தமிழில் கணினி செய்திகள்

விண்டோஸ் 10 Administrator கணக்கினை எனேபிள் செய்வது எப்படி?

♠ Posted by Kumaresan Rajendran in ,, at September 14, 2017
விண்டோஸ் 10 இயங்குதளத்தை நிறுவியவுடன் சில முக்கியமான செயல்களை நாம் செய்ய வேண்டும். அதில் முதலாவதாக நாம் Administrator கணக்கினை எனேபிள் செய்வது ஆகும். இதன் மூலம் என்ன பயன் உள்ளது என்று நீங்கள் கேட்கலாம். விண்டோஸ் தொடர்புடைய பைல்களில் மாற்றம் செய்ய இந்த கணக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


முதலில் விண்டோஸ் பட்டன் மீது வலது கிளிக் செய்து தோன்றும் விண்டோவில்  Command Prompt (Admin) என்பதை தேர்வு செய்யவும்.


அடுத்தாக தோன்றும் விண்டோவில் “ net user administrator /active:yes ” என்று டைப் செய்து என்டர் பட்டனை அழுத்தவும். ” The command completed successfully ” என்ற அறிவிப்பினை நீங்கள் கிடைக்க பெறுவீர்கள்.

  
இந்த முறையினை பயன்படுத்தி எளிமையாக விண்டோஸ் 10 அட்மின் கணக்கினை எனேபிள் செய்ய முடியும்.

Youtube சேனல் முகவரி :- 


இந்த பதிவின் வீடியோ பதிவு:- 


0 Comments:

Post a Comment