தமிழில் கணினி செய்திகள்

பேஸ்புக்கில் உள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்ய நெருப்புநரி உளவிக்கான நீட்சி

♠ Posted by Kumaresan R in , at 10:29 PM
பேஸ்புக் என்பது நண்பர்களிடம் உள்ள தகவல்களை பறிமாறிக்கொள்ள பயன்படும் ஒரு ஷோசியல் நெர்வோர்க் ஆகும். இந்த தளத்தில் நம்முடைய தகவல்கள் மட்டுமல்லாது போட்டோ, வீடியோ போன்றவற்றை நண்பர்களிடம் பறிமாறிக்கொள்வோம். இவ்வாறு பேஸ்புக் தளத்தில் பறிமாறிக்கொள்ளும் வீடியோவை தரவிறக்கம் செய்து பயன்படுத்த பலர் முயன்று இருப்போம். ஆனால் தோல்வியே கிடைத்திருக்கும். சிலர் ஒருசில மென்பொருளின் உதவியுடன் பேஸ்புக் வீடியோவை தரவிறக்கம் செய்ய முயற்ச்சி செய்திருப்போம், அப்போதும் ஏமாற்றமே மிஞ்சும் ஆனால் இதுபோன்ற பிரச்சினைகளை தீர்க்க பேஸ்புக்கில் உள்ள வீடியோக்களை தரவிறக்க செய்ய முடியும். நெருப்புநரி உளவியில் பேஸ்புக் தளத்தில் உலவும் போது அந்த தளத்தில் உள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்ய முடியும்.

பேஸ்புக் வீடியோ டவுண்லோடர் நீட்சிக்கான சுட்டி


நெருப்புநரி உளவியில் இந்த நீட்சியை தரவிறக்கம் செய்து கொள்ளவும் பின், நெருப்புநரி உளவியை ஒரு மறுதொடக்கம் செய்து கொள்ளவும். இப்போது நீங்கள் உங்களுடைய பேஸ்புக் அக்கவுண்டில் நுழைந்து கொள்ளவும் பின் எந்த வீடியோவை பதிவிறக்க செய்ய வேண்டுமோ அந்த வீடியோவை ஒப்பன் செய்யவும், வீடியோவின் அடிப்பகுதியில் வீடியோவை டவுண்லோட் செய்து கொள்வதற்கான லிங் கிடைக்கும். இந்த லிங்கை பயன்படுத்தி வீடியோவை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.இந்த முறையை பயன்படுத்தி பேஸ்புக் தளத்தில் உள்ள வீடியோக்களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். பேஸ்புக் தளத்தில் உள்ள போட்டோக்களை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இந்த நீட்சியானது நெருப்புநரி உளவிக்கு மட்டுமே பொருந்தும், என்பது குறிப்பிடதக்கது.

1 comments:

மிகவும் பயனுள்ள பதிவுகள் அனைத்து.. தொடர்ந்து தாருங்கள்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

Post a Comment