தமிழில் கணினி செய்திகள்

பைல்களின் அளவை குறைக்க / கோப்புகளை (Folder) ஜிப் மற்றும் அன்ஜிப் செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in ,,, at April 07, 2015
மிகப்பெரிய அளவுடைய கோப்புகளை மின்னஞ்சல் அனுப்பவோ அல்லது தனித்தனி பைல்களை ஒன்று சேர்க்கவோ நாம் அதனை கம்ப்ரஸ் செய்து ஒரே கோப்பாக மாற்றுவோம். விண்டோஸ் இயங்குதளத்தில் கோப்புகளை கம்ப்ரஸ் மற்றும் அன்கம்ப்ரஸ் செய்ய Ashampoo-ZIP-Free என்ற மென்பொருள் வழிவகை செய்கிறது.


மென்பொருளை தரவிறக்க சுட்டி 

மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் வழக்கம் போல் நாம் ஜிப் பைல்களை எப்படி உருவாக்குவோமோ அதே முறையினை பின்பற்றி Ashampoo-ZIP-Free  னை பயன்படுத்தி உருவாக்கி கொள்ள முடியும். 

ஒரு கோப்பறையின் மீது வலது கீளிக் செய்து தோன்றும் சாளரப்பெட்டியில் Ashampoo-ZIP-Free னுடைய ஆப்ஷன்கள் தோன்றும் அதை பயன்படுத்தி எளிமையாக உருவாக்கி கொள்ள முடியும்.


அதே போல அன்ஜிப் செய்து கொள்ளவும் முடியும். ஜிப் செய்யப்பட்ட கோப்பினை வலது கிளிக் செய்து தோன்றும் சாளரப்பெட்டியில் Ashampoo-ZIP-Free னுடைய ஆப்ஷன்கள் தோன்றும் அதை பயன்படுத்தி அன்ஜிப் செய்து கொள்ளலாம். 

மேலும் ஜிப் செய்யப்பட்ட பைலை டபுள் கிளிக் செய்து ஒப்பன் செய்யவும். தோன்றும் விண்டோவில் Extract பொத்தானை கிளிக் செய்து, எந்த இடத்தில் பைல்களை சேமிக்க வேண்டும் என்பதை தெரிவு செய்து அன்ஜிப் செய்து கொள்ளமுடியும்.



இந்த மென்பொருள் அனைத்து விதமான ஜிப் பார்மெட்களையும் ஆதரிக்க கூடிய வகையில் உள்ளது. ZIP, CAB, 7-ZIP, LHA, TAR (TAR,TAR.XZ,TAR.BZ2 and TAR.GZ)




இந்த மென்பொருள் விண்டோஸ்7, விண்டோஸ் 8.1 மற்றும் விண்டோஸ் 10 ஆகிய இயங்குதளங்களில் இயங்க கூடியது ஆகும்.

5 Comments:

வணக்கம் குமரேசன்,
நலம் நலமறிய ஆவல். கிட்டத்தட்ட ஒரு வருடமாகி விட்டது.
மிகவும் உபயோகமான மென்பொருள். வாழ்த்துக்கள்.

ரவிசங்கர் said //

நீங்கள் கூறியது சரிதான் நண்பரே, ஒரு வருடத்திற்கு பின்பு இப்போதுதான் பதிவு எழுதுகிறேன், வேலைபழுவின் காரணமாக இவ்வளவு நாள் எழுதவில்லை, இனி தொடர்ந்து எழுத முயற்ச்சி செய்கிறேன்.

வருகைதந்து பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே.

பயனுள்ள தகவலுக்கு நன்றி

//sudalaimuthu said

நன்றி நண்பரே,,

Sir useful information.pl suggest us how to install whatsup with computer

Post a Comment