தமிழில் கணினி செய்திகள்

இணையம் இல்லாமல் கணினிகளுக்கிடையே தகவல்களை பரிமாறிக்கொள்ள

♠ Posted by Kumaresan R in , at April 06, 2015
தகவல் பரிமாற்றம் என்பது அத்தியாவசியமான ஒன்று. மொபைல் போனை எடுத்துக்கொண்டாலும் சரி கணினியை எடுத்துக்கொண்டாலும் சரி தகவல் பரிமாற்றம் செய்ய பல்வேறு வழிமுறைகள் உள்ளன. மொபைல் சாதனங்களுக்கு இடையே பரிமாறிக்கொள்ள புளூட்டுத், வைபை போன்றவைகளும் தற்போது இணைய இணைப்புடன் தகவல்களை பரிமாறிக்கொள்ள  வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற பலவிதமான மென்பொருள்கள் சந்தையில் கிடைகிறன.  இதைப் போன்று கணினிகளுக்கிடையே தகவல்களை பரிமாறிக்கொள்ளவும் பல்வேறு வழிகள் உள்ளன. நெட்வொர்க் சேரிங் மூலமாக தகவல்களை கணினிகளுக்கிடையே பரிமாறிக்கொள்ள முடியும். இவ்வாறு பரிமாற்றம் செய்யும் நேர விரயம் அதிகம் ஆகும். கணினிகளுக்கிடையே தகவல்களை பரிமாற்றிக்கொள்ள அற்புதமான மென்பொருள் உள்ளது. 

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருள் விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களில் இயங்க கூடியது ஆகும். மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த ஐபிமெஜேஞ்சர் மென்பொருளை ஒப்பன் செய்யவும். இந்த மெபொருள் நெட்வொர்க்கில் இணைந்துள்ள கணினியில் ஐபிமெஜேஞ்சர் நிறுவப்பட்டு தற்போது ஒப்பன் செய்யப்பட்டு இருந்தால் பட்டியலிட்டு காட்டும்.  நீங்கள் தகவல் அனுப்ப நினைக்கும் கணினியிலும் ஐபிமெஜேஞ்சர்  மென்பொருள் நிறுவப்பட்டு இருக்க  வேண்டும்.

சர்வர், கிளையன்ட் என தனித்தனி மென்பொருள் இல்லை ஒரே ஒரு மென்பொருள் மட்டுமே இதனை அனைத்து கணினியிலும் நிறுவி பயன்படுத்திக்கொள்ள முடியும். 

எந்த கணினிக்கு நீங்கள் தகவல்களை பரிமாற நினைக்கிறீர்களோ அந்த கணினியை தெரிவு செய்து பின் சதாரணமாக எழுத்துகளை மட்டும் தட்டச்சு செய்து அனுப்ப விரும்பினால். தட்டச்சு செய்து அனுப்பவும். கூடுதலாக பைல்களை அனுப்ப விரும்பினால் அதனை ட்ராக் அன்ட் ட்ராப் செய்து பின் அனுப்பவும். ஒரு முழு கோப்பறையையும் (Folder) அனுப்ப முடியும். கோப்புகளை தனித்தனியாக தெரிவு செய்தும் அனுப்ப முடியும்.


புதியதாக ஏதும் செய்திகள் வந்தால் டாஸ்க்பாரில் அறிவிப்புகள் காட்டும்.வந்த அறிப்பினை கிளிக் செய்தால் மேலே இருக்கும் விண்டோ போன்று வரும். அதில் Open என்னும் பொத்தானை அழுத்தி செய்தியை பெற்றுக்கொள்ளவும். கோப்புகள் ஏதும் வந்திருந்தால் அதனை தெரிவு செய்து சேமித்துக்கொள்ளவும். நீங்கள் அனுப்பிய செய்தி திறக்கப்படும் போது உங்களுக்கும் அறிவிப்பு செய்தி வரும்.


இந்த மென்பொருள் மூலம் கணினிகளுக்கிடையே தகவல்களை எளிதாகவும், மிக விரைவாகவும் பரிமாறிக்கொள்ள முடியும். அலுவலகங்கள் மற்றும் கல்லூரிகளில் இந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

7 comments:

very useful super nice post thank you.....

பயனுள்ள மென்பொருள் நன்றி

அருமையான பதிவு! பயனுள்ள மென்பொருள்! :-)

Srinivasan V MEG said//
stalin wesley said//
மரணத்தின் வாயிலை நோக்கி! said//
பின்னூட்டம் அளித்தமைக்கு நன்றி நண்பர்களே.

அருமையான பதிவு நன்றி

//Iqrah News said

நன்றி நண்பரே,,

Post a Comment