தமிழில் கணினி செய்திகள்

ஆன்லைன் ஷாப்பிங்கில் பொருட்களை சரியான விலைகொடுத்து வாங்குவது எப்படி - Buyhatke

இன்றைய காலகட்டத்தில் நாம் எந்த பொருட்களை வாங்க நினைத்தாலும் நாம் முதலில் செல்வது ஆன்லைன் வர்த்தக தளங்களுக்குதான் அதிலும் மிக முக்கியமாக எலெக்ட்ரானிக் பொடுட்களான மொபைல், கணினி போன்ற பொருட்கள் அதிகமாக வாங்கப்படுகிறது இதற்கு மிக முக்கியமான காரணம் நாம் வாங்கும் பொருட்கள் சரியில்லை என்றாலோ, திருப்தி அளிக்கவில்லை என்றாலோ அதனை திருப்பி கொடுத்துவிட்டு வேறு மாற்று பொருளையோ  அல்லது பணத்தினையோ திரும்ப பெற்றுக்கொள்ள முடியும். இவ்வாறு நாம் வாங்கும் பொருட்களை நாம் சரியான விலை கொடுத்துதான் வாங்குகின்றோமா என்றால் கண்டிப்பாக இல்லை என்றுதான் சொல்வேன். ஏனென்றால் நாம் ஆன்லைன் மூலமாக வாங்கும் எந்த பொருளுமே ஒரே விலையில் இருப்பதில்லை என்பதுதான் உண்மை. நாளுக்குநாள் பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்பட்டு கொண்டே தான் இருக்கும். மேலும் தள்ளுபடி என்று சொல்லி விற்க்கப்படும் பொருட்களுமே அதிக இலாபத்தில் விற்கப்படும்.

இதுபோன்ற பிரச்சினையில் இருந்து விடுபட Buyhatke என்னும் மென்பொருள் பன்படுகிறது. இந்த மென்பொருள் கூகுள் குரோம் நீட்சியாகவும், Windows, Android, IOS போன்ற மொபைல் செயலிகளாகவும் கிடைக்கிறது. இது இலவச மென்பொருள் ஆகும்.

கூகுள் குரோம் நீட்சி சுட்டி

Windows மென்பொருள் சுட்டி

Android மென்பொருள் சுட்டி

IOS மென்பொருள் சுட்டிமேலே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை பயன்படுத்தி கூகுள் குரோம் உலாவியில் நீட்சியை நிறுவிக்கொள்ளவும். இந்த நீட்சியின் மொபைல் அப்ளிகேஷன் சுட்டிகளை மேலே கொடுத்துள்ளேன் அதனை பயன்படுத்தி மொபைல் போன்களின் Buyhatke அப்ளிகேஷனை நிறுவிக்கொள்ளவும். இந்த மென்பொருள் Flipkart, Amazon, Myntra, Snapdeal போன்ற தளங்களில் மிகச்சரியாக வேலை செய்கிறது.

உதாரணத்திற்கு Flipkart தளத்தில் எவ்வாறு இந்த Buyhatke நீட்சியை பயன்படுத்துவது என்று பார்ப்போம். 

Redmi Note 4 னை எடுத்து கொண்டால் இதன் தற்போதைய விலை ரூபாய் 10,999 ஆகும். இந்த விலை தான் மிக குறைந்த விலையா என்று பார்ப்பதற்கு Buyhatke நீட்சி Graph வசதியினை அளிக்கிறது இதன் மூலம் ஒவ்வொரு நாளும் எவ்வளவு தொகைக்கு விற்க்கப்பட்டது என்பதனை மிகதெளிவாக தெரிந்து கொள்ள முடியும். 


மேலும் இந்த நீட்சியானது பல்வேறு வசதிகளை அளிக்கிறது. Watch Price என்னும் ஆப்ஷன் மூலமாக Alert வசதியினை நீங்கள் பெற முடியும். ஒரு பொருளின் விலையினை குறிப்பிட்டு அந்த பொருளின் விலை குறையும் போது அதனை Alert மூலமாக பெற முடியும். பொருட்களை வாங்கும் போது கூப்பன் உள்ளதா என்றும் சரியான கூப்பன்கள் வரிசைபடுத்தப்பட்டு இருக்கும். இதனையும் பயன்படுத்தி பொருட்களை இன்னும் குறைவாக வாங்கி கொள்ள முடியும்.


இதே பொருள் மற்ற வர்த்தக தளங்களில் எவ்வளவு தொகைக்கு விற்க்கப்படுகிறது என்பதையும் ஒரே இடத்தில் இருந்து கொண்டே தெரிந்து கொள்ள முடியும். இதன் மூலமாக மற்ற தளங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

Youtube சேனல் முகவரி :- 


இந்த பதிவின் வீடியோ பதிவு:- 


1 comments:

Smartprix, mysmartprice.com iruku

Post a Comment