தமிழில் கணினி செய்திகள்

விண்டோஸ் 10 இயங்குதளத்தில் அப்டேட்டினை டிசேபிள் செய்வது எப்படி?

♠ Posted by Kumaresan Rajendran in , at September 16, 2017
இதற்கு முந்தைய விண்டோஸ் இயங்குதளங்களில் விண்டோஸ் அப்டேட்டினை மிகவும் எளிமையாக டிசேபிள் செய்து கொள்ள முடியும். ஆனால் விண்டோஸ் 10 இயங்குதளத்தில் விண்டோஸ் அப்டேட்டினை டிசேபிள் செய்வது என்பது அவ்வளவு எளிதான செயல் இல்லை. இதற்கு நாம் விண்டோஸ் 10 இயங்குதளத்தில் இரண்டு இடத்தில் மாற்றங்களை செய்ய வேண்டும். 


1) முதலில் கம்ப்யூட்டர் மீது வலது கிளிக் செய்து தோன்றும் பாப்அப் விண்டோவில் Manage என்பதை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் தோன்றும் விண்டோவில் Services and Applications என்பதை  கிளிக் செய்யவும். அடுத்து Services என்பதை கிளிக் செய்யவும். 



கிளிக் செய்தவுடன் தோன்றும் விண்டோவில் Windows Update என்பதை டபுள் கிளிக் செய்யவும். அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Disabled என்பதை தேர்வு செய்து OK பட்டனை அழுத்தவும்.



2) அடுத்து Windows + R பட்டனை ஒரு சேர அழுத்தி தோன்றும் ரன் விண்டோவில் gpedit.msc என்று உள்ளிட்டு OK பட்டனை அழுத்தவும். 


அடுத்து தோன்றும் விண்டோவில் Computer Configuration > Administrative Templates > Windows Components > Windows Update என்று வரிசையாக தேர்வு செய்து Configure Automatic Updates என்பதை டபுள் கிளிக் செய்யவும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Disabled என்பதை தேர்வு செய்து OK பட்டனை அழுத்தவும்.


இந்த இரண்டு மாற்றங்களையும் உங்கள் கணினியில் செய்த பிறகு உங்களது கணினியை மறுதொடக்கம் (Restart) செய்து கொள்ளவும்.

Youtube சேனல் முகவரி :- 


இந்த பதிவின் வீடியோ பதிவு:- 


4 Comments:

எதுக்கு அப்டேட்டினை டிசெபிள் செய்யவேண்டும்?

//ப.கந்தசாமி

மிக குறைந்த அளவு இணைய அளவு இருக்கும் போது விண்டோஸ் அப்டேட் ஆகினால் உங்களுடைய இணைய அளவு நீங்கள் நினைக்கும் செயல்களுக்கு பயன்படுத்த முடியாமல் போகும் நிலை வரும்.

நான் இந்த பிரச்சினையை சந்தித்தேன் அதனால் தான் இந்த பதிவினை இட்டேன்.

I have been using this app Virtual Families 2 Mod Apk : and downloaded and playing it regularly.

Post a Comment