தமிழில் கணினி செய்திகள்

ஆன்லைன் ஷாப்பிங்கில் பொருட்களை சரியான விலைகொடுத்து வாங்குவது எப்படி - Buyhatke

இன்றைய காலகட்டத்தில் நாம் எந்த பொருட்களை வாங்க நினைத்தாலும் நாம் முதலில் செல்வது ஆன்லைன் வர்த்தக தளங்களுக்குதான் அதிலும் மிக முக்கியமாக எலெக்ட்ரானிக் பொடுட்களான மொபைல், கணினி போன்ற பொருட்கள் அதிகமாக வாங்கப்படுகிறது இதற்கு மிக முக்கியமான காரணம் நாம் வாங்கும் பொருட்கள் சரியில்லை என்றாலோ, திருப்தி அளிக்கவில்லை என்றாலோ அதனை திருப்பி கொடுத்துவிட்டு வேறு மாற்று பொருளையோ  அல்லது பணத்தினையோ திரும்ப பெற்றுக்கொள்ள முடியும். இவ்வாறு நாம் வாங்கும் பொருட்களை நாம் சரியான விலை கொடுத்துதான் வாங்குகின்றோமா என்றால் கண்டிப்பாக இல்லை என்றுதான் சொல்வேன். ஏனென்றால் நாம் ஆன்லைன் மூலமாக வாங்கும் எந்த பொருளுமே ஒரே விலையில் இருப்பதில்லை என்பதுதான் உண்மை. நாளுக்குநாள் பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்பட்டு கொண்டே தான் இருக்கும். மேலும் தள்ளுபடி என்று சொல்லி விற்க்கப்படும் பொருட்களுமே அதிக இலாபத்தில் விற்கப்படும்.

இதுபோன்ற பிரச்சினையில் இருந்து விடுபட Buyhatke என்னும் மென்பொருள் பன்படுகிறது. இந்த மென்பொருள் கூகுள் குரோம் நீட்சியாகவும், Windows, Android, IOS போன்ற மொபைல் செயலிகளாகவும் கிடைக்கிறது. இது இலவச மென்பொருள் ஆகும்.

கூகுள் குரோம் நீட்சி சுட்டி

Windows மென்பொருள் சுட்டி

Android மென்பொருள் சுட்டி

IOS மென்பொருள் சுட்டி



மேலே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை பயன்படுத்தி கூகுள் குரோம் உலாவியில் நீட்சியை நிறுவிக்கொள்ளவும். இந்த நீட்சியின் மொபைல் அப்ளிகேஷன் சுட்டிகளை மேலே கொடுத்துள்ளேன் அதனை பயன்படுத்தி மொபைல் போன்களின் Buyhatke அப்ளிகேஷனை நிறுவிக்கொள்ளவும். இந்த மென்பொருள் Flipkart, Amazon, Myntra, Snapdeal போன்ற தளங்களில் மிகச்சரியாக வேலை செய்கிறது.

உதாரணத்திற்கு Flipkart தளத்தில் எவ்வாறு இந்த Buyhatke நீட்சியை பயன்படுத்துவது என்று பார்ப்போம். 

Redmi Note 4 னை எடுத்து கொண்டால் இதன் தற்போதைய விலை ரூபாய் 10,999 ஆகும். இந்த விலை தான் மிக குறைந்த விலையா என்று பார்ப்பதற்கு Buyhatke நீட்சி Graph வசதியினை அளிக்கிறது இதன் மூலம் ஒவ்வொரு நாளும் எவ்வளவு தொகைக்கு விற்க்கப்பட்டது என்பதனை மிகதெளிவாக தெரிந்து கொள்ள முடியும். 






மேலும் இந்த நீட்சியானது பல்வேறு வசதிகளை அளிக்கிறது. Watch Price என்னும் ஆப்ஷன் மூலமாக Alert வசதியினை நீங்கள் பெற முடியும். ஒரு பொருளின் விலையினை குறிப்பிட்டு அந்த பொருளின் விலை குறையும் போது அதனை Alert மூலமாக பெற முடியும். பொருட்களை வாங்கும் போது கூப்பன் உள்ளதா என்றும் சரியான கூப்பன்கள் வரிசைபடுத்தப்பட்டு இருக்கும். இதனையும் பயன்படுத்தி பொருட்களை இன்னும் குறைவாக வாங்கி கொள்ள முடியும்.






இதே பொருள் மற்ற வர்த்தக தளங்களில் எவ்வளவு தொகைக்கு விற்க்கப்படுகிறது என்பதையும் ஒரே இடத்தில் இருந்து கொண்டே தெரிந்து கொள்ள முடியும். இதன் மூலமாக மற்ற தளங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

Youtube சேனல் முகவரி :- 


இந்த பதிவின் வீடியோ பதிவு:- 


Youtube வீடியோக்களை நேரிடையாக தரவிறக்கம் செய்ய

Youtube தளத்திலிருந்து வீடியோக்களை மூன்றாம் நிலை மென்பொருள்கள் இல்லாமல் நேரிடையாக உலாவி (Browser)   துணையுடன் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். Youtube வீடியோக்களை எளிமையாக பதிவிறக்கம் செய்ய நீட்சி (Add-on) பயன்படுகிறது. 

நீட்சிகளை தரவிறக்கம் செய்ய முகவரி :- 

கூகுள் குரோம், நெருப்புநரி மற்றும் ஒபேரா உலாவிகளில் இந்த நீட்சிகளை மேலே கொடுக்கப்பட்டுள்ள தரவிறக்க முகவரிகளை பயன்படுத்தி தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளவும். பின் Youtube தளத்திற்கு சென்று வீடியோவினை காணும் போது வீடியோவிற்கு கீழ் பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு இருக்கும் அதனை பயன்படுத்தி தரவிறக்கம் செய்து கொள்ளவும்.



மேலே கூறப்பட்டுள்ள முறையினை பயன்படுத்தி கூகுள் குரோம், நெருப்புநரி மற்றும் ஒபேரா ஆகிய உலாவிகளில் Youtube வீடியோக்களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

Youtube சேனல் முகவரி :- 


இந்த பதிவின் வீடியோ பதிவு:- 


பேஸ்புக்கில் உள்ள படங்களை ஜூம் செய்து பார்க்க

பேஸ்புக் தளத்தில் தினமும் லட்சக்கணக்கான போட்டோக்கள் பதிவேற்றம் மற்றும் பகிர்ந்துகொள்ளப்படுகிறது. இவ்வாறு உள்ள போட்டோக்களை நாம் ஒப்பன் செய்து பார்த்தால் மட்டுமே முழு போட்டோவினையும் முழுமையாக காண முடியும். இதற்கு பதிலாக போட்டோவினை ஒப்பன் செய்யாமலையே , போட்டோக்களை ஜூம் செய்து பார்க்கவும் முடியும் இதற்கு கூகுள் குரோம் நீட்சி ஒன்று உதவி செய்கிறது.

நீட்சியினை  குரோம் உலாவியில் இணைத்து கொள்ள சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று நீட்சியினை குரோம் உலாவியில் இணைத்துக்கொள்ளவும். பின் ஒருமுறை குரோம் உலாவியை மறுதொடக்கம் செய்யவும். இப்போது உங்களுடைய முகநூல் கணக்கில் நுழைந்து ஏதாவது ஒரு படத்தின் மேல் உங்களுடையை சுட்டெலியை கொண்டு செல்லவும். தற்போது போட்டோவானது ஜூம் செய்யப்படும்.



மேலும் குழுவாக முகநூலில் உள்ள அனைத்து போட்டோக்களையும் இந்த வசதியை பயன்படுத்தி எளிமையாக ஜூம் செய்து பார்த்துக்கொள்ள முடியும்.

ஈமெயில்கள் ஒப்பன் செய்யப்பட்டதா என்பதை அறிய

ஸ்மார்ட் போன்கள் மூலம் தற்போது தகவல் பரிமாற்றம் என்பது மிகவும் எளிதாகிவிட்டது. குறுந்தகவல் அனுப்பும் காலம் மலையேறும் தொலைவில் இல்லை. தற்போது வாட்ஸ்அப், கைக், டெலிகிராம் போன்ற இலவச தகவல் பரிமாற்ற செயலிகளின் வழியே விரைவாக நாம் தகவல்களை பரிமாறிக்கொள்கிறோம். இவ்வாறு அனுப்பபடும் தகவல் குறிப்பிட்ட மொபைல் எண்னுக்கு சென்றடைந்துவிட்டதா, அச்செய்தி ஒப்பன் செய்யப்பட்டதா என்பதையெல்லாம் அறிய முடியும். இதற்கு அச்செயலிகளிலையே வசதிகள் உள்ளன.  அதை போன்று நாம் அனுப்பும் மின்னஞ்சல்களுக்கும் இதுபோன்ற வசதி இருப்பின், மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதுபோன்ற வசதி எந்த மின்னஞ்சல் சேவை வழங்கும் நிறுவனத்திடமும் இல்லை. இந்த வசதியை நாம் ஜிமெயிலில் கூகுள் குரோம் உலாவியில் ஒரு நீட்சியின் துணைகொண்டு பெற முடியும்.

நீட்சியை குரோம் உலாவியில் இணைக்க சுட்டி


நீட்சியை குரோம் உலாவியில் இணைத்துகொள்ளவும். பின் ஒரு முறை குரோம் உலாவியை மறுதொடக்கம் செய்யவும். பின் உங்களுடைய ஜிமெயில் கணக்கில் உள்நுழையவும்.


உள்நுழைந்தவுடன் தோன்றும் சாளரப்பெட்டியில் ACTIVATE MAILTRACK என்னும் பொத்தானை அழுத்தவும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவானது MailTrack வசதியினை உங்களுடைய மின்னஞ்சலில் தொடங்க உங்களிடம் அனுமதி கேட்கும். நீங்கள் Accept பொத்தானை அழுத்தவும். அவ்வளவுதான் வேலை முடிந்தது. இனி நீங்கள் அனுப்பும் மின்னஞ்சல்கள் முறையாக கண்கானிக்கப்பட்டு அது ஒப்பன் செய்தால் அறிவிப்பு செய்தி வரும்.



மேலும் நீங்கள் அனுப்பிய மின்னஞ்சலுக்கு அருகே பச்சை நிற கோடு இருக்கும். அதன் அருகே சுட்டெலியை கொண்டு சென்றால், குறிப்பிட்ட மின்னஞ்சலின் தற்போதைய நிலையை அறிந்து கொள்ள முடியும்.

வலைதளங்களுக்கான அழிப்பான் - கூகுள் குரோம் நீட்சி

நாம் தினமும் பல்வேறு விதமான இணையதளங்களை பார்வையிடுகிறோம். அதில் பல இணையதளங்களில் முகம் சுழிக்க வைக்கும் பல செய்திகளையோ அல்லது விளம்பரங்களையோ பார்ப்போம். இவ்வாறு நாம் பார்க்கும் குறிப்பிட்ட ஒரு இணையத்தில் இருக்கும் வீடியோவினையோ அல்லது ஒரு செய்தியினை மட்டுமோ நீக்குவது என்பது சதாரண வழி இல்லை. வேண்டுமெனில் ஒரு குறிப்பிட்ட இணையதளத்தை வேண்டுமெனில் முழுவதுமாக முடக்க முடியும்.

சரி மேலே கூறியது போல ஒரு குறிப்பிட்ட தளத்தில் இருக்கும் சில பகுதியை மட்டும் நீக்க கூகுள் குரோம் உலாவியில் ஒரு நீட்சி உள்ளது. இதன் மூலம் எளிமையாக நீக்கி கொள்ள முடியும்.

நீட்சியை குரோம் உலாவியில் இணைக்க சுட்டி




சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று நீட்சியை குரோம் உலாவியில் இணைத்து கொள்ளவும். பின் ஒருமுறை கணினியை மறுதொடக்கம் செய்து விட்டு பின் குரோம் உலாவியினை ஒப்பன் செய்யவும்.


பின் அட்ரஸ் பாரின் அருகில் Page Eraser ஐகான் இருக்கும். அதனை கிளிக் செய்து பின் உங்களுக்கு தேவையில்லாத செய்திகளையோ அல்லது விளம்பரங்களையோ எளிதாக அளித்துக்கொள்ள முடியும்.


மேலே குறிப்பிட்டுள்ள படத்தில் Page eraser யை பயன்படுத்தி தலைப்பினை நீக்கியுள்ளேன். ஒருமுறை நீக்கிவிட்டால் அவ்வளவு தான் அது மீண்டும் வரவே வராது. அப்படி மீண்டும் நீக்கிய செய்திகளை வரச்செய்ய வேண்டுமெனில் Page Eraser ஐகான் மீது வலது கிளிக் செய்து தோன்று தேர்வில் Options என்பதை தெரிவு செய்ய வேண்டும்.


இதில் எவற்றையெல்லாம் Pageeraser துணைகொண்டு நீக்கியுள்ளோமோ அவை அனைத்தும் பட்டியலிடப்படும். அவற்றையெல்லாம் மீண்டும் வரச்செய்ய வேண்டுமெனில் குறிப்பிட்ட வலைதள முகவரியை மட்டும் நீக்கி விட்டால் போதுமானது. இப்போது மீண்டும் சென்று வலைதளத்தில் பார்த்தால் தற்போது அந்த செய்தி மற்றும் விளம்பரங்கள் வந்திருக்கும். 

Dailymotion தளத்தில் உள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்ய நெருப்புநரி நீட்சி

♠ Posted by Kumaresan Rajendran in ,
ஏதாவது ஒரு வீடியோ கோப்பு வேண்டுமெனில் நாம் முதலில் நாடுவது யூடுப் தளம் ஆகும். மேலும் ஒரு சில வீடியோக்கள் இந்த தளத்தில் கூட கிடைக்காது அதுபோன்ற வீடியோக்களும் மற்ற வீடியோ தளங்களில் கிடைக்கும் இதில் புகழ்பெற்ற தளம்தான் Dailymotion ஆகும். இந்த தளத்தில் தினமும் என்னற்ற வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறன. அன்றாடம் ஒளிபரப்பபடும் சின்னத்திரைகளின் உயிர்நாடியான சீரியல்களும் தினமும் இந்த தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறன. இவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது என்றால் அவ்வளவு எளிதான செயல் இல்லை. இந்த வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய நெருப்புநரி நீட்சி ஒன்று உதவி செய்கிறது.

 நீட்சிக்கான சுட்டி

முதலில் நெருப்புநரி உலாவியினை திறந்து கொள்ளவும் பின் சுட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள நீட்சியினை நெருப்புநரி உலாவியில் இணைத்துக்கொள்ளவும். 


பின் நெருப்புநரி உலாவியினை மறுதொடக்கம் செய்துகொண்டு, Dailymotion தளத்தில் உள்நுழையவும். 



பின் வீடியோக்களின் கீழ் தரவிறக்கம் செய்வதற்கான சுட்டி இருக்கும் அதை பயன்படுத்தி வீடியோக்களை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். Mp4 பார்மெட்டில் பதிவிறக்கி கொள்ள முடியும். தனித்தனி அளவுகளில் பதிவிறக்கி கொள்ள முடியும் என்பது குறிப்பிடதக்கது.

கூகுள்குரோம் உலாவியின் உதவியுடன் ஆப்பிஸ் கோப்புகளை பார்க்க

♠ Posted by Kumaresan Rajendran in ,


கூகுள்குரோம் உலாவியானது கூகுள் நிறுவனத்துடையது ஆகும். இந்த உலாவி உதவியுடன் இணைய பக்கங்களை மிக வேகமாக வலம்வர முடியும். மேலும் இந்த உலாவியில் பல்வேறு வசதிகள் உள்ளன. நீட்சியின் உதவியுடன் இந்த உலாவியில் பல்வேறு வசதிகளை பெற முடியும். அதிக பயன்பாட்டாளர்களை கொண்ட உலாவிகள் வரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த உலாவியின் உதவியுடன் ஆப்பிஸ் கோப்புகளான வேர்ட், எக்சல் மற்றும் பவர்பாயிண்ட் கோப்புகளை பார்வையிட முடியும். இதற்கு உலாவியுடன் ஒரு நீட்சியை இணைத்துக்கொள்ள வேண்டும்.

நீட்சியை தரவிறக்க சுட்டி 



சுட்டியில் குறிபிட்ட தளத்தை குரோம் உலாவியை பயன்படுத்தி திறக்கவும். பின் இந்த நீட்சியை குரோம் உலாவியில் இணைத்கொள்ளவும். 



இந்த நீட்சி குரோம் உலாவியில் இணைய சிறிது நேரம் ஆகும். 25.7 எம்.பி அளவுடையது ஆகும்.



இந்த நீட்சி குரோம் உலாவியில் முழுவதுமாக இணைத்த பின் குரோம் உலாவியில் இணைக்கப்பட்டுவிட்டதாக அறிவிப்பு செய்தி தோன்றும்.  


பின் ஒரு முறை குரோம் உலாவியை மறுதொடக்கம் செய்து கொண்டு பின் குரோம் உலாவியில் ஆப்பிஸ் கோப்புகளை திறக்கவும். இப்போது எளிதாக ஆப்பிஸ் கோப்புகளை திறக்க முடியும்.

Youtube வீடியோவினை விரும்பிய பார்மெட்டில் பதிவிறக்கம் செய்ய - நெருப்புநரி நீட்சி

♠ Posted by Kumaresan Rajendran in ,
Youtube வீடியோவினை பதிவிறக்கம் செய்ய மென்பொருள்கள் பல இருக்கிறன அவைகளை கொண்டு Youtube வீடியோவினை பதிவிறக்கம் செய்யும் போது நாம் அந்த குறிப்பிட்ட வீடியோவின் முகவரியை (URL) காப்பி செய்து அந்த Youtube டவுண்லோடர் மென்பொருளில் ஒட்ட வேண்டும். அப்போது மட்டுமே அந்த குறிப்பிட்ட வீடியோவினை பதிவிறக்கம் செய்ய முடியும். அதிலும் ஒரு சில வீடியோக்கள் பதிவிறக்கம் ஆகாமல் அடம் பிடிக்கும். 

இதற்கு பதிலாக Youtube வீடியோவினை காணும் போதே அதனை பதிவிறக்கம் செய்தால் எப்படி இருக்கும். அதற்கு நாம் அந்த குறிப்பிட்ட உலாவியில் சில மாற்றங்கள் செய்தால் மட்டுமே முடியும். நெருப்புநரி உலாவியில் Youtube வீடியோவினை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்று பார்ப்போம்.

இதற்கு முதலில்  உலாவியில் நீட்சியை இணைத்துக்கொள்ளவும். நீட்சியை தரவிறக்க சுட்டி 


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று Add to Firefox எனும் பொத்தானை அழுத்தவும். அழுத்தியவுடன் மேலே நீட்சியை பதிவிறக்க அனுமதி கேட்கும். Allow எனும் தேர்வினை கிளிக் செய்யவும்.


கிளிக் செய்தவுடன் தோன்றும் விண்டோவில் Install Now என்னும் பொத்தானை அழுத்தவும்.


உங்களுடைய நெருப்புநரி உலாவியில் நீட்சி நிறுவப்பட்டு பின் நெருப்புநரி உலாவியை மறுதொடக்கம் செய்ய அனுமதி கேட்கும்.


அனுமதித்தவுடன் நெருப்புநரி உலாவி மறுதொடக்கம் ஆகும். பின் நெருப்புநரி உலாவியில் Youtube தளம் சென்று வீடியோவினை காணுங்கள் அப்போது அந்த குறிப்பிட்ட வீடியோவின் கீழ் பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு இருக்கும். அதை பயன்படுத்தி வீடியோவினை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.


நீங்கள் விரும்பும் பார்மெட்களில் வீடியோவை எளிதாக தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். இந்த நீட்சி மிகவும் பயனுள்ள நீட்சியாகும்.

Youtube வீடியோக்களின் பாடல் வரிகளை பெற

உலகின் புகழ்பெற்ற வீடியோ தளமான யூடுப் தளத்தில் தினமும் பல்லாயிர கனக்கான வீடியோக்கள் பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்யப்படுகிறது. ஒரு சிலர் வீடியோவை பதிவிறக்கம் செய்யும் முன்னரே அதன் வரிகளை கேட்க விரும்புவர்கள். ஆனால் அவர்களுடைய கணினியில் ஸ்பீக்கர்/ஹெட்செட் போன்ற ஆடியோ சாதனங்கள் இருக்காது எனவே குறிப்பிட்ட வீடிவோவை முழுமையாக பதிவிறக்கம் செய்து அதனை வேறொரு கணினிக்கு மாற்றம் செய்த பின்னரே அதனை கேட்க முடியும். இதற்கு பதிலாக யூடுப் தளத்தில் இருந்து வீடியோவை பதிவிறக்கம் செய்யும் போதே அதன் வரிகளை எழுத்து வடிவில் பெற முடியும்.

இதற்காக நாம் எந்த மூன்றாம் தர மென்பொருளையும் நாடி செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நேரடியாக யூடுப் தளத்திலேயே பெற முடியும்.  இதற்கு நாம் பயன்படுத்தும் உலாவியில் நீட்சியை இணைத்துகொண்டால் போதுமானது. 

இந்த பாடல் வரிக்கான நீட்சியானது நெருப்புநரி, குரோம், இண்டர்நெட் எக்ஸ்புளோரர், சபாரி மற்றும் ஒபேரா உலாவிகளுக்கு மட்டும் உள்ளது.


சுட்டியில் குறிப்பிட்ட இணைப்பினை பயன்படுத்தி உலாவியில் நீட்சியை பதிந்து கொள்ளவும். பின் ஒரு முறை உலாவியை மறுதொடக்கம் செய்து கொண்டு பின் யூடுப் தளத்தை ஒப்பன் செய்து குறிப்பிட்ட வீடியோவை ஒப்பன் செய்யவும். அப்போது அந்த வீடியோக்கான பாடல் வரி தோன்றும். மேலும் இந்த வசதியை நமது விருப்பபடி மற்றியமைத்து கொள்ளவும் முடியும்.


அமைப்பினை பயன்படுத்தி விரும்பியவாறு இந்த பாடல்வரி நீட்சியை மாற்றியமைத்துக்கொள்ள முடியும்.

கூகுள்+ உள்ள படம் மற்றும் வீடியோக்களை தரவிறக்க குரோம் நீட்சி

முகநூலுக்கு போட்டியாக கூகுள் நிறுவனத்தால் ஆரபிக்கப்பட்டதே கூகுள்+ ஆகும்.  இதன் மூலம் படங்கள், வீடியோக்கள் மற்றும் எழுத்து வடிவிலான தகவல்கள் போன்றவற்றை நம் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும். மேலும் இதில் பல்வேறு வசதிகள் உள்ளன. இவ்வாறு நம் நண்பர்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல் நமக்கு பிடித்தவையாக இருக்கும். அதிலும் ஒரு சில வீடியோக்கள் அரிதானவையாக இருக்கும். அவற்றை நம்மால் பார்க்க மட்டுமே முடியும். ஆனால் அவற்றை நம்மால் தரவிறக்கி பயன்படுத்த முடியாது. இவ்வாறு கூகுள்+ உள்ள படம் மற்றும் வீடியோக்களை தரவிறக்க குரோம் நீட்சி ஒன்று உள்ளது இதன் மூலம் எளிமையாக வீடியோ மற்றும் படங்களை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். 

குகூள் குரோம் நீட்சியினை தரவிறக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட நீட்சியை இணையத்தின் உதவியுடன் குரோம் உலவியில் இணைத்துக்கொள்ளவும். பின் ஒருமுறை உலவியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். உங்களுடைய கூகுள் கணக்கை திறக்கவும். பின் உங்களுடைய கூகுள்+ யை ஒப்பன் செய்யவும். 


பின் படம் மற்றும் வீடியோவை  தரவிறக்கம் செய்வதற்கான ஐகான்கள் ஒவ்வொரு படம் மற்றும் வீடியோவிற்கு கீழே இருக்கும், அதை பயன்படுத்தி படம் மற்றும் வீடியோவை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.