்கு ஏற்றவாறு வீடியோவினை கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளானது விண்டோஸ் 2003, XP, Vista மற்றும் 7 போன்ற இயங்குதளத்தில் வேலை செய்ய கூடியது ஆகும். மென்பொருளை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும். இந்த மென்பொருளானது பல்வேறு வீடியோ பைல் பார்மெட்களை சப்போர்ட் செய்யக்கூடியது ஆகும்.

வலைப்பக்கங்களில் உள்ள எழுத்துக்களை ஒலியாக மாற்றம் செய்ய நெருப்புநரி உளவிக்கான நீட்சி

♠ Posted by Kumaresan Rajendran in ,
இன்றைய நிலையில் பல்வேறு விதமான இணையதளங்கள் உள்ளன. ஒருவரை பற்றிய சொந்த தகவலினை மற்றவர்களிடமோ அல்லது நண்பர்களிடமோ பறிமாறிக்கொள்ள இன்று இணையதளம்தான் பயன்படுகிறது. ஒரு கம்பெனியை பற்றி வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்வதற்கும். இன்றைய காலக்கட்டத்தில் இணையதளம்தான் பயன்படுகிறது. புதிதுபுதிதாய் இணையதளங்கள் தோன்றிய வன்னமே உள்ளது. முதலில் ஆயிரக்கணக்கில் இருந்த இணையதளங்கள் தற்போது என்ன முடியாத அளவிற்கு உள்ளது. இவ்வாறு உள்ள இணையதளங்கள் அனைத்துமே எழுத்து மற்றும் படங்களினால் ஆனது. ஒரு கருத்தினை எளிமையாக புரிந்துகொள்ள புகைப்படம் பயன்படுகிறது. எழுத்து அது நீண்டு கொண்டே செல்லும். இவ்வாறு இணையதளங்களில் உள்ள எழுத்துக்கள் அனைத்தையுமே படிக்க முடியாது. ஒரு சில குறிப்பிட்ட எழுத்துகளை மட்டுமே படிக்க முடியும். இதற்கு பதிலாக அந்த இணையதள எழுத்துக்களை பிரின்ட் எடுக்க முடியும். இதனால் பணம் விரயம் ஆகும். இதுபோன்ற சிக்கல்களை தவிர்க்க எழுத்துக்களை ஒலியாக மாற்றிக்கொள்ள முடியும். ஒலியாக மாற்றிக்கொள்ள நெருப்புநரி உளவிக்கு நீட்சி ஒன்று உள்ளது.

டெக்ஸ்ட் To வாய்ஸ்க்கான நீட்சி


இந்த நீட்சியினை உலவியில் இணைத்துக்கொள்ளவும். பின் ஒரு முறை நெருப்புநரி உலவியினை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். இப்போது வலைப்பக்கம் ஒன்றை நெருப்புநரி உளவியின் மூலமாக திறக்கவும்.  நெருப்புநரி உளவியின் அடிப்பகுதியில் எழுத்திலிருந்து ஒலியாக மாற்றுவதற்கான ஆப்ஷன் இருக்கும். எந்த எழுத்துக்களையெல்லாம் ஒலியாக மாற்ற வேண்டுமோ அதனை தேர்வு செய்து இந்த பட்டனை அழுத்தினால் போது எழுத்தானது ஒலியாக மாற்றம் செய்யப்பட்டு டவுண்லோட் செய்வதற்கான ஆப்ஷன் கிடைக்கும். அதனை பயன்படுத்தி நீங்கள் டவுண்லோட் செய்துகொள்ள முடியும்.



இவ்வாறு பதிவிறக்கும் ஒலியானது .mp3 பார்மெட்டில் இருப்பதால் நாம் இதனை எளிமையாக பயன்படுத்திக்கொள்ள முடியும். செல்போனில் பதிவேற்றம் செய்தும் கேட்டுக்கொள்ள முடியும். எப்போதும் இணையத்தில் பரபரப்பாக செயலாற்றுபவர்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மிகப்பெரிய பகுதியாக உள்ள எழுத்து தொடர்களை இவ்வாறு மாற்றம் செய்து கேட்டுக்கொள்ள முடியும். இதனால் நேரம் மிச்சம் ஆகும். கண்பார்வையற்றவர்ளிடம்  இணையத்தில் உள்ள செய்தியினை இந்த வசதியின் மூலம் கொண்டு சேர்க்க முடியும். என்ன ஒரு பிரச்சினை ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும். ஒரு முக்கியமான குறிப்பு ஆங்கில எழுத்துக்களை மட்டுமே ஒலியாக மாற்றம் செய்து கொள்ள முடியும்.

போட்டோக்களை அழகுபடுத்த போட்டோசைன்

♠ Posted by Kumaresan Rajendran in
இயற்க்கை சூழலாக இருக்கட்டும், பிரபலமான மனிதராக இருக்கட்டும் அதை நாம் புகைப்படமாக சேமித்து வைத்திருப்போம். ஒரு சில படங்கள் அழகு குன்றியிருக்கும், அப்படிப்பட்ட படங்களை அழகுபடுத்த நாம் போட்டோசாப் போன்ற எதாவது ஒரு மென்பொருளை நாட வேண்டும். ஒரு சிலருக்கு போட்டோசாப் மென்பொருளில் எவ்வாறு பணிபுரிவது என்பது தெரியாது. அப்படிப்பட்டவர்களுக்கெனவே உள்ளதுதான் போட்டோசைன் என்ற மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையானதாக இருக்கும். நம்முடைய நண்பர்களை செல்போன் மூலமாக படம் எடுத்து வைத்திருப்போம் பின்பகுதி (Background) மோசமான நிலையில் இருக்கும் அப்படிப்பட்ட  புகைப்படங்களை இந்த மென்பொருளின் மூலமாக மெறுகேற்ற முடியும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த மென்பொருளானது இரண்டு விதமாக உள்ளது மினி வெர்சனாகவும் மற்றொன்று முழுவதுமாகவும் உள்ளது. மினி வெர்சன் மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும். முழு போட்டோசைன் மென்பொருளை  பணம் செலுத்தியே பெற வேண்டும். மினிவெர்சனில் வெறும் 237 டெம்ப்ளேட்கள் மட்டுமே உள்ளது. ஆனால் முழு போட்டோசைன் மென்பொருளில் 700 க்கும் மேற்ப்பட்ட டெம்ப்ளேட்கள் உள்ளது. இந்த மென்பொருளானது போட்டோக்களை அழகுபடுத்த பயன்படுகிறது. ஒன்றுக்கும் மேற்ப்பட்ட புகைப்படங்களை ஒண்றினைக்கவும் இந்த புகைப்படம் உதவுகிறது, நண்பர்களின் குருப் போட்டோவினை இந்த மென்பொருள் மூலமாக உருவாக்க முடியும்.