கோப்புகளை இரகசியமாக பூட்டி வைக்கவும், முக்கியமான சில தகவல்களை பாதுகாத்து கொள்வதற்கும், விண்டோஸ் இயங்குதளத்திற்கு என பல்வேறு மென்பொருள் உள்ளன. அதில் ஒன்றுதான் SecretFolder .
மென்பொருளை தரவிறக்க சுட்டி
மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். மென்பொருளை நிறுவும் போதே கடவுச்சொல் கேட்கும் அதனை உள்ளிட்டு கொள்ளவும். பின் இந்த மென்பொருளை ஒப்பன் செய்து Add பொத்தானை அழுத்தி எந்தெந்த கோப்புகளை லாக் செய்ய வேண்டுமோ அதனை தெரிவு செய்யவும். பின் Lock என்ற பொத்தானை அழுத்தவும். நீங்கள் தெரிவு செய்த கோப்புகள் லாக் செய்யப்பட்டு விடும்.
மீண்டும் லாக் செய்த கோப்பினை அன்லாக் செய்ய, SecretFolder அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் எந்தெந்த கோப்புகளை அன்லாக் செய்ய வேண்டுமோ அதனை தெரிவு செய்து பின் Unlock பொத்தானை அழுத்தவும்.
நீங்கள் SecretFolder ன் கடவுச்சொல்லை மாற்றிக்கொள்ளவும் முடியும். இதற்கு Preferences என்னும் பொத்தானை அழுத்தவும். தோன்றும் விண்டோவில் Change password என்னும் பொத்தானை அழுத்தி கடவுச்சொல்லை மாற்றியமைத்துக்கொள்ள முடியும்.
கோப்புகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள இந்த மென்பொருள் கண்டிப்பாக உதவும்.
1 Comments:
சன் டிவி, விஜய் டிவி உட்பட 50க்கும் மேற்பட்ட தமிழ் சனல்களையும் 5க்கும் மேற்பட்ட கிரிக்கட் சனல்களையும் அண்ட்ராய்டு சாதனத்தில் வாயிலாக நேரடியாக HD வடிவில் இலவசமாக கண்டுகளிக்க
http://www.importmirror.com/2015/04/my-tamil-tv.html
Post a Comment