♠ Posted by Kumaresan Rajendran in Freewares,Usb Drives,WINDOWS,மீட்டெடுப்பு,வன்தட்டு at April 06, 2015
தகவல்களை சேமித்து வைக்கவோ அல்லது தவல்களை பரிமாறிக்கொள்ளவோ நாம் முன்பு ப்ளாப்பி, குறுவட்டுகளை பயன்படுத்தி வந்தோம். ஆனால் தற்போது பெண்ட்ரைவ், மெமரிகார்ட், யூஎஸ்பி-ஹார்ட்டிஸ்குகளை பயன்படுத்தி வருகிறோம் அவ்வாறு தகவல் பரிமாற்றம் செய்யும் போது , ஒரு சில கோப்புகளை இழக்க நேரிடும், மேலும் மெமரி கார்டினை முறையாக கணினியில் இருந்து எஜெக்ட் செய்யமால் , கணினியில் இருந்து உருவும் போதும் இதுபோன்று கோப்புகள் இழப்பு அல்லது மெமரிகார்டினை முழுவதுமாக இழக்க நேரிடும்.
பெண்ட்ரைவ் மற்றும் வன்தட்டினை பார்மெட் செய்யும் பொழுதும் இதுபோன்ற பிரச்சினைகள் நிகழும். இவ்வாறு இழந்த கோப்புகளை மீட்டெடுக்க ஒரு மென்பொருள் உதவிசெய்கிறது. அதன் மூலம் எளிதாக இழந்த கோப்புகளை மீட்டெடுக்க முடியும்.
மென்பொருளை தரவிறக்க சுட்டி
மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த டிஸ்க் ட்ரில் மென்பொருளை ஒப்பன் செய்யவும்.
உங்களுடைய வன்தட்டில் பிரிக்கப்பட்ட தனித்தனி அடைவுகள் காட்டும். அதற்கு நேரே உள்ள Recover என்னும் பொத்தானை அழுத்தவும்.
அடுத்து இழந்த தகவல்கள் வகை வாரியாக பட்டியலிடப்படும் அதனை தெரிவு செய்து பின், எந்த இடத்தில் கோப்புகளை சேமிக்க வேண்டுமோ அந்த இடத்தினை தெரிவு செய்து பின் Recover என்ற பொத்தானை அழுத்தவும். தவறுதலாக டெலிட் செய்த கோப்புகளையும் மீட்டெடுக்க முடியும்.
அதேபோன்று கணினியுடன் இணைக்கப்பட்ட யுஎஸ்பி ட்ரைவுகளும் பட்டியலிடப்படும் அதனை தெரிவு செய்தும் இழந்த கோப்புகளை மீட்டெடுத்துக்கொள்ள முடியும். கோப்புகள் அனைத்தையும் .dmg பைல் பார்மெட்டில் நகல் எடுத்துக்கொள்ள முடியும்.
இந்த மென்பொருள் இழந்த தகவல்களை மீட்டெடுக்க மிகவும் ஏற்றது. மேலும் இந்த மென்பொருள் கணினி வன்தட்டு பார்மெட்களான FAT , exFAT, NTFS, HFS , EXT2, EXT3 மற்றும் EXT4 பார்மெட்களை ஆதரிக்க கூடியது ஆகும்.
டிஸ்க் ட்ரில் மென்பொருள் விண்டோஸ் 7, விண்டோஸ் 8.1 மற்றும் விண்டோஸின் புதிய இயங்குதளமான விண்டோஸ் 10 லும் இயங்க கூடியது ஆகும்.
0 Comments:
Post a Comment