தமிழில் கணினி செய்திகள்

ஒரே நேரத்தில் அனைத்து சமூக வலைதளங்களிலும் பயனர்பெயரை தெரிவு செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in , at April 23, 2015
சமூக வலைதளங்களின் வருகையும் செயல்பாடும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இணையத்தை பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் சமூக வலைதளங்களிலும் உலாவுவது அதிகம். ஒரு பயனர் ஒரே ஒரு சமூக வலைதளத்தில் மட்டும் கணக்கு வைத்துகொண்டு இருப்பார் என்று கூற முடியாது. பல சமூக வலைதளங்களில் கணக்கு வைத்திருக்கும் போது ஒவ்வொரு தளத்திலும் ஒரு பயனர் பெயர் என்றால், கண்டிப்பாக நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. 

ஒரே பயனர் பெயரை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும். இவ்வாறு குறிப்பிட்ட ஒரு பயனர்பெயரை மட்டும் பயன்படுத்தும் போது தனியொரு அடையாளம் கிடைக்கும். மேலும் நம்முடைய நண்பர்களும் எளிதாக நம்மை கண்டறிய முடியும். 

அனைத்து சமூக வலைதளங்களிலும் குறிப்பிட்ட பயனர்பெயர் இருக்கிறதா என்று தனித்தனியாக தேடிச்சென்றால் கண்டிப்பாக அது தோல்வியில் தான் முடியும். இதற்கு என்று ஒரு தளம் உள்ளது இந்த தளத்தின் மூலமாக 150+ மேற்பட்ட சமூக வலைதளங்களில் உங்கள் பெயர் பயனர்பெயராக தெரிவு செய்ய முடியுமா என்பதை எளிதாக அறிந்து கொள்ள முடியும். எந்தெந்த சமூக வலைதளங்களில் பெயர் இருக்கிறதோ அவை பச்சை நிறமிட்டு Available என்றும். பயனர்பெயர் இல்லாத தளங்களில் வெளிர் சிகப்பு நிறமிட்டு taken என்றும் இருக்கும். இந்த வசதியை பயன்படுத்தி குறிப்பிட்ட பயனர்பெயரை அனைத்து சமூக வலைதளங்களிலும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.


தளத்திற்கான சுட்டி

3 Comments:

//stalin wesley said

நன்றி நண்பரே,,


நன்றி நண்பரே,,

Post a Comment